Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

வாரச்சந்தை வளாகத்தில் நவீன பல்நோக்கு வணிக வளாகம்: நகராட்சி சேர்மன் தகவல்

Print PDF

தினமலர்          05.09.2012

வாரச்சந்தை வளாகத்தில் நவீன பல்நோக்கு வணிக வளாகம்: நகராட்சி சேர்மன் தகவல்

நாமக்கல்: ""வாரச் சந்தை வளாகத்தில், 250 கடைகள் கொண்ட, பல்நோக்கு நவீன வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது,'' என, நகராட்சி சேர்மன் கரிகாலன் பேசினார்.

நாமக்கல் நகராட்சியில், புதிய வணிக வளாகம் கட்டுதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகராட்சி சேர்மன் கரிகாலன் தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் வாரச்சந்தை வளாகத்தில், 2.290 ஏக்கர் பரப்பளவில், 23.50 கோடி ரூபாய் மதிப்பில், 250 கடைகள் கொண்ட பல்நோக்கு நவீன வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான உத்தேச மதிப்பீடுகள், வரைபடமும் பெறப்பட்டுள்ளது.வணிக வளாக தரைத் தளத்தில், 20 ஆயிரத்து, 700 ச.அ., பரப்பில், 30 கடை, முதல் தளத்தில், 24 ஆயிரத்து, 900 ச.அ., பரப்பில், 24 கடை, இரண்டாவது தளத்தில், 21 ஆயிரத்து, 300 ச.அ., பரப்பில், 16 கடை, மூன்றாவது தளத்தில், 17 ஆயிரம் ச.அ., பரப்பில், 14 கடை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
 
மொத்தம், 83 ஆயிரத்து, 900 ச.அ., பரப்பில் அமைய உள்ள வணிக வளாகத்தில், ஒரு ச.அ.,க்கு, 1,000 ரூபாய் என்ற விகிதத்தில் வைப்பு பெறப்படும்.அதன் மூலம், 8.40 கோடி ரூபாய் வைப்புத் தொகையும், ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய் வீதம் வருவாயும் ஈட்ட வாய்ப்புள்ளது. வணிக வளாகத்தை தொடர்ந்து, தினசரி அங்காடி கட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இரண்டு கோடி ரூபாய் வைப்புத் தொகை, ஆண்டுக்கு, 46 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டவும் வாய்ப்புள்ளது.

ஓரிரு மாதத்தில், அரசின் அனுமதி பெற்று, இத்திட்டம் மேற்கொள்ளப்பட உளளது. வணிக வளாகத்தில் கட்டப்படும் கடைகளுக்கு, முன் ஏலம் விடப்பட்டு பெறப்படும் டெபாசிட் மூலம் பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, நகராட்சி கமிஷனர் செழியன், பொறியாளர் கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
 

ஆரணி நகராட்சியில் 6 இடங்களில் உயர்கோபுர விளக்குகள்

Print PDF
தினமணி           04.09.2012

ஆரணி நகராட்சியில் 6 இடங்களில் உயர்கோபுர விளக்குகள்


ஆரணி, செப். 3: ஆரணி நகராட்சியில் 6 இடங்களில் ரூ.33 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

ஆரணி நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சிக்குழுமத் திட்டத்தின் கீழ் காமராஜர் சிலை, அருணகிரிசத்திரம், எம்ஜிஆர் பஸ்நிலையம், சைதாப்பேட்டை, சூரியகுளம் அருகில், அரசு மருத்துவமனை அருகில் என மொத்தம் 6 இடங்களில் ரூ.33 லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.

இவற்றை நகர்மன்றத் தலைவர் ஆனந்தகுமாரி கருணாகரன் தொடங்கி வைத்தார்.நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செல்வம், நகர்மன்றத் துணைத் தலைவர் தேவசேனா ஆனந்த் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

காசிபாளையத்தில் பாதாள சாக்கடை ரூ 26 கோடியில் அமைக்க திட்டம்

Print PDF

தினகரன்      04.09.2012

காசிபாளையத்தில் பாதாள சாக்கடை ரூ 26 கோடியில் அமைக்க திட்டம்

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சியில் வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி, பெரியசேமூர் ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக உள்ளாட்சி மற்றும் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.61.89 கோடி, ஜெர்மன் நிதி ஆதாரத்தில் கடனாக ரூ.71.14 கோடி, மானியமாக ரூ.62.77 கோடி, உள்ளூர் திட்டக்குழு மானியமாக ரூ.3.60 கோடி, கூடுதல் மானியமாக ரூ.9.82 கோடி என ரூ.209.22 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

5 பகுதிகளாக பிரித்து செயல்படுத்தப்படும் இந்த சாக்கடை திட்டம் 498.6 கி.மீ தூரம் அமைக்கப்படுகிறது. திட்டம் மூலம் கொண்டு வரப்படும் கழிவுநீரை சுத்திகரிக்க பீளமேடு என்ற இடத்தில் 18.27 ஏக்கர் பரப்பளவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு கழிவுநீரை சுத்தப்படுத்தி ஆற்றில் விடும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட மாநகராட்சியில் பகுதியில் புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சிகளான கங்காபுரம், முத்தம்பாளையம், எல்லப்பாளையம், திண்டல், வில்லரசம்பட்டி ஆகிய கிராமங்களிலும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு பகுதியாக பணிகளை செய்து வரும் நிலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு ரோடுகள் போடும் பணிக ளும் நடந்து வருகிறது. இந்நிலையில் பகுதி 4ல் பாதாள சாக்கடைக்காக பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் 3 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும் என்பதால் பகுதி, பகுதியாக பிரித்து பணிகள் நடந்து வருகிறது. தற்போது 4வது பகுதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காசிபாளையம் பகுதியை உள்ளடக்கிய இந்த பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் 26 கோடியே 8 லட்சத்து 47 ஆயிரத்து 111 ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதுதொடர்பாக ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யும் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் ஒப்புதல் அளித்த நிலையில் மாநகராட்சியிலும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.இவ்வாறு அதிகாரி கூறினார்.
 


Page 76 of 238