Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மெரீனாவில் மிதிவண்டி தடம்; இசை நீரூற்று

Print PDF
தினமணி         12.03.2013

மெரீனாவில் மிதிவண்டி தடம்; இசை நீரூற்று


சென்னை மெரினா கடற்கரையில் மிதிவண்டிகளுக்கென தனியாக தடம் அமைக்கப்படும் என்று 2013-14ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரிப்பன் கட்டடத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி வெளியிட்ட அறிவிப்பு:

வீடுகளில் இருந்து பறக்கும் ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் மிதிவண்டி தடங்கள் அமைப்பது அவசியமாகிறது.

அதன்படி, மெரினா கடற்கரை வழியாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பட்டினப்பாக்கம் வரையில் 7 கி.மீ. நீளத்துக்கு புதிய மிதிவண்டி சுற்றுப் பாதை அமைக்கப்படும்.

இதேபோல, கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் வரையுள்ள தார் சாலை மற்றும் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள தார் சாலை ஆகியவை கடல் சீற்றத்துக்கு உள்ளாகும் நிலையில் உள்ளதால், இவற்றை பாதுகாக்கும் பொருட்டு இந்த சாலைகள் சிமென்ட் கான்கீரிட் சாலையாக மாற்றியமைக்கப்படுகிறது.

கடற்கரைகள் மேம்படுத்தல்:கொட்டிவாக்கம், நீலாங்கரை மற்றும் பாலவாக்கம் கடற்கரைகளில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதி வரைமுறைகளுக்கு உட்பட்டு நடைபாதைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் சிறுவர் விளையாட்டுப் பகுதிகளுடன் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மெரினாவில் இசை நீரூற்று: மெரினா கடற்கரையில் புல்வெளி, நடைபாதைகளுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதனை மேலும் அழகுபடுத்தும் வகையில் இசை நீரூற்று அமைக்கப்படும்.
 

6 பேரூராட்சிகளுக்கு 7 மினி லாரிகள்

Print PDF
தினமணி         12.03.2013

6 பேரூராட்சிகளுக்கு 7 மினி லாரிகள்


திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரூராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 7 மினி லாரிகளை ஆட்சியர் விஜய் பிங்ளே திங்கள்கிழமை வழங்கினார்.

இதற்கான விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெரணமல்லூர், சேத்துப்பட்டு, போளூர், கண்ணமங்கலம், களம்பூர், தேசூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு இந்த மினி லாரிகள் வழங்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.108.50 லட்சம்.

பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் லாரிகளை ஒப்படைத்த ஆட்சியர், இந்த லாரிகளைக் கொண்டு பேரூராட்சிப் பகுதியில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அள்ள வேண்டும். பேரூராட்சிப் பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இவ்விழாவில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.விஜயகுமார், பேரூராட்சித் தலைவர்கள் வேணி ஏழுமலை (பெரணமல்லூர்), எம்.ஜி.ராதாகிருஷ்ணன் (சேத்துப்பட்டு), கே.கோவர்தனன் (கண்ணமங்கலம்), மஞ்சுளா மோகன் (தேசூர்) மற்ம் செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

குருந்துடையார்புரம் மாநகராட்சி பள்ளிக்கு குடிநீர் இயந்திரம் வழங்கல்

Print PDF
தினமலர்          11.03.2013

குருந்துடையார்புரம் மாநகராட்சி பள்ளிக்கு குடிநீர் இயந்திரம் வழங்கல்


திருநெல்வேலி:குருந்துடையார்புரம் மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கருவி வழங்கப்பட்டது.

லயன்ஸ் சங்க ஆளுனர் ஏசு பாலன், ராஜம் ஏசுபாலன், துணை ஆளுனர் உபால்டுராஜ் மெக்கன்னா, இரண்டாம் ஆளுனர் சிவகாமி ஆறுமுகம், செயலர் மாயாண்டி, தலைவர் பொறியாளர் கந்தமாமி, பொருளாளர் சாரங்கபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர். கனரா பாங்க் அலுவலர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை காந்திமதி வரவேற்றார். உதவி ஆசிரியை அனிதா கிறிஸ்டி நன்றி கூறினார்.
 


Page 72 of 238