Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

சுகாதார வளாகம் திறப்பு

Print PDF

தினமலர்                    15.08.2012

சுகாதார வளாகம் திறப்பு

சேத்தூர்: சத்தூர் பேரூராட்சியில் பெண்களுக்கான சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.சேத்தூர் பேரூராட்சி 11வது வார்டில் கோபால்சாமி எம்.எல்.ஏ., நிதியிலிருந்து,ரூ. 5லட்சம் செலவில் கட்டப்பட்ட, பெண்களுக்கான நவீன கழிப்பறை திறப்பு விழா, பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி தலைமையில் நடந்தது.கோபால்சாமிஎம். எல்.ஏ., திறந்து வைத்து பேசுகையில்,""சேத்தூர் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும், தேலையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.பொது மக்களுக்கு தேவையான குடிநீர்,தெருவிளக்கு,கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும்,'' என்றார்.

பேரூராட்சி           செயல் அலுவலர்    முருகன், துணை த்தலைவர்         சுப்பிரமணியன்    வார்டு உறுப்பினர்கள்,நகர செயலாளர் செல்வகுமார்,மாவட்ட கவுன்சிலர்   விஜயலட்சுமி,         ஒன்றிய கவுன்சிலர் பெரியாண்டவர்,பொட்டல்பட்டி ராஜேந்திரன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 16 August 2012 06:11
 

குப்பை அள்ளும் பணிக்கு ரூ.11 லட்சத்தில் வாகனம்

Print PDF

தினமலர்                    15.08.2012

குப்பை அள்ளும் பணிக்கு ரூ.11 லட்சத்தில் வாகனம்

வேதாரண்யம்: ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில் வேதாரண்யம் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைக்கு குப்பை அள்ளும் வாகனத்தை 11 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதனை நகராட்சிக்கு அர்ப்பணிக்கும் விழா நகராட்சி தலைவர் மலர்க்கொடி தலைமையில் நடந்தது.இதில், வரித்தண்டலர் குகன் வரவேற்றார்.துணைத்தலைவர் சுரேஷ்பாபு, ஆணையர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதை எம்.எல்.ஏ., காமராஜ், குப்பை அள்ளும் வாகன பணியை துவக்கி வைத்தார். கவுன்சிலர் ராஜகிளி, மீராஷேக் மொய்தீன், கார்த்திகேயன், சந்திராகுமார், சுப்பிரமணியன், லட்சுமி, சிவசண்முகம், நஜிமுதீன் உள்பட பலர் பங்கேற்றனர். துப்புரவு ஆய்வாளர் தங்க ராமு நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 16 August 2012 06:08
 

வாலாஜாபாத் பேரூராட்சிக்கு பாதாள சாக்கடை :திட்ட மதிப்பீடு தயாரிப்பு

Print PDF

தினமலர்           12.08.2012

வாலாஜாபாத் பேரூராட்சிக்கு பாதாள சாக்கடை :திட்ட மதிப்பீடு தயாரிப்பு

வாலாஜாபாத் : வாலாஜாபாத் பேரூராட்சியில், பாதாள சாக்கடை மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, 25 கோடி ரூபாய் மதிப்பிற்கு, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குடியிருப்புக்கள் அதிகரிப்பு

வாலாஜாபாத் பேரூராட்சி 1964ம் ஆண்டு, முதல் நிலை ஊராட்சியாக துவக்கப்பட்டது. பின் 1982ம் ஆண்டு தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

ஒரகடம் சிப்காட் உருவானதற்கு பின், பேரூராட்சியில் கட்டடங்களின் எண்ணிக்கை மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வாலாஜாபாத்தை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள்,, நிரந்தமாக பேரூராட்சியில் குடியேறி உள்ளனர்.மழை நீர் செல்வதற்காக, பேரூராட்சியில் 1990ம் ஆண்டு, மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அவை தற்போது கழிவு நீர் கால்வாயாக மாறி விட்டன. தெருக்களில் கழிவு நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இவற்றை தடுக்கவும், சுகாதாரத்தை பாதுகாக்கவும், பேரூராட்சிப் பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என கோரிக்கை எழுந்தது.திட்ட மதிப்பீடு இதையடுத்து, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 25 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்துஉள்ளது.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி கூறும்போது, ""பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஆகியவற்றை செயல்படுத்த, பேரூராட்சி இயக்குனரகத்திற்கு, 25 கோடி ரூபாய் மதிப்பிற்கு மதிப்பீடு தயார் செய்து அனுப்பியுள்ளோம்.
நிதி கிடைத்ததும் பணிகள் துவக்கப்படும்,'' என்றார்.

Last Updated on Monday, 13 August 2012 06:25
 


Page 81 of 238