Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ. 85 கோடியில் தொடக்கம் : அடையாறு நீர்பிடிப்பு பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணி

Print PDF
தினகரன்      21.12.2010

ரூ. 85 கோடியில் தொடக்கம் : அடையாறு நீர்பிடிப்பு பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணி


சென்னை, டிச.21:

அடையாறு நீர்பிடிப்பு பகுதியில் ரூ. 85 கோடி செலவில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி சார்பில் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாறு நீர்பிடிப்பு பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தொடக்கவிழா, சைதாப்பேட்டை கவரை தெரு பகுதியில் நேற்று நடைபெற்றது. கட்டுமான பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். துணை ஆணையர் டேரிஷ் அகமது, துணை மேயர் சத்தியபாமா, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்கட்சி தலைவர் சைதை ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது

மாநகராட்சி பகுதிகளில் பருவமழையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு மற்றும் மழைநீர் தேக்கம் போன்ற பாதிப்புகளிலிருந்து மீட்கும் தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சியும் பொதுப்பணிதுறையும் இணைந்து ஜவஹர்லால் தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1447.91 கோடி செலவில் புனரமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேயராக 1996ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபோது சென்னையில் இருந்த மொத்த மழைநீர் வடிகால்வாய்களின் நீளம் 635 கி.மீ. மட்டும் தான்.

மக்கள்படும் துயரத்தை பார்த்து புதிதாக 135 கி.மீ. நீளத்திற்கு புதிய வடிகால்வாய்களை அவர் அமைத்தார். மேலும், 84 கி.மீ. நீளத்தில் பழைய கால்வாய்களை புதுப்பித்தார். இதனால் மழைநீர் தேங்குவது பெருமளவில் தடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 5 ஆண்டு காலத்தில் மேலும் புதிதாக 171 கி.மீ. நீளத்திற்கு புதிய வடிகால்வாய்கள் கட்டப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டையில் உள்ள அடையாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணி இன்று தொடங்கப்படுகிறது. அதன்படி, அடையாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் பிரதான கால்வாய்கள் 8.40 கி.மீ. நிளத்திற்கு ரூ. 18.1 கோடியிலும், உள்ளூட்டு கால்வாய்கள் 28.19 கி.மீ. நீளத்திற்கு ரூ. 34.25

கோடியிலும் மற்றும் சேகரிப்பு கால்வாய்கள் 10.45 கி.மீ நீளத்திற்கும் ரூ. 9.54 கோடியிலும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், எம்.ஜி.ஆர். நகர் கால்வாய், கிண்டி தொழிற்பேட்டை கால்வாய், ஜாபர்கான் பேட்டை கால்வாய் மற்றும் செல்லம்மாள் கல்லூரி கால்வாய் ஆகிய 4 கால்வாய்களை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி, கான்கிரீட் தரை மற்றும் வேலி அமைக்கும் பணி 4.66 கி.மீ. நீளத்திற்கு ரூ. 22.63
கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. மொத்தத்தில் இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் 51.70 கி.மீ. நீளத்தில் ரூ. 84.48 கோடியில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மேயர் கூறினார்.
 

அரியலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி ஆய்வு : 18 மாதங்களில் முடிக்க நடவடிக்கை

Print PDF
தினகரன்       16.12.2010

அரியலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி ஆய்வு : 18 மாதங்களில் முடிக்க நடவடிக்கை

அரியலூர், டிச. 16: அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 27.5 கோடியில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணியை கலெக் டர் பொன்னுசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது கே.கே.நகரில் பா தாள சாக்கடை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும் குழாய்கள் அரசு நிர்ணயித்த அளவில் உள்ளதா, பணி முடிவுற்ற உடன் சாலையில் உள்ள மண்களை அப்புறப்படுத்தி பொதுமக்கள் போக்குவரத்திற்கு சிரமமின்றி சென்றுவர வழிவகை செய்துதர வேண்டுமென ஒப்பந்தகாரர்களிடம் கூறினார்.

பின்னர் ராஜாஜி நகரில் பாதாள சாக்கடை அமைக் கும் பணிகளை ஆய்வு செய்து சிமென்ட் கலவை சரியான முறையில் உள் ளதா என்பதை ஆய்வு செய்தார். பணிகள் முடித்த பின்னர் பொதுமக்கள் சிரமமின்றி போய்வர ஆட் களை கொண்டு சாலையில் உள்ள மண்களை அப்புறப்படுத்தி தர வேண்டும். பூச்சுகள் மற்றும் இணைப்புகள் அனைத்தும் உறுதிப்படுத்துவதற்கு 3,4 நாட்கள் இடைவெளிவிட்டு பின்னர் குழிகளை மூடவேண்டும் என்றார். இந்த பணிகளை தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர் பொன்னுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அரியலூர் நகராட்சியில்
ரூ. 27.5 கோடியில் 37.9 கிலோமீட்டர் தூரம் வரை பாதாள சாக்கடை அமை க்கும் பணி கடந்த நவம்பர் மாதம் துவங்கியது. பணியில் 1,343 பாதாள சாக்கடை துவாரங்கள் (மேன் ஹோல்ஸ்) அமைக்கப்படுகின்றன. பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை 170 மீட்டர் தூரம் பணிகள் நடந்துள்ளது.

அரியலூர் நகராட்சி பகுதிகளில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 4.48 மில்லியன் லிட்டர் கழிவுநீர் தினந்தோறும் வெளியேற்றும் வகையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பணிகள் நடந்து வருகிறது. இப்பணி 18 மாதங்களில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

நகராட்சி தலைவர் விஜயலட்சுமி செல்வராஜ், துணைத்தலைவர் சுப்பிரமணியன், நகராட்சி உறுப்பினர்கள் தமிழரசன், ராமமூர்த்தி, சந்திரசேகர், ராமு, குணா, மணிவண்ணன், நகராட்சி ஆணையர் மோகன், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி முகமை) ராமகிருஷ்ணன், வட்டார வளர் ச்சி அலுவலர்கள் ஜெயமரிநாதன், வட்டாட்சியர் கோவிந்தராஜீலு கலந்து கொண்டனர்.

 

விழுப்புரம் பாதாள சாக்கடை பணி பிரதான சாலைகளுக்கு 19ம் தேதி இறுதி கெடு : அமைச்சர் பொன்முடி உத்தரவு

Print PDF

தினகரன்                15.12.2010

விழுப்புரம் பாதாள சாக்கடை பணி பிரதான சாலைகளுக்கு 19ம் தேதி இறுதி கெடு : அமைச்சர் பொன்முடி உத்தரவு

விழுப்புரம், டிச. 15: விழுப்புரத்தில் பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் முடிவடைந்த வீதிகளில் சிமெண்ட் சாலை போடும் பணிகள் நடந்து வருகிறது. பிரதான சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பாதாள சாக்கடை திட்ட பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பூந்தோட்டத்தில் பணிகள் முடிக்கப்பட்டு சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் கே.கே. ரோட்டிற்கு அமைச்சர் பொன்முடி நேற்று மாலை வந்தார்.

அமைச்சர் பொன்முடி: பாதாள சாக்கடை திட்ட பணிகள் எந்த நிலையில் உள்ளது.

குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பால குமார்: 294 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டும். 10 நாட்களில் பணிகள் முடிக்கப்படும்.

அமைச்சர் பொன்முடி: டிசம்பர் மாதத்திற்குள் சிமெண்ட் சாலை போட வேண்டும் என்று கூறியிருந்தேன். பணிகளை நீங்கள் துரிதப்படுத்தவில்லை. இரவிலும் பணியை மேற்கொள்ளுங்கள். கூடுதலாக ஆட்களை கொண்டு பணியை தீவிரப்படுத்துங்கள். கே.கே.ரோடு, காமராஜர் வீதி, எம்.ஜி.ரோடு, பாகர்ஷா வீதி களில் வரும் 19ம் தேதிக்குள் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிக்கப்பட வேண்டும். சிமெண்ட் சாலை போடும் பணி 20ம் தேதி துவங்க வேண்டும். அப்போது ஆட்சியர் பழனிசாமி, நகர்மன்ற தலைவர் ஜனகராஜ், நகராட்சி ஆணையர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன், ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பழனிசாமி, ஓவர்சியர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

 


Page 92 of 238