Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

திருவொற்றியூரில் கழிவு நீரை அகற்ற கூடுதல் லாரிகள்

Print PDF
தின மணி              26.02.2013

திருவொற்றியூரில் கழிவு நீரை அகற்ற கூடுதல் லாரிகள்

திருவொற்றியூரில் கழிவு நீரை அகற்றுவதற்கு கூடுதலாக 2 லாரிகளை சென்னைக் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியம் ஈடுபடுத்தியுள்ளது.

திருவொற்றியூரில் கழிவு நீரை அகற்ற கட்டணம் செலுத்தியும் 20 நாள்களாகக் காத்திருக்கும் அவலம் என்ற செய்தி தினமணியில் கடந்த பிப்.18 அன்று வெளியானது.

இதனையடுத்து சென்னைக் குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் திருவொற்றியூர் பகுதிப் பொறியாளர் முத்துச்சாமி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்நிலையில் கழிவு நீர் அகற்றும் இரண்டு தனியார் லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக வாரியம் ஈடுபடுத்தியது. மேலும் ஏற்கெனவே வாரியத்தின் வசம் இருக்கும் பழுதடைந்த லாரிகளின் பழுதை நீக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் பாதாளச் சாக்கடை வசதி முழுமையாக ஏற்படுத்தப்படும்வரை திருவொற்றியூர் மண்டலத்திற்கு 6 லாரிகள் நிச்சயம் வேண்டும்.

அப்போதுதான் தடையின்றி கழிவு நீரை அகற்ற முடியும் என கீழ்நிலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Last Updated on Tuesday, 26 February 2013 11:51
 

தெரு விளக்குகள் பராமரிப்பிற்கு "மொபைல் ஏணி' அறிமுகம்

Print PDF
தின மலர்                26.02.2013

தெரு விளக்குகள் பராமரிப்பிற்கு "மொபைல் ஏணி' அறிமுகம்


கம்பம்: கம்பம் நகராட்சியில், தெரு விளக்குகள் பராமரிப்பிற்கென "மொபைல் ஏணி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பணியாளர்கள் எளிதாக மின்கம்பங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். கம்பம் நகராட்சியில் சோடியம் வேபர், சி.எப்.எல்., ஹைமாஸ் விளக்குகள் என தெருவிளக்குகள் 2 ஆயிரத்தை தொட்டுள்ளது. தெருவிளக்குகள் பராமரிப்பில் சுணக்கம் இல்லாத நிலை காணப்படுகிறது. மிக குறைவான பணியாளர்கள் உள்ள இந்த பிரிவில், பணியாளர் பற்றாக்குறை பெரிய பிரச்னையாகும். ஒரு நாளைக்கு குறைந்தது 20 விளக்குகள் பராமரிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. குறைந்த பணியாளர்களை வைத்துக் கொண்டு பராமரிப்பு செய்வது நகராட்சிக்கு தலைவலியாக இருந்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மின்கம்பங்களில் ஏறாமல், ஹைட்ராலிக் ஏணி மூலம் பராமரிப்பு செய்ய, நவீன வாகனத்துடன் கூடிய ஏணி வாங்கப்பட்டுள்ளது. "மொபைல் ஏணி' இணைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தின் விலை ரூ. 8 லட்சம். இனி மின்பராமரிப்பு பணியாளர்கள், மின்கம்பம் அருகில் சென்று, வாகனத்தில் உள்ள ஏணியில் ஏறி நின்றால் போதும். ஏணி ஹைட்ராலிக் விசை மூலம், மின்கம்பத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும். பராமிப்பு பணிகளை முடித்தபின், தானாகவே கீழே கொண்டு வந்து விடும். இதனால், விபத்துக்களை முழுமையாக தடுக்கப்படும். இந்த ஏணியுடன் கூடிய வாகனம், மாநகராட்சிகளிலும், பெரிய நகரங்களிலும் மட்டுமே உள்ளது.

Last Updated on Tuesday, 26 February 2013 11:20
 

விழுப்புரம் நகராட்சிக்கு ரூ. 9 லட்சத்தில் புதிய குப்பைத் தொட்டிகள்

Print PDF

தின மணி          17.02.2013

விழுப்புரம் நகராட்சிக்கு ரூ. 9 லட்சத்தில் புதிய குப்பைத் தொட்டிகள்

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் உள்ள தெருக்களில் குப்பைகளைச் சேகரிப்பதற்காக புதிதாக 47 குப்பைத் தொட்டிகள் ரூ.9 லட்சம் மதிப்பில் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை விழுப்புரம் வந்தது.

விழுப்புரம் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் இதுவரை 45 குப்பைத் தொட்டிகள், ஒரு ஹைடிராலிக் லாரி மட்டுமே உள்ளதால் பெரும்பாலான தெருக்களில் குப்பைத் தொட்டிகள் இல்லாமல் வீடுகளில் சேரும் குப்பைகள் ஆங்காங்கே தெருக்களில் குவிந்து கிடக்கும் அவல நிலை உள்ளது.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் நகர்மன்றத்தில், தானாக குப்பைத் தொட்டிகளை எடுத்து குப்பைகளைச் சேகரிக்கும் வகையில் ஒரு கம்பாக்டர் லாரி ரூ.29.55 லட்சம் மதிப்பிலும், இரு டிப்பர் லாரி ரூ.24 லட்சம் மதிப்பிலும், 47 குப்பைத் தொட்டிகள் ரூ.9 லட்சம் மதிப்பிலும் வாங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி சென்னை பூந்தமல்லியிலிருந்து, 47 குப்பைத் தொட்டிகள் விழுப்புரம் வந்துள்ளன. இது குறித்து நகர்மன்றப் பொறியாளர் பார்த்திபன் கூறுகையில், நகர்மன்றப் பகுதிக்கு ஏற்கனவே 45 குப்பைத் தொட்டிகள் உள்ளநிலையில், கூடுதலாக 47 குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த குப்பைத் தொட்டிகளை அன்றாடம் எடுக்கப் பயன்படுத்தப்படும் கம்பாக்டர் லாரி, 15 நாட்களில் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

Last Updated on Monday, 18 February 2013 08:48
 


Page 75 of 238