Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மாநகராட்சி, 4 நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணி தீவிரம் ரூ209.22 கோடி திட்டம் மூன்று ஆண்டில் முடியும்

Print PDF

தினகரன்               10.12.2010

மாநகராட்சி, 4 நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணி தீவிரம் ரூ209.22 கோடி திட்டம் மூன்று ஆண்டில் முடியும்

ஈரோடு, டிச.10: ஈரோடு மாநகராட்சியில் ரூ.209.22 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி, பெரியசேமூர் ஆகிய 4 மூன்றாம் நிலை நகராட்சிகளையும் இணைத்து பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக உள்ளாட்சி மற்றும் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.61.89 கோடியும், ஜெர்மன் நிதி ஆதாரத்தில் கடனாக ரூ.71.14 கோடியும், மானியமாக ரூ.62.77 கோடியும், உள்ளூர் திட்டக்குழு மானியமாக ரூ.3.60 கோடியும், கூடுதல் மானியமாக ரூ.9.82 கோடியும் என ரூ.209.22 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 5 சிப்பங்களாக பிரித்து இந்த பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் செயல்படுத்தப்படவுள்ளது.

முதல் சிப்பத்தில் ஈரோடு மாநகராட்சியில் 14, 15, 23, 24, 25, 26, 27, 28, 37, 38, 39, 40 ஆகிய வார்டு பகுதிகளும், 12, 13, 21, 22, 29, 42 ஆகிய வார்டுகளில் ஒரு சில பகுதிகளும், சூரம்பட்டி நகராட்சியில் 1&வது வார்டு முதல் 18&வது வார்டு வரையும், காசிபாளையம் நகராட்சியில் 1, 2, 4 மற்றும் 21&வது வார்டு பகுதியும், 4, 5, 19, 20 ஆகிய வார்டுகளில் ஒரு சில பகுதிகளும், வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 17&வது வார்டு மற்றும் 12, 15, 16, 18 முதல் 21 வார்டு வரை ஒரு சில பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சிப்பத்தில் ஈரோடு மாநகராட்சியில் 1&வது வார்டு முதல் 11&வது வார்டு வரையும், 16&வது வார்டு முதல் 20&வது வார்டு வரையும், 30&வது வார்டு முதல் 36&வது வார்டு வரையும், 41, 43, 44, 45 ஆகிய வார்டுகளும், 12, 13, 21, 22, 29, 42 ஆகிய வார்டுகளில் ஒரு சில பகுதிகளும், வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 2, 3, 4, 5 ஆகிய வார்டுகளும், 1&வது வார்டு, 6&வது வார்டு முதல் 9&வது வார்டு வரை ஒரு சில பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது சிப்பத்தில் பெரியசேமுர் நகராட்சியில் 1&வது வார்டு முதல் 18&வது வார்டு வரையும், வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 10, 11, 13 மற்றும் 14&வது வார்டு பகுதியும், 1, 6 முதல் 9&வது வார்டு வரை, 12, 15, 16, 18 முதல் 21&வது வார்டு வரை ஒரு சில பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. நான்காவது சிப்பத்தில் காசிபாளையம் நகராட்சியில் 6 முதல் 18 வார்டு வரையும், 4, 5, 19, 20 ஆகிய வார்டுகளில் ஒரு சில பகுதிகளும் பாதாள சாக்கடை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐந்தாவது சிப்பமாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

இந்த பாதாள சாக்கடை திட்டம் 498.6 கி.மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. மேலும் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலமாக கொண்டு வரப்படும் கழிவுநீரை சுத்திகரிக்க பீளமேடு என்ற இடத்தில் 18.27 ஏக்கர் பரப்பளவில் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டு கழிவுநீரை சுத்தப்படுத்தி ஆற்றில் விடும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 3 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை கட்டும் பணிகள் ஒவ்வொரு சிப்பமாக தொடங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாதாள சாக்கடை செல்லும் குழாய்கள் பதிக்க பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இரவு, பகலாக பணிகள் நடைபெற்று வருகிறது. குழாய்கள் அமைக்க ரோடுகளை தோண்டுவதால் கடந்த சில நாட்களுக்கு பெய்த மழையினால் ரோடுகள் மிக வும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை கட்டும் பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில் பழுதடைந்த ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

 

அண்ணா சாலையில் கட்டப்படும் 2 பாலங்களுக்கான தூண்கள் மார்ச்சுக்குள் அமைக்கப்படும்

Print PDF

தினகரன்              09.12.2010

அண்ணா சாலையில் கட்டப்படும் 2 பாலங்களுக்கான தூண்கள் மார்ச்சுக்குள் அமைக்கப்படும்

சென்னை, டிச.9: சென்னை அண்ணா சாலையில் கட்டப்படும் இரண்டு மேம்பாலங்களுக்கான தூண்கள் அமைக்கும் பணி, 2011ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறினார்.

தமிழக அரசின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், அடையாறு திரு.வி.. பாலம் அருகே மூன்று வழித்தட உயர்மட்ட பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. சென்னை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், புதிய பாலத்துக்கான அடிக்கல் நாட்டி பேசியதாவது:

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில், தொடர்ந்து பாலங்கள் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை முக்கிய பகுதிகளை இணை க்கும் அடையாறு திரு. வி.. பாலம் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையொ ட்டி, தற்போது உள்ள பாலத்தை ஒட்டியே 333 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலம் கொண்ட 3 வழிப்பாதையுடன் ரூ13 கோடியில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இந்த புதிய பாலத்தின் பணிகளை 15 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை முக்கிய பகுதிகளை இணை க்கும் அடையாறு திரு. வி.. பாலம் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையொ ட்டி, தற்போது உள்ள பாலத்தை ஒட்டியே 333 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலம் கொண்ட 3 வழிப்பாதையுடன் ரூ13 கோடியில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இந்த புதிய பாலத்தின் பணிகளை 15 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர சென்னையில் திருமங்கலம், அண்ணா நகர், முகப்பேர் பகுதிகளை இணைக்கும் சந்திப்பில் ரூ47 கோடியில் புதிய பாலம் அமைக்க இன்னும் 10 நாட்களில் அடிக்கல் நாட்டப்படும். அதேபோல், அண்ணா சாலையில் புதிய தலைமைச் செயலகம் & பட்டுல்லா சாலை இடையே ரூ1.8 கி.மீ., நீளத்துக்கு ரூ161 கோடியில் 4 வழிப் பாதையுடன் கூடிய மேம்பாலமும், அண்ணா அறிவாலயம் அருகில் இருந்து சைதாப்பேட்டை, மாம்பலம் கால்வாய் வரை 2.9 கி.மீ., நீளத்துக்கு நான்கு வழிப்பாதையுடன் கூடிய மேம்பாலம் ரூ339 கோடி செலவிலும் கட்டப்பட உள்ளது. அண்ணா சாலையில் அமைக்கப்படும் 2 பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி, 2011 மார்ச் மாதத்துக்குள் முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசினார். ரூ8 கோடியில் பழைய பாலங்கள் சீரமைப்பு

விழாவில் மேயர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "சென்னையில் வைத்தியநாதன் பாலம், கிண்டி பாலம், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மேம்பாலம், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள ஸ்டான்லி பாலம் ஆகியவற்றை ரூ8 கோடியே 39 லட்சம் செலவில் வலுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

அடையாறு திருவிக பாலம் அருகே ரூ13 கோடியில் கட்டப்பட உள்ள உயர் மட்ட பாலப்பணிக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

சென்னை திருமங்கலத்தில் ரூ 47 கோடி செலவில் மேம்பாலம்: அமைச்சர் தகவல்

Print PDF

தினமணி             08.12.2010

சென்னை திருமங்கலத்தில் ரூ 47 கோடி செலவில் மேம்பாலம்: அமைச்சர் தகவல்

சென்னை, டிச.8: சென்னையில் திருமங்கலம் சந்திப்பில் அண்ணாநகர்-முகப்பேரை இணைக்கும் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அடையாறு திரு.வி..பாலம் அருகே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன் இன்று அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவர் பேசுகையில், சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அடையாறு திரு.வி..பாலம் அருகே உயர்மட்டப் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்பாலம் 11 மீட்டர் அகலம், 333 மீட்டர் நீளம் கொண்ட மூன்று வழித்தடம் மற்றும் ஒரு பக்கம் மட்டும் நடைபாதையுடன் அமைக்க வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பாலம் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். அண்ணாசாலையில் இரண்டு தொடர் பாலங்கள் கட்ட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரூ.161 கோடி செலவில் அண்ணா சாலையில் புதிய தலைமைச்செயலகம் அருகில் தொடங்கி பட்டுலாஸ் சாலை சந்திப்பு வரை அமைந்துள்ள வாலாஜா சாலை, பிளாக்கர்ஸ் சாலை, டேம்ஸ் சாலை, ஜெனரல் பேட்டர்ஸ் சாலை (திரு.வி..சாலை), எத்திராஜ் சாலை சந்திப்புகளை ஒருங்கிணைத்து சுமார் 1.8 கி.மீ.நீளத்திற்கு நான்கு வழித்தடம் கொண்ட மேம்பாலம் அமைக்க அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ரூ.339 கோடி செலவில், அண்ணா அறிவாலயம் அருகே தொடங்கி சைதாப்பேட்டை மாம்பலம் வாய்க்கால் வரை சுமார் 2.9 கி.மீ.நீளத்திற்கு, தியாகராயர் சாலை எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, பாரதிதாசன் சாலை, செனடாப் சாலை, வெங்கட நாராயணா சாலை சேமியர்ஸ் சாலை, சி..டி. நகர் முதல் பிரதான சாலை சந்திப்புகளை ஒருங்கிணைத்து நான்கு வழித்தட மேம்பாலம் அமைக்கவும் அரசு கொள்கை அளவில் ஒப்புகை அளித்துள்ளது.

ரூ.47 கோடி செலவில் திருமங்கலம் சந்திப்பில் அண்ணாநகர் - முகப்பேர் இணைக்கும் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் கூறியதாக மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு மேயர் மா.சுப்ரமணியன் தலைமை வகித்தார். நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலர் கோ.சந்தானம் , எஸ்.வி.சேகர் எம்.எல்., மண்டலக்குழு தலைவர் மு.ஜெயராமன், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் பா.அரிராஜ், தலைமைப் பொறியாளர் தி.சேகர், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளர் அபிஷேக்ராஜ் நாதன் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 09 December 2010 11:41
 


Page 94 of 238