Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

6 கோடி பெண்களுக்கு கல்வியறிவு திட்டம்: பிரதமர் மன்மோகன் சிங்

Print PDF

தினமணி 09.09.2009

6 கோடி பெண்களுக்கு கல்வியறிவு திட்டம்: பிரதமர் மன்மோகன் சிங்

புது தில்லி, செப். 8: 6 கோடிப் பெண்கள் கல்வியறிவு பெறும் வகையில் "எழுத்தறிவு பெற்ற இந்தியா' என்ற புதிய திட்டத்தைப் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை தில்லியில் தொடங்கிவைத்தார்.

சர்வதேச எழுத்தறிவு தினத்தன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்து மன்மோகன் சிங் பேசியதாவது:

அடுத்த 5 ஆண்டுகளில் 6 கோடிப் பெண்கள் உள்பட 7 கோடிப் பேரை கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

பெண் கல்வியறிவு வீதம் குறைந்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. பெண்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான முன்னேற்றம் பெற கல்வி அவசியமாகும்.

பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அரசு இத்திட்டத்தை தொடங்கி உள்ளது.

இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 6 ஆயிரத்து 500 கோடியாகும். இதில் மத்திய அரசு 5 ஆயிரம் கோடியும், மாநில அரசுகள் 1,500 கோடியும் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் பெண் கல்வியில் பின்தங்கிய 365 மாவட்டங்கள் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 33 மாவட்டங்களில் உள்ள 1.75 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதனால் 85 சதவீத பெண்கள் பயனடைவார்கள். இவர்களில் பாதிப்பேர் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை இனப் பெண்களாக இருப்பார்கள்.

சாதி, பாலின வேறுபாடு ஆகியவற்றால் நாள்தோறும் பிரச்னைகளை சந்திக்கும் பெண்கள் அவற்றை தைரியத்துடன் எதிர்கொள்ள கல்வியறிவு அவசியம்.

உலகில் கல்வியறிவு பெற்றவர் எண்ணிக்கையில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. இந்தியப் பெண்களில் பாதிப்பேருக்கு எழுத, படிக்க தெரியவில்லை.

இதுமிகவும் வேதனை அளிக்கிறது. கல்வியறிவின்மை பெண்கள் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக விளங்குகிறது.

பொருளாதாரத் துறையில் உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூகநலத் துறையில் பெண் கல்வி ஆகியன குறைவாக இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சவால்களாக உள்ளன.

இந்நிலையைப் போக்குவதற்காகத்தான் அரசு இத்திட்டத்தை தொடங்கியுள்ளது என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களவைத் தலைவர் மீரா குமார் பேசியதாவது:

நாட்டின் ஸ்திரமான வளர்ச்சிக்கு கல்வி அவசியம். நம் நாட்டில் சமீபத்தில் இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் மிகவும் போற்றுதலுக்குரியது என்றார்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல்: நாட்டில் 30 கோடி மக்கள் கல்வியறிவு பெறதாவர்களாக உள்ளனர். இந்நிலையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள "எழுத்தறிவு பெற்ற இந்தியா' திட்டம் மக்களுக்கு எழுத, படிக்க மட்டுமல்லாது எண்கணித அறிவையும் பெறுவதற்கு வழிவகுக்குகிறது.

இத்திட்டம் மக்களை கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றுவதோடு, அவர்களை நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பங்கு பெறச் செய்வதை நோக்கமாக கொண்டு செயல்படும்.

இத்திட்டத்தை செயல்படுத்த 70 லட்சம் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்படும். இவற்றில் 10 கோடி தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் பாலின வேறுபாட்டை 21 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்து, ஒட்டு மொத்த கல்வியறிவு வீதத்தை 80 சதவீதமாக எட்டுவதே முக்கிய நோக்கம்.

இணை அமைச்சர் புரந்தேஸ்வரி: இத்திட்டத்தில் பெண் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. பெண்கள்தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர். அவர்கள் கல்வியறிவு பெற்றால் சமுதாயமும், நாடும் முன்னேறும்.

இத்திட்டத்தில் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் கல்வி பெற வழிவகுப்பது இத்திட்டத்தின் நோக்கத்தில் ஒரு பகுதியாகும். இதனால் புதிதாகக் கல்வியறிவு பெறும் 1.5 கோடிப் பேர் முறைசார்ந்த கல்வி பெறுவோருக்கு இணையாக கல்விபெற்றவர்களாக விளங்குவார்கள் என்றார் அமைச்சர் புரந்தேஸ்வரி.

 

சமூக பாதுகாப்பு திட்டம் "திருப்பூர் மாவட்டத்துக்கு ரூ.2.08 கோடி ஒதுக்கீடு: ரூ.96.60 லட்சம் அனுமதி'

Print PDF

தினமணி 03.09.2009

சமூக பாதுகாப்பு திட்டம் "திருப்பூர் மாவட்டத்துக்கு ரூ.2.08 கோடி ஒதுக்கீடு: ரூ.96.60 லட்சம் அனுமதி'

திருப்பூர், செப்.2: சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட த்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.2.08 கோடி நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு, அதில் இதுவரை ரூ.96.60 லட்சம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப் படும் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங் களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் 2009-10-ம் நிதியாண் டில் இதுவரை ரூ.2 கோடியே 08 லட்சத்து 80 ஆயிரம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தில் தலா ரூ.20 ஆயிரம் வீதம் பொதுப்பிரிவில் 565 பயனாளிகள் பயனடையை ரூ.1.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை 292 பயனாளிகளுக்கு ரூ.58.40 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பு உள்ளடக்க திட்டத்தின் கீழ் 406 பயனாளிகளுக்கு ரூ.81.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இதுவரை 186 பயனாளிகளுக்கு ரூ.37.20 லட்சம் வழங்கப்பட்டு ள்ளது.

அதேபோல், .வெ.ரா.மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டத்தில் தலா ரூ.20 ஆயிரம் வீதம் பொதுப்பிரிவில் 32 பயனாளிகள் பயனடைய ரூ.6.40 லட்சமும், சிறப்பு உள்ளடக்க திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.1.80 லட்சமும் ஒதுக்கீடு செய்ய ப்பட்டுள்ளது. அதில் பயனாளிகளுக்கு தொகை வழங்க அரசு உத்தரவு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

மேலும் அஞ்சுகம் அம்மையார் கலப்பு திருமண நிதி உதவித் திட்டத்தில் தலா ரூ.20 ஆயிரம் வீதம் 24 பயனாளிகள் பயனடைய ரூ.4.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இதுவரை 4 பயனாளிகளுக்கு ரூ.80 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறு மண ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.20 ஆயிர ம் வீதம் 4 பயனாளிகள் பயனடையை ரூ.80 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஒரு பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்ட த்தில் 5 பயனாளிக்கு ரூ.80 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப் பட்டு தொகை அனுமதிக்கு அரசு உத்தரவு எதிர்ப்பார்க் கப்பட்டுள்ளது.

மேலும் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவுஇலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் மற்றும் சிவ காமி அம்மையார் நினைவு பெண்குழந்தைகள் பாதுகாப் புத் திட்டத்துக்கும் ஒதுக்கீடு எதிர்ப்பார்க்கப்பட்டுள் ளதாக மாவட்ட சமூகநல அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

டில்லியில் மாநில கல்வி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்

Print PDF

தினமலர் 01.09.2009

 


Page 25 of 42