Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முதல்-அமைச்சர் தலைமையில் கலைஞர் காப்பீட்டு திட்டம் நாளை தொடக்கம்

Print PDF

மாலை மலர் 22.07.2009

முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் கலைஞர் காப்பீட்டு திட்டம் நாளை தொடக்கம்: குலாம் நபி ஆசாத் தொடங்கி வைக்கிறார்

சென்னை, ஜூலை. 22-

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம்" நாளை தொடங்கப்படுகிறது.

இதயம், கர்ப்பப்பை, மூளை, குடல், சிறுநீரகம் போன்றவற்றுக்கான அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் களுக்கு ஏழை, எளிய குடும் பத்தினர் ரூ.1 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை வசதி பெறும் புதிய திட்டம் முதல்-அமைச் சர் கருணாநிதியால் உருவாக் கப்பட்டுள்ளது. வருடம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள். இதில்பயன் பெறலாம். சிகிச்சை செலவு இன்சூரன்சு நிறுவனம் மூலம் வழங்கப்படும்.

ஒரு கோடி குடும்பங்களில் மொத்தம் 4 கோடி பேர் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கு "உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை "ஸ்டார் கெல்த்" என்ற இன்சூரன்சு நிறுவனம் மூலம் செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான "பிரிமியம்" தொகையை தமிழக அரசு வழங்குகிறது. இதற்கு நடப்பு ஆண்டில் 517 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

"உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம்" தொடக்க விழா நாளை நடைபெறு கிறது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும். விழாவுக்கு முதல்-அமைச் சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.

மத்திய மக்கள் நல்வாழ் வுத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். விழாவில், அமைச்சர் அன்பழகன், துணை முதல்-அமைச்சர் மு.. ஸ்டாலின், மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், காந்தி செல்வன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி, அரசு தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, அப்பல்லோ மருத்துவ மனை தலைவர் பிரதாப் சந்தர்ரெட்டி, ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக இருதய சிகிச்சை மையத் தலைவர் மற்றும் இயக்குனர் தணிகாசலம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

முன்னதாக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வரவேற்கிறார். மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் சுப்புராஜ் விளக்க உரையாற்றுகிறார். முடிவில் மாநில நல்வாழ்வு சங்க குழும இயக்குனர் கிரிஜா வைத்தியநாதன் நன்றி கூறுகிறார்.