Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர்     18.08.2012

புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

சேலம்: சேலம் மாநகராட்சி புது பஸ் ஸ்டாண்டில், நேற்று ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.சேலம் மாநகராட்சி புது பஸ் ஸ்டாண்டில், 50க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து, பழக்கடை, துணிக்கடை, கம்மங்கூழ் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். மாநகராட்சியில் அனுமதி பெற்று, புது பஸ் ஸ்டாண்டில் கடை வைத்திருப்பவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.

நேற்று சூரமங்கலம் உதவிபொறியாளர் செந்தில், உதவி வருவாய் ஆய்வாளர் வசந்த் உள்ளிட்டோர், மாநகராட்சி வாகனங்களில் சென்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். கடைகளை அகற்ற, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர். புது பஸ் ஸ்டாண்டில், மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படுவதை தடுக்க, மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Last Updated on Saturday, 18 August 2012 06:12
 

ஆக்கிரமிப்பு: குரும்பலூர் பேரூராட்சியில் 38 வீடுகள் இடிப்பு

Print PDF

தினமணி             17.08.2012

ஆக்கிரமிப்பு: குரும்பலூர் பேரூராட்சியில் 38 வீடுகள் இடிப்பு

பெரம்பலூர், ஆக. 16: பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் தெப்பக்குளம், மருதையான் குட்டை ஆகிய நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 38 வீடுகள் வியாழக்கிழமை இடிக்கப்பட்டன.இந்தப் பகுதிகளில் ஆக்கிரமித்து குடியிருந்துவந்த 38 குடும்பத்தினரை அகற்ற மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது அண்மையில் உத்தரவிட்டார்.இதன்பேரில், பேரூராட்சித் தலைவர் என். பாப்பம்மாள், துணைத் தலைவர் செந்தில்குமார், வட்டாட்சியர் பவனந்தி, செயல் அலுவலர் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் கவிதா ஆகியோர் அரசு நிலங்களை ஆக்கிரமித்திருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், அவர்களுக்கு களம்பட்டியில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் தலா ஒன்றரை சென்ட் இடம் வழங்க முடிவு செய்யப்பட்டு, குலுக்கல் முறையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து, 38 குடும்பத்தினரும் அரசு வழங்கிய இடத்துக்கு குடியேறினர்.

இந்த நிலையில், ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 38 குடிசைகளும் அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

Last Updated on Friday, 17 August 2012 10:50
 

குரும்பலூர் டவுன் பஞ்.,ல் அரசு நிலம் ஆக்ரமிப்பு: 38 வீடு இடிப்பு

Print PDF

தினமலர்              17.08.2012

குரும்பலூர் டவுன் பஞ்.,ல் அரசு நிலம் ஆக்ரமிப்பு: 38 வீடு இடிப்பு

பெரம்பலூர்: குரும்பலூரில் உள்ள தெப்பக்குளம் மற்றும் மருதையான் குட்டை ஆகிய நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட 38 வீடுகள் நேற்று இடிக்கப்பட்டன.நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் தெப்பக்குளம் மற்றும் மருதையான் குட்டை ஆகிய நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்ரமிப்பு செய்து குடியிருந்து வந்த 38 குடும்பத்தினரை அகற்ற கலெக்டர் தரேஷ்அஹமது உத்தரவிட்டார்.

இதன்பேரில், டவுன் பஞ்சாயத்து தலைவர் பாப்பம்மாள், துணை தலைவர் செந்தில்குமார், தாசில்தார் பவனந்தி, செயல் அலுவலர் ஆறுமுகம், ஆர்.ஐ., கவிதா ஆகியோர் ஆக்கிரமிப்பு தாரர்களிடம் சமரச பேச்சு நடத்தினர்.

அந்த இடத்திற்கு பதிலாக களம்பட்டியில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் தலா ஒன்றரை சென்ட் இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் குலுக்கல் முறையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து ஆக்ரமிப்புதாரர்கள் அரசு வழங்கிய இடத்திற்கு குடியேறினர்.இதையடுத்து தாசில்தார் பவனந்தி, செயல் அலுவலர் ஆறுமுகம், ஆர்.ஐ., கவிதா ஆகியோர் முன்னிலையில் நேற்று நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த 38 குடிசை வீடுகள் ஜே.சி.பி., மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

 


Page 34 of 204