Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மலிவு விலை உணவகங்களில் சப்பாத்தி தயாரித்து வழங்க ஸீ4 கோடியில் நவீன இயந்திரம்

Print PDF
தினகரன்                 23.05.2013

மலிவு விலை உணவகங்களில் சப்பாத்தி தயாரித்து வழங்க ஸீ4 கோடியில் நவீன இயந்திரம்


சென்னை, : மலிவு விலை உணவகங்களில் சப்பாத்தி தயாரிக்க ஸீ4 கோடியில் நவீன இயந்திரம் வாங்கப்படும் என்று மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

* மாநகராட்சி சார்பில் 200 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. காலையில் இட்லி, சாம்பார், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் மாலையில் சப்பாத்தி, பருப்பு கடைசல் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு உணவகத்திலும் 2 ஆயிரம் சப்பாத்தி, பருப்பு கடைசல் என 200 உணவகங்களில் 4 லட்சம் சப்பாத்திகள், பருப்பு கடைசல் தயார் செய்து விற்பனை செய்யப்படும்.

6 பேர் கொண்ட மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 50 சப்பாத்தி மட்டுமே தயாரிக்க முடியும். நவீன இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்தி தயாரிக்க முடியும். இதன் மூலம் ஆட்கள் தேவையும், நேரமும் குறையும். நவீன இயந்திரங்களை நிறுவுவதற்கு குறைந்த பட்சம் 3 மாத காலம் தேவைப்படும். சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் தயாரிக்க தேவையான இயந்திரம் கொள்முதல் செய்ய ஸீ4 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* வேளச்சேரியை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் தற்சமயம் ராயப்பேட்டை வரை சென்று இறந்தவர்களை நல்லடக்கம் செய்து வருகின்றனர். எனவே, அவர்கள் தரமணி 100 அடி சாலையில் மயான வளாகத்தில் உள்ள ஒரு சிறிய காலி குட்டையை மயான பூமியாக பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
 

நவீன எந்திரம் மூலம் சப்பாத்தி தயாரிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு

Print PDF
தினபூமி             23.05.2013

நவீன எந்திரம் மூலம் சப்பாத்தி தயாரிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு

சென்னை, மே.23 - அம்மா உணவகங்களில் நவீன எந்திரம் மூலம் தினமும் 4 லட்சம் சப்பாத்தி தயாரிக்க ரூ.4 கோடி ஒதுக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில்அனுமதி பெறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார்.  இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், அம்மா உணவகங்களில் நவீன எந்திரங்களை பயன்படுத்தி மாலையில் சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் வினியோகம் செய்யும் தீர்மானமும் நிறைவேறியுள்ளது.

சென்னையில் மாநகராட்சி மூலம் 200 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காலையில் இட்லி சாம்பாரும், மதியம் சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதமும் வினியோகிக்கப்படுகிறது. மாலையில் சப்பாத்தி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனை முதல்வர் ஜெயலலிதா ஏற்று சென்ற சட்டசபை கூட்டத்தில் காலையில் பொங்கலும், மாலையில் சப்பாத்தி- பருப்பும் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி அம்மா உணவகத்தில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு உணவகத்திலும் 2 ஆயிரம் சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் 4 லட்சம் சப்பாத்திகளும் அதற்குண்டான பருப்பு கடைசலும் தயாரித்து பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நவீன எந்திரங்களை பயன்படுத்தி ஒரு மணிநேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்திகள் தயாரிக்க முடியும். இதன் மூலம் ஆட்கள் தேவையும், நேரமும் குறையும். இந்த நவீன எந்திரங்களை நிறுவ குறைந்தபட்சம் 3 மாதம் தேவைப்படும். எந்திரங்களை வாங்குவதற்காக மாநகராட்சி கூட்டத்தில் ரூ. 4 கோடி ஒதுக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

அம்மா உணவகங்களில் சப்பாத்தி தயாரிக்க நவீன இயந்திரங்கள்

Print PDF
தினமணி                  23.05.2013

அம்மா உணவகங்களில் சப்பாத்தி தயாரிக்க நவீன இயந்திரங்கள்


அம்மா உணவகங்களுக்காக ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்திகள் தயாரிக்கும் வகையிலான இயந்திரங்களை வாங்குவதற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார்.

சப்பாத்தி தயாரிப்பு இயந்திரம்:சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு சப்பாத்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு உணவகத்திலும் 2,000 சப்பாத்திகள் மற்றும் பருப்பு கடைசல் தயாரித்து மொத்தம் 4 லட்சம் சப்பாத்திகள் தயாரித்து வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நவீன இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளது. நவீன இயந்திரங்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்திகள் தயாரிக்க முடியும். இந்த இயந்திரங்களை நிறுவ சுமார் 3 மாதம் ஆகும்.

சப்பாத்தி தயாரிக்க நவீன இயந்திரங்கள், பருப்பு கடைசல், சாம்பார், சாம்பார் சாதம், உள்ளிட்டவைகளை தயாரிக்க பொருள்கள் கொள்முதல் செய்ய, சுமார் ரூ.4 கோடி ஆகும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர புதிய மழைநீர் வடிகால்வாய் பணிகளை மேற்கொள்ளுவது, பழைய கட்டடங்களை இடிப்பது போன்ற 44 தீர்மானங்கள் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

நிலம் கையகப்படுத்த ரூ.1.50 கோடி: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, கல்லூரி சாலை ஆகியவற்றை இணைக்கும் இணைப்புச் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஸ்டெர்லிங் 1-ஆவது சந்து முதல் ஸ்டெர்லிங் நிழற்சாலை வரை விரிவாக்கம் செய்ய தனியார் நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு நில எடுப்புச் சட்டம் 1894 அவசர பிரிவு 17 (2)-ன் கீழ் சென்னை மாநகராட்சி நிதியில் இருந்து சுமார் ரூ.1.5 கோடி செலவிட அரசின் நிர்வாக ஒப்புதலை பெறுவதற்கான தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆகாய நடைபாதைகள்: மாம்பலம் ரயில் நிலையம், பாரிமுனை - கோட்டை ரயில்நிலையம் ஆகிய பகுதிகளில் ஆகாய நடைபாதைகள் அமைக்கவும், அடையாறு மற்றும் கோயம்பேடு பகுதியில் இணைப்புச் சாலை அமைக்கவும், நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தியாகராய நகர், மயிலாப்பூர், வாலாஜா சாலை ஆகிய பகுதிகளில் நடைபாதைகள் அமைக்கவும் மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் அறிவித்திருந்தார்.

மேலும் கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை கடற்கரை ஆகியபகுதிகளை அழகுப்படுத்தும் பணி மற்றும் மெரினா கடற்கரையில் சைக்கிள் சுற்றுப்பாதை அமைக்கும் பணி ஆகியவற்றுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உரிய தீர்மானமும் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
 


Page 64 of 238