Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

துப்புரவுப் பணிக்கு குப்பை வண்டிகள் அளிப்பு

Print PDF

தினமணி                31.07.2013 

துப்புரவுப் பணிக்கு குப்பை வண்டிகள் அளிப்பு

குமாரபாளையம் நகராட்சிப் பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள நான்கு கூடைகள் கொண்ட 50 புதிய குப்பை வண்டிகள் பணியாளர்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நகரில் உள்ள 33 வார்டுகளிலும் நாள்தோறும் வீடுகளில் நேரடியாக குப்பைகள் சேகரித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பெரும்பாலான வண்டிகள் பழுதடைந்த நிலையில், புதிய வண்டிகள் வாங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக ரூ.6 லட்சம் மதிப்பில் 50 குப்பை வண்டிகள் வாங்கப்பட்டன.

 பச்சை, சிவப்பு நிறங்களில் நான்கு பிரிவுகளாக உள்ள பிளாஸ்டிக் கூடைகளில் வீடுதோறும் மக்கும், மக்காத குப்பைகளைப் பெற்று தனித் தனியே சேகரித்து அப்புறப்படுத்தும் வகையில் இந்த வண்டிகள் உள்ளன. இவற்றை துப்புரவு பணியாளர்களுக்கு நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி, ஆணையர் கே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சிப் பொறியாளர் ராஜேந்திரன், துப்புரவு அலுவலர் மணிவண்ணன், நகர்மன்ற உறுப்பினர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

"நவீன கழிப்பறை வசதியுடன் ஆம்னி பஸ் நிலையம்'

Print PDF

தினமணி                31.07.2013 

"நவீன கழிப்பறை வசதியுடன் ஆம்னி பஸ் நிலையம்'

மாட்டுத்தாவணியில் நவீன கழிப்பறை வசதியுடன் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பஸ் நிலையப் பணிகளை, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார்.

 இது தொடர்பாக, அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:

 மதுரை மாநகர் மையப்பகுதி மற்றும் பெரியார் பஸ் நிலையப் பகுதியில் ஆம்னி பஸ்களால் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 மாட்டுத்தாவணி இருசக்கர வாகனக் காப்பகம் அருகில் உள்ள காலி இடத்தில்  நடைபெற்றுவரும் ஆம்னி பஸ் நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, பஸ்கள் நிறுத்துவதற்கான பஸ் பே மற்றும் ஆம்னி பஸ் நிறுவனத்தினருக்கான அலுவலகம் அமைக்கப்படுகின்றன.

 செவ்வாய்க்கிழமை முதல் பஸ் நிலைய மேற்கூரை அமைக்கும் பணி துவங்கி உள்ளது.

 ரூ. 2.5 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பஸ் நிலையத்தில் விமான நிலையத்தில் உள்ளது போல நவீன கழிப்பறை கட்டப்பட உள்ளது. அத்துடன்,  இலவச கழிப்பறையும் கட்டப்படும். 

 ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவேற்றப்பட்டு ஆம்னி பஸ் நிலையம் தயாராகி விடும்.

 இந்த பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், பெரியார் பஸ் நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட மாநகரப் பகுதிக்குள் செயல்படும் அனைத்து ஆம்னி பஸ் அலுவலகங்களும் மாட்டுத்தாவணிக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்படும்.

   அதன்பிறகு, எந்த ஆம்னி பஸ் அலுவலகமும் மாநகருக்குள் செயல்பட அனுமதி வழங்கப்பட மாட்டாது.

 இதன்மூலம், ஆம்னி பஸ்களால் மாநகருக்குள் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும், என்றார்.

 

திருப்புவனம் பேரூராட்சி அலுவலகக் கட்டடம் திறப்பு

Print PDF

தினமணி              27.07.2013

திருப்புவனம் பேரூராட்சி அலுவலகக் கட்டடம் திறப்பு

திருப்புவனத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகத் திறக்கப்படாமல் இருந்த பேரூராட்சி அலுவலக புதியக் கட்டடத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

 இவ்விழாவுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் தலைமை வகித்தார்.

 மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ எம். குணசேகரன், பேரூராட்சித் தலைவர் வசந்தி சேங்கைமாறன், பிற்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்குழு தலைவர் செந்தில்நாதன், பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் தெய்வநாயகம், பேரூராட்சி நிர்வாக அதிகாரி அமானுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 56 of 238