Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

சிட்லபாக்கத்தில் ரூ 2.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு

Print PDF

தினகரன்               12.08.2013

சிட்லபாக்கத்தில் ரூ 2.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு

தாம்ரபம், : சிட்லபாக்கத்தில் ரூ 12.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்காவை அமைச்சர் சின்னையா திறந்து வைத்தார்.

சிட்லபாக்கம் ராமகிருஷ்ணா நகரில் பேரூராட்சி பொதுநிதி ரூ 12.5 லட்சத்தில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் இரா.மோகன் வரவேற்றார். அமைச்சர் சின்னையா தலைமை தாங்கி புதிய சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார்.

சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்பி, பரங்கிமலை ஒன்றிய குழுதலைவர் என்.சி.கிருஷ்ணன், ராமகிருஷ்ணா நகர் பொது நல சங்க நிர்வாகிகள் நந்தகோபால், கிருஷ்ணகுமார், தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பூங்காவில் உயர்கோபுர மின் விளக்கு அமைக் கவும், சேலையூர் பகுதியில் இருந்து சிட்லபாக்கம் ராமகிருஷ்ணா நகர்  இணைப்பு சாலையை விரைவில் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. விரைவில் அனைத்து பணிகளும் செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். 

 

பார்க்கிங்' வசதியுடன் பூ மார்க்கெட்

Print PDF
தினமலர்               07.08.2013

பார்க்கிங்' வசதியுடன் பூ மார்க்கெட்


திருப்பூர் :""திருப்பூர் பூ மார்க்கெட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், "பார்க்கிங்' வசதியுடன் புதிதாக பூ மார்க்கெட் வளாகம் அமைக்கப்படும்,'' என மேயர் விசாலாட்சி தெரிவித்தார்.திருப்பூர் 45வது வார்டு பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில், தினமும் இரண்டு டன்னுக்கும் அதிகமான பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். அங்குள்ள கட்டடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளதால், சிறிய மழை பெய்தாலும், கால்வைக்க முடியாத அளவுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

மேலும், பூ மார்க்கெட் முன்புறம் வாகனங்களை இஷ்டம்போல் நிறுத்துவதாலும், "பிளாட்பார்ம்' மற்றும் தள்ளுவண்டி கடைகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதுதொடர்பாக, கடந்த ஜூலை 25ம் தேதி வெளியான "தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பின், "பார்க்கிங்' வசதியுடன் பூ மார்க்கெட் வளாகத்தை புதுப்பிக்க வேண்டுமென வியாபாரிகள் மேயரிடம் முறையிட்டனர். மேயர் விசாலாட்சி, கமிஷனர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், மார்க்கெட் பகுதியை நேற்று பார்வையிட்டனர். மேயர் கூறியதாவது:

பூ மார்க்கெட்டை சீரமைக்க வேண்டுமென வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பூ மார்க்கெட், தினசரி மார்க்கெட், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் பகுதிகளை சீரமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், அனுமதியும், மானியமும் கிடைக்கப்பெற்று, பணிகள் துவங்கப்பட உள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்தும், பூ மார்க்கெட் பின்புறம் உள்ள அறிவொளி ரோடு பயன்பாட்டில் இல்லை. முதல்கட்டமாக, பூ மார்க்கெட்டில் இருந்து அறிவொளி ரோட்டுக்கு வழித்தடம் ஏற்படுத்தப்படும்.

முன்பகுதியில் உள்ள தள்ளுவண்டிகள், "பிளாட்பார்ம்' கடைகள் அறிவொளி ரோட்டுக்கு மாற்றப்படும். இதனால், போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் இருக்கும். இரண்டு நுழைவாயில் இருந்தால், நெரிசல் ஏற்பட வாய்ப்பு இல்லை.

தரைத்தளத்தில் டூவீலர் பார்க்கிங் வசதி, முதல் தளத்தில் பூக்கடைகள் செயல்படும் வகையில், வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதனால், வாகன நெரிசல் ஏற்படாது. வியாபாரிகளும் இடையூறு இல்லாமல், கடைகளுக்கு சென்றுவருவர், என்றார்.
 

மெரீனா– சீனிவாசபுரம் இடையே சாலையோரத்தில் சைக்கிளில் செல்ல தனிப்பாதை

Print PDF

மாலை மலர்             07.08.2013

மெரீனா– சீனிவாசபுரம் இடையே சாலையோரத்தில் சைக்கிளில் செல்ல தனிப்பாதை
 
மெரீனா– சீனிவாசபுரம் இடையே சாலையோரத்தில் சைக்கிளில் செல்ல தனிப்பாதைசென்னை நகரை அழகுப்படுத்தும் வகையில் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிரானைட் மற்றும் கான்கிரீட் நடைபாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி நடைபாதையில் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை அமைக்க பிரத்யேகமான வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

நடைப்பாதைகளில் ஓரத்தில் இடவசதி உள்ள சாலைகளில் சைக்கிள் பாதைகள் அமைக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மெரீனா கடற்கரையை அழகுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் மாநகராட்சி அங்குள்ள கடைகளை ஒழுங்குப்படுத்தியுள்ளது. உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை கடைகள் முறைப்படுத்தப்படுகின்றன. மெரீனா கடற்கரை சாலையை ஒட்டியுள்ள சீனிவாசபுரத்தில் சைக்கிள் செல்ல தனிப்பாதை அமைக்கப்படுகிறது.

கலங்கரை விளக்கத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் செல்பவர்கள் வசதிக்காக இது உருவாக்கப்படுகிறது. அழகிய செயற்கை நீர்வீழ்ச்சி கான்கிரீட் ரோடு, நடைபாதை, புல்தரைகள் போன்றவை உருவாக்கப்படுகிறது.

மாநகராட்சி அறிவித்த இந்த திட்டப்பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த பணி குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

கலங்கரை விளக்கத்தில் இருந்து சீனிவாசபுரம் செல்லும் அந்த சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பள்ளி, கல்லூரி பஸ்கள், கார், வேன் போன்ற வாகனங்கள் செல்ல பயன்படுகிறது.

சாலையில் ஓரமாக சிறு சிறு மீன் கடைகள் செயல்படுகின்றன. அங்குள்ள கடற்கரை பகுதியில் பொதுமக்கள் சமீபகாலமாக கூடுவதால் இருசக்கர வாகனங்களும் ஏராளம் நிறுத்தப்படுகின்றன.

அந்த பகுதியில் சைக்கிள் செல்ல தனிப்பாதை அமைத்தால் விபத்தில் சிக்காமல் சைக்கிளில் செல்பவர்கள் எளிதாக செல்ல முடியும்.

மெரீனாவை அழகுப்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை சென்னை மேயர் சைதை துரைசாமி செயல்படுத்துகிறார்.

 


Page 54 of 238