Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

சென்னை புறநகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ.400 கோடியில் பணிகள் மேயர் சைதை துரைசாமி தகவல்

Print PDF

தினத்தந்தி               09.10.2013

சென்னை புறநகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ.400 கோடியில் பணிகள் மேயர் சைதை துரைசாமி தகவல்

சென்னை புறநகரில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடப்பதாக மேயர் சைதை துரைசாமி கூறினார்.

திறப்பு விழா

சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் பெருங்குடி பகுதியில் உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் செலவில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சித்ரசேனன் தலைமையில் நடந்தது.

சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி., பரங்கிமலை ஒன்றிய தலைவர் என்.சி.கிருஷ்ணன், மண்டல தலைவர் கொட்டிவாக்கம் ராஜாராம், கவுன்சிலர்கள் அமுதா வெங்கடேசன், ஜானகிராமன் முன்னிலை வகித்தனர். கே.பி.கந்தன் எம்.எல்.ஏ. வரவேற்றார். புதிய பள்ளி கட்டிடங்களை அமைச்சர் சின்னையா, சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

விழாவில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:–

ரூ.400 கோடியில் பணிகள்

சென்னை மாநகராட்சியில் முதல்–அமைச்சரின் உத்தரவிற்கிணங்க பல்வேறு அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டு வருகிறது. பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 2 மண்டலங்களில் தரமான சாலைகள், மழைநீர் கால்வாய்கள், தெருவிளக்குகள், பூங்கா என அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தானத்தில் கல்வி தானம் சிறந்தது என்பார்கள். அதுபோல் இந்த பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. வருங்கால சமுதாயம் சிறந்த கல்வியுடன் வளரவேண்டும் என்ற முதல்–அமைச்சரின் கனவை நனவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெ.கே.ஜெயசந்திரன், பாஸ்கரன், ஜெ.கே.மணிகண்டன், ஒன்றிய செயலாளர் டி.வி.நாராயணன், கோவிலம்பாக்கம் மணிமாறன், சித்தாலபாக்கம் தாமோதரன், ஒட்டியம்பாக்கம் ஊராட்சி துணை தலைவர் வீரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

உழவர்கரை நகராட்சியில் குப்பைகளை அகற்ற நவீன லாரி

Print PDF

தினத்தந்தி            08.10.2013

உழவர்கரை நகராட்சியில் குப்பைகளை அகற்ற நவீன லாரி

புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிடக்கும் குப்பைகளை சேகரித்து சுகாதாரமான முறையில் குப்பைகளை மூடி எடுத்து செல்ல ரூ.33லட்சம் செலவில் நவீன லாரியும், 1100லிட்டர் கொள்ளளவு உள்ள குப்பை தொட்டிகளும் வாங்கப்பட்டுள்ளது. இந்த நவீன லாரியை மக்கள் பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி இன்று காலை அஜிஸ் நகரில் நடந்தது.

நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு நவீன லாரியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

 

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உயர்நிலைப் பாலம்

Print PDF

தினபூமி         07.10.2013

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உயர்நிலைப் பாலம்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/New-CM_Jaya4(C).jpg  

சென்னை - கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட  பகுதியில் 15 கோடி ரூபாய் செலவில் உயர்நிலைப் பாலம் ஒன்றை கட்ட  முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:_

கோயம்புத்தூர் மாநகரம் தமிழகத்தில் உள்ள நகரங்களில் ஒரு முக்கிய தொழில் நகரமாகும். இந்த நகரின் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கத்திற்கு ஏற்ப இந்நகருக்காக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கோயம்புத்தூர் மாநகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும், வாகனங்கள்  சீராக இயங்குவதற்கும் மாநகரில் தற்பொழுதுள்ள சாலைகளை மேம்படுத்துவதும் மற்றும் புதிய பாலங்கள் அமைக்கப்படுவதும் மிகவும் அவசியம் ஆகும்.

அந்த வகையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட  பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே சுண்டக்காமுத்தூர் சாலைக்கு அருகே  உயர்நிலைப் பாலம்  ஒன்றினைக் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   இந்த பாலத்தை இணைக்கும் 7.9 கி.மீ நீளமுள்ள சாலைகளான பே%ர் செல்வபுரம் புறவழிச்சாலை, பாலக்காடு பிரதான சாலை மற்றும் கோவைபுதூர்  சாலைகளை மேம்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதன் மூலம் பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.  இப்பணிகளை  15 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற ஒப்புதல் அளித்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

அரசின் இந்த நடவடிக்கை மூலம் கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைய வழிவகை ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 07 October 2013 07:17
 


Page 42 of 238