Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ.1.20 கோடியில் வாகனங்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கல்

Print PDF

தினமலர்                                            30.07.2012

ரூ.1.20 கோடியில் வாகனங்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கல்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு, 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாகனங்கள் மற்றும் கருவிகளை உபயோகப்படுத்த பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் வழங்கினார்.

ஈரோடு மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிக்கு ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு இயக்க திட்டம், 2011-12ல், வாகனங்கள் மற்றும் கருவிகள் வாங்க, 1.20 கோடி ரூபாய் அரசு நிதி வழங்கப்பட்டது.அதன்படி, 52.49 லட்சம் மதிப்பீட்டில், இரண்டு ஜே.சி.பி., வாகனம், 56.90 லட்சம் ரூபாயில், நான்கு குப்பைக்கலன்கள் கையாளும் லாரி, 8.55 லட்சம் ரூபாயில், ஒரு வாகனத்துடன் கூடிய கொசு மருத்து பிரயோகிக்கும் இயந்திரம், 1.55 லட்சம் ரூபாயில், கையில் எடுத்து சென்று கொசு மருந்து பிரயோகிக்கும் நான்கு இயந்திரங்கள் என மொத்தம், 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாகனங்கள் மற்றும் கருவிகள் வாங்கப்பட்டு, உபயோகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், வாகனங்கள் மற்றும் கருவிகள் உபயோகப்படுத்தும் பணியை துவக்கி வைத்து, மாநகராட்சி கமிஷனர் விஜயலட்சுமி, துணை மேயர் பழனிசாமி ஆகியோரிடம் ஒப்படைத்தார்.துணை ஆணையர் அசோக்குமார், மண்டல தலைவர்கள் மனோகரன், காஞ்சனா உட்பட பலர் பங்கேற்றனர்.

 

மழைநீர் சேகரிப்புக்கு ரூ.30 லட்சம் கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

Print PDF
தினமலர்                 27.07.2012

மழைநீர் சேகரிப்புக்கு ரூ.30 லட்சம் கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

குளித்தலை: "கரூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகளுக்காக நடப்பாண்டில் 30 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா தெரிவித்தார்.கரூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஷாபனா பேசுகையில், " கரூர் மாவட்டத்தில் நெல் 160 டன், நிலக்கடலை 70 டன், பயிர்வகை 23 டன், சோளம் நான்கு டன் விதைகள் இருப்பில் உள்ளது. யூரியா 777 டன்னும், டி.ஏ.பி., உரங்கள் 486 டன்னும், பொட்டாஷ் உரங்கள் 888 டன்னும், காம்பளக்ஸ் உரம் 2,345 டன்னும் இருப்பில் உள்ளது. சம்பா பருவத்திற்கு 160 டன் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. நடப்பாண்டில் 16 ஆயிரத்து 496 ஹெக்டேரில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.வேளாண்மை துறை மூலம் 2012-13 ம் ஆண்டில் ஆறு கசிவு நீர் குட்டை அமைக்கும் பணிக்காக 34.10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பணிக்காக 40 ஹெக்டேருக்கு 14.12 லட்ச ரூபாயும், ஆறு மழைநீர் சேகரிப்பு பணிகளுக்கு 30 லட்ச ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார். எம்.எல்.ஏ., பாப்பாசுந்தரம், ஆர்.டி.ஓ., சிவசௌந்திர வள்ளி, வேளாண்மை இணை இயக்குநர் சௌந்திரம், உதவி இயக்குநர் துரைசாமி, கூட்டுறவு இணைப்பதிவாளர் உமா மகேஸ் வரி உள்பட பலர் பங்கேற்றனர். குறைதீர் கூட்டத்தில் ஏழு விவசாயி களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

 

"தில்லைநகரில் ரூ. 25 லட்சத்தில் பூங்கா'

Print PDF

தினமணி                               26.07.2012

 "தில்லைநகரில் ரூ. 25 லட்சத்தில் பூங்கா'

திருச்சி, ஜூலை 25: திருச்சி தில்லைநகர் கிழக்குப் பகுதியில் ரூ. 25 லட்சத்தில் நடைபாதை வசதியுடன்கூடிய பூங்கா அமைக்கும் பணிகளை மாநகர மேயர் அ. ஜெயா, ஆணையர் வே.ப. தண்டபாணி ஆகியோர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள், நீர் ஊற்று உள்ளிட்டவை அமையவுள்ளன.

தில்லைநகர் முதல் குறுக்குத் தெரு மேற்குப் பகுதியில் ரூ. 6 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலையையும் இவர்கள் பார்வையிட்டனர்.

அரியமங்கலம் கோட்டம் வைர விழா வளாகத்தில் வாகன நிறுத்துமிட வசதியுடன் வணிக வளாகம் கட்டும் பணி, திருச்சி காந்தி சந்தையை மேம்படுத்துவது குறித்தும் பார்வையிட்டனர்.

துப்புரவுக் கருவிகள்: புதிதாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 5 வார்டுகளுக்காக ரூ. 2 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ள துப்புரவுக் கருவிகள் மற்றும் தளவாடப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ள மரக்கடை பகுதி கிடங்கு வளாகத்தையும் பார்வையிட்டனர்.

 


Page 85 of 238