Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

காரைக்குடி குடிநீரேற்று நிலையத்தில் ஜெனரேட்டர் வசதி

Print PDF
தினமணி        05.05.2013

காரைக்குடி குடிநீரேற்று நிலையத்தில் ஜெனரேட்டர் வசதி


காரைக்குடி குடிநீரேற்று நிலையத்தில் மின்பற்றாக்குறையைப் போக்கி, சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.30 லட்சம் செலவில் புதிய ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி சேர்வார் ஊருணி, அதலக் கண்மாய், பருப்பூருணி, ஓ. சிறுவயல் பகுதி களுக்கு தலா 40 கேவிஏ திறனும், சுப்பிரமணியபுரம் பகுதிக்கு 15 கேவிஏ திறனும் கொண்ட புதிய ஜெனரேட்டரும், சம்பை ஊற்று நீரேற்று நிலையத்தில் இருந்த 200 கேவிஏ ஜெனரேட்டரை தேவகோட்டை ரஸ்தா குடிநீரேற்று நிலையத்தில் மாற்றம் செய்யும் பணி நடைபெற்றது.

இதனால் மின் பற்றாக்குறை நேரத்திலும் நாளொன்றுக்கு 75 லட்சம் லிட்டர் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஜெனரேட்டரை காரைக்குடி நகர்மன்றத் தலைவர் கற்பகம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். நகராட்சி ஆணையர் பி. மாரியப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 

4 புதிய நடமாடும் கழிப்பிடங்கள்

Print PDF
தினமணி       27.04.2013

4 புதிய நடமாடும் கழிப்பிடங்கள்


சென்னையில் 9 நடமாடும் கழிப்பிடங்கள் உள்ளன. மேலும் 4 நடமாடும் கழிப்பிடங்கள் வாங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

மாமன்ற கூட்டத்தின் போது 91-வது வார்டு உறுப்பினர் பி.வி. தமிழ்செல்வன் (படம்) இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். சென்னை மாநகராட்சியால் நிறுவப்பட்டுள்ள நடமாடும் கழிப்பிடங்கள் எத்தனை. எந்த மண்டலத்துக்கு எத்தனை உள்ளது என கேட்டார்.

இதற்கு மேயர் அளித்த பதில்: மண்டலத்துக்கு என தனியாக நடமாடும் கழிப்பிடங்கள் இல்லை. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 9 நடமாடும் கழிப்பிடங்கள் உள்ளன. இவை தேவையின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இப்போது மேலும் 4 நடமாடும் கழிப்பிடங்கள் வாங்க அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

போடி நகராட்சியில் ரூ.9 லட்சத்தில் புதிய குப்பை அகற்றும் வண்டிகள்

Print PDF
தினமணி        23.04.2013

போடி நகராட்சியில் ரூ.9 லட்சத்தில் புதிய குப்பை அகற்றும் வண்டிகள்


போடி நகராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிதாக குப்பை அகற்றும் வாகனங்கள் வழங்கப்பட்டன.

போடி நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் குப்பைகளை அகற்றுதல், அவற்றை பிளாஸ்டிக் குப்பை, பிளாஸ்டிக் அல்லாத குப்பை என தரம் பிரித்தல், பிளாஸ்டிக் அல்லாத குப்பைகளை உரமாக்குதல், குப்பைக் கிடங்கை மேம்படுத்துதல், உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நகராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை சேகரிப்பதற்காக பிளாஸ்டிக் தொட்டிகளுடன் கூடிய புதிய வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அதன்படி முதல் கட்டமாக ரூ.9 லட்சம் மதிப்பில் 50 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இவற்றில் மக்கும் குப்பைகளை பெற நான்கு பச்சை நிற பிளாஸ்டிக் தொட்டிகளும், மக்காத குப்பைகளை பெற இரண்டு சிவப்பு நிற தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களை துப்புரவு பணியாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி ஆணையர் எஸ்.சசிகலா தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் வி.ஆர்.பழனிராஜ் வாகனங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பொறியாளர் ஆர்.திருமலைவாசன், உதவி பொறியாளர் குணசேகரன்,சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 


Page 67 of 238