Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு ரூ1 கோடியில் புதிய கட்டிடம்

Print PDF

தினகரன்    06.08.2012

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு ரூ1 கோடியில் புதிய கட்டிடம்

மேட்டுப்பாளையம்,: மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்துக்கு காரமடை ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில்  ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். அடிக்கல் நாட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அமைச்சர்  தாமோதரன் பேசினார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. சின்னராஜ், நகர்மன்ற தலைவர் சதீஸ்குமார், துணைத்தலைவர் ரமாசெல்வி, நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் நாசர், மைதானம் சந்தானம், வான்மதிசேட் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

 

புதிய பாலம் திறப்பு

Print PDF

தினமலர்                      06.08.2012

புதிய பாலம் திறப்பு

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நகராட்சி தலைவர் ஜவகர்பாபு திறந்து வைத்தார்.பட்டுக்கோட்டை நகராட்சியில், புதிய பேருந்து நிலையம் மற்றும் 29வது வார்டு சீனிவாசன் 4வது சந்து பகுதியில் புதிதாக பாலம் மற்றும் கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் நகராட்சி பொது நிதியிலிருந்து, 10 லட்ச ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை நகராட்சி தலைவர் ஜவகர்பாபு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.இதில், நகராட்சி துணைத்தலைவர் பாரதிதாசன், கவுன்சிலர்கள் செல்ல நாகராஜன், மோகன், பிரபு, மயில்வாகனன், மாஸ்கோ, ரவிச்சந்திரன், வெள்ளைச்சாமி மற்றும் இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

நன்றே செய்வீர்; இன்றே செய்வீர்

Print PDF

தினகரன்            04.08.2012

நன்றே செய்வீர்; இன்றே செய்வீர்

சென்னை மாநகராட்சி எல்லை 3 மடங்கு அதிகரித்து விட்டது. ஏற்கனவே வளர்ந்த பகுதிகளை பார்த்து சமீப காலம் வரை புறநகராக இருந்த புதிய மாநகராட்சி பகுதிகள் ஏங்கித் தவித்தன. அவற்றின் ஏக்கத்தை போக்கும் வகையில் சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு வசதிகளுக்கு தமிழக அரசு ரூ350 கோடி ஒதுக்கியுள்ளது.

அதில் அந்தந்த மண்டலங்களுக்கு உரிய பங்குகள் அங்கு செய்யப்பட வேண்டிய பணிகளை கணக்கிட்டு பிரித்தாகி விட்டது. சாலை வசதி, கரூவுநீர் அகற்றுதல், குடிநீர் ஆகிய பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு ஒருவரூயாக அவற்றை திறக்கும் நேரம் வந்துள்ளது.

அடுத்த ஒரு மாதத்துக்குள் பணிகள் தொடங்கி மழைக் காலம் ஆரம்பமாவதற்குள் முடிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. அப்படியே புறநகர் பகுதிகளில் சிமென்ட் சாலைகள், பிளாஸ்டிக் மற்றும் தார் சாலைகள் போடப்பட்டு, சென்னை குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதிகள் வந்து விட்டால்தான் சென்னை விரிவடைந்தது உண்மையானதாக இருக்கும்.

அந்த நிலை வரும்போது அதை ஒட்டிய பகுதிகள் புதிய புறநகர் பகுதிகளாக அந்தஸ்து பெற்று விடும்.ஏற்கனவே, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் சேர்க்கப்பட்ட பகுதிகளில் வீட்டு மனைகளின் விலை கோடிகளை நெருங்கி விட்டதால், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மேலும் 50 கி.மீ. தூர பகுதிகளை நோக்கி படையெடுத்தன. இப்போது புறநகரை தாண்டி மனை பிரிவுகள் பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன. நடுத்தர மக்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவையாகவும் அவை உள்ளதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அரசுக்கு சொந்தமான சிப்காட் மற்றும் சிட்கோ ஆகியவை புறநகர் பகுதிகளில் தொரூற்பேட்டைகளையும், தகவல் தொரூல்நுட்ப பூங்காக்களையும் அமைத்து வருகின்றன. இதனால் இத்தகைய பகுதிகளில் வீட்டு மனைகளை வாங்கிப் போட்டால் எதிர் காலத்தில் நல்ல விலை கிடைக்கும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.  இதுபோன்ற இடங்களில் சில லட்சங்களை இன்று முதலீடு செய்தால் அடுத்த 10 ஆண்டுகளில் கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால், நல்ல முடிவை தள்ளிப் போடாமல் இன்றே எடுப்பது நல்லது.

 


Page 83 of 238