Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மலிவு விலை உணவகங்களில் சப்பாத்தி தயாரிக்க நவீன இயந்திரம் மாநகராட்சி 4 கோடி ஒதுக்கீடு

Print PDF

தமிழ் முரசு              22.04.2013

மலிவு விலை உணவகங்களில் சப்பாத்தி தயாரிக்க நவீன இயந்திரம் மாநகராட்சி 4 கோடி ஒதுக்கீடு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை:மலிவு விலை உணவகங்களில் சப்பாத்தி தயாரிக் கும் நவீன இயந்திரம் நிறுவ ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சென்னை மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் இன்று நடந்தது. இதில் மொத்தம் 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானம் வருமாறு:

சென்னை மாநகராட்சியில் 200 மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது. காலையில் இட்லி, சாம்பார், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் மாலையில் சப்பாத்தி, பருப்பு கடைசல் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு உணவகத்திலும் 2 ஆயிரம் சப்பாத்தி, பருப்பு கடைசல் என 200 மலிவு விலை உணவகங்களில் 4 லட்சம் சப்பாத்திகள், பருப்பு கடைசல் தயார் செய்து விற்பனை செய்யப்படும்.

6 பேர் கொண்ட மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 50 சப்பாத்தி மட்டுமே தயாரிக்க முடியும். நவீன இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்தி தயாரிக்க முடியும். இதன் மூலம் ஆள் தேவையும், நேரமும் குறையும். நவீன இயந்திரம் நிறுவுவதற்கு குறைந்த பட்சம் 3 மாத அவகாசம் தேவைப்படும். சப்பாத்தி தயாரிக்க தேவையான இயந்திரம் கொள்முதல் செய்ய ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்படும்.

மற்ற மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகம் தொடங்குவதற்கும் இந்த உணவகங்களில் கூடுதலாக பொங்கல், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவற்றை ரூ.5&க்கும், இரண்டு சப்பாத்தி, பருப்பு கடைசல் அல்லது குருமா 3 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்று அறிவித்ததற்கும் முதல்வருக்கு நன்றி. பான்பராக், குட்கா மசாலா போன்ற போதைப் பொருட்களை தமிழகத்தில் விற்பதற்கு தடை விதித்த முதல்வருக்கு நன்றி என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக கவுன்சிலருக்கு மேயர் எச்சரிக்கை

கேள்வி நேரத்தின்போது, அதிமுக கவுன்சிலர் கஸ்தூரி அடிக்கடி ‘வாழ்க.. வாழ்க’ என்று கூறிக் கொண்டே இருந்தார். திமுக உறுப்பினர்கள் பேசும்போதும் கஸ்தூரி குறுக்கிட்டு பேசினார். இதனால் கோபமடைந்த மேயர் சைதை துரைசாமி, ‘நானோ, மற்ற கவுன்சிலர்களோ பேசும்போது இடையே பேசக் கூடாது. அப்படி பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்தார்.

 

அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்

Print PDF
தினமணி          22.05.2013

அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்


அம்மா உணவகங்களுக்காக ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்திகள் தயாரிக்கும் வகையிலான இயந்திரங்களை வாங்குவதற்கு அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் விகர்ம் கபூர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார்.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு சப்பாத்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு உணவகத்திலும் 2,000 சப்பாத்திகள் மற்றும் பருப்பு கடைசல் தயாரித்து மொத்தம் 4 லட்சம் சப்பாத்திகள் தயாரித்து வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

6 பேர் கொண்ட மகளிர் சுயஉதவிக் குழு மூலம் ஒரு மணி நேரத்தில் 50 சப்பாத்திகள் மட்டுமே தயாரிக்க முடியும். ஆனால் நவீன இயந்திரங்கள் மூலம் ஒரு மணிநேரத்தில் 3,000 சப்பாத்திகள் தயாரிக்க முடியும். இந்த இயந்திரங்களை நிறுவ சுமார் 3 மாதம் ஆகும். சப்பாத்தி தயாரிக்க நவீன இயந்திரங்கள், பருப்பு கடைசல், சாம்பார், சாம்பார் சாதம், உள்ளிட்டவைகளை தயாரிக்க பொருள்கள் கொள்முதல் செய்யவேண்டும். இதற்கு சுமார் ரூ. 4 கோடி ஆகும், என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஊட்டி படகு இல்ல ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ரூ. 9½ லட்சம் செலவில் நவீன கருவி

Print PDF
தினத்தந்தி           21.05.2013
 
ஊட்டி படகு இல்ல ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ரூ. 9½ லட்சம் செலவில் நவீன கருவி

ஊட்டி படகு இல்ல ஏரி யில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கலக்காமல் இருக்க ரூ.9½ லட்சம் செலவில் நவீன கருவி அமைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி படகு இல்ல ஏரி

ஊட்டி நகர மக்களின் குடி நீர் ஆதாரமாக விளங்கிய  படகு இல்ல ஏரியில் கழிவு நீர் கலந்ததால் தற்போது அந்த நீர் மாசடைந்து காணப்படுகி றது. ஊட்டி நகரின் பிரதான கால்வாயான கோடப்பமந்து  கால்வாயில் உள்ள கழிவுகள் அனைத்தும் ஊட்டி ஏரியில் கலக்கிறது.

இதன் காரணமாக படகு இல்ல ஏரியில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து ரூ.4 கோடி செலவில் ஊட்டி ஏரி தூய்மைப் படுத்தப் படும்என்று தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதன் படி ரூ.1.25 கோடி செல வில் கோடப்பமந்து கால்வாய் தூர் வாரப்பட்டது.

ரூ.9½ லட்சம் செலவில் கருவிகள் அமைப்பு

கோடப்பமந்து கால்வாயில் இருந்து அடித்து வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஊட்டியில் ஏரியில் கலக்காமல் இருக்க ஏரியும், கால்வாயும் இணையும் இடத் தில் தடுப்பு வளைக்கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பு கம்பியில் சேகர மாகும் குப்பைகளை அகற்ற தற்போது ரூ.9.5 லட்சம் செலவில் நவீன கருவி பொருத்தும் பணி  தீவிரமாக நடை பெற்று வருகிறது. இது குறித்து பொதுப்பணி துறை பொறியாளர் (நீர் ஆதார பிரிவு) ரமேஷ் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறிய தாவது:–

கழிவு நீர் உந்து நிலையம்

ஊட்டி ஏரியும், கால்வாயும் இணையும் இடத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சேகரமாகும் குப்பைகளை தற்போது மனி தர்களே அகற்றி வருகின் றனர். இதனால் அவர்கள் பல்வேறு பாதிப்பு களுக்கு ஆளாகின்ற னர். இதனை தவிர்க்க ரூ.9½ லட்சம் செலவில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நவீன கருவி வாங்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த கருவியை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கால் வாயில் மழைக்காலங்களில் வரும் நீர் ஏரிக்கு அருகில் உள்ள ராட்ச கிணற்றில் சேகரிக்கப் படும்.

இந்த கிணற்றில் சேகர மாகும் கழிவு நீர் ராட்சத மின் மோட்டார் கொண்டு காந்த லில் உள்ள கழிவு நீர் சுத்தி கரிப்பு நிலையத் திற்கு அனுப் பப்படும். இதற்காக கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 


Page 65 of 238