Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பாதாள சாக்கடைப் பணிகளுக்காக ரூ.41.25 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்

Print PDF
தினமணி           08.03.2013

பாதாள சாக்கடைப் பணிகளுக்காக ரூ.41.25 கோடி ஒதுக்கீடு:  அமைச்சர் தகவல்


ராமேசுவரத்தில் பாதாள சாக்கடைப் பணிகளை ரூ.41.25 கோடியில் செயல்படுத்திட நிர்வாக அனுமதி கிடைத்திருப்பதாக தமிழக கைத்தறித் துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தரராஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் நகராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

ஆய்வின் போது அமைச்சர் மேலும் கூறியது: தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் எண்ணற்ற நலத்திட்டங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் எந்தவித காலதாமதமும் இன்றி மக்கள் பயனடையும் வகையில் விரைந்து பணிகளை முடிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் மாவட்டமாக இருந்து வருகிறது. குறிப்பாக ராமேசுவரம், ஏர்வாடி, திருவாடானை, ஓரியூர், தேவிபட்டினம், திருஉத்தரகோசமங்கை, நயினார்கோயில் போன்ற இடங்களில் சாலை, மின்விளக்கு, சுகாதாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.

ராமேசுவரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் வருகை மிக அதிகமாக இருப்பதால் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி சில பொருட்களை விட்டுச் செல்வார்கள். நகராட்சி நிர்வாகம் சிறப்புக் கவனம் செலுத்தி அதனை உடனுக்குடன் அகற்ற வேண்டும். ராமேசுவரத்திற்கு பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகளை நிறைவேற்ற அரசு ரூ.41.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இப்பணிகளை விரைவில் துவங்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் குடிநீர் விநியோகம் கோடைகாலத்தில் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர்கள் முஜிபுர் ரகுமான் (ராமநாதபுரம்)அக்சயா (பரமக்குடி), முஹம்மது மைதீன் (கீழக்கரை), ராமேசுவரம் நகராட்சி பொறியாளர் எம்.ரெத்தினவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 

திண்டிவனத்தில் வலம் வரும் வரி வசூல் வாகனம்

Print PDF
தினமணி              07.03.2013

திண்டிவனத்தில்  வலம் வரும் வரி வசூல் வாகனம்


திண்டிவனம் நகராட்சி சார்பில் நடமாடும் வரிவசூல் வாகனத்தை திண்டிவனம் நகர்மன்ற தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். திண்டிவனம் நகர்மன்ற தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடமாடும் வரிவசூல் வாகனத்தை மக்களின் பயன்பாட்டிற்கு தொடக்கி வைத்தார்.

நகரில் உள்ள 33 வார்டுகளுக்கும் இந்த வரிவசூல் வாகனம் செல்லும். நகர மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் வீட்டு வரி,குடிநீர் மற்றும் இதர வரிகளை செலுத்திக்கொள்ளலாம். இந்த வாகனம் ஒரு மாதம் காலத்திற்கு இயங்குமெனவும் மக்களின் ஆதரவை வைத்து இனி வரும் காலங்களில் தொடர்ந்து இயக்கப்படுமென நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் போது நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், சுதாகர், ஸ்ரீராமலு பாலச்சந்திரன், முரளிதாஸ், என்.விஜயகுமார் உட்பட நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

பல்லடம் அண்ணா நகரில் கழிப்பிடம் கட்ட பூமிபூஜை

Print PDF

தினமணி              07.03.2013

பல்லடம் அண்ணா நகரில் கழிப்பிடம் கட்ட பூமிபூஜை

பல்லடம் நகராட்சி 15-ஆவது வார்டு அண்ணா நகரில், தமிழக அரசின் திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கும் திட்டத்தின்கீழ் ரூ.13 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 10 கழிப்பிடங்கள், 6 குளியல் அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கழிப்பிடங்கள் கொண்ட நவீன பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

 நகராட்சித் தலைவர் பி.ஏ.சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.கே.பழனிசாமி முன்னிலை வகித்தார்.

 வார்டு கவுன்சிலர் கந்தசாமி வரவேற்றார். பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பரமசிவம் பூமிபூஜையை துவக்கி வைத்தார்.

 நகராட்சி ஆணையாளர் பி.சாந்தகுமார், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் த.கிருஷ்ணகுமார், நகராட்சி கவுன்சிலர்கள் சூ.தர்மராஜன், எஸ்.ராஜேந்திரன், சித்ரா, மாவட்ட அ.தி.மு.க. இணைச் செயலாளர் ஆர்.ஜோதிமணி, ஒன்றிய துணைச் செயலாளர் ஏ.சித்துராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 73 of 238