Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ1 கோடியில் நகராட்சி அலுவலகம் திறக்க வரும் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு பேரணாம்பட்டு நகராட்சி தீர்மானம்

Print PDF

தினகரன்              02.12.2010

ரூ1 கோடியில் நகராட்சி அலுவலகம் திறக்க வரும் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு பேரணாம்பட்டு நகராட்சி தீர்மானம்

பேரணாம்பட்டு, டிச.2: ரூ1 கோடியில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்தை திறந்து வைக்க வரும் துணை முதல்வர் மு..ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று பேரணாம்பட்டு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரணாம்பட்டு நகராட்சி கூட்டம் நேற்று அதன் தலைவர் ஆலியார்ஜுபேர் அஹமத் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர் பெண்ணரசி சிவசத்தியமூர்த்தி, கவுன்சிலர்கள் அப்துல்ஜமீல், ஜானகிபீட்டர், முஹமத்ஆகில், துரைமுருகன், சித்திக், மீராஞ்சிசலீம், சாம்ராஜ், மனோஜோசப், ரூபி நீலமேகன், ஜாகிதாஅஹமத், ஜுபேர், லாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ரூ1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரணாம்பட்டு நகராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை விரைவில் திறந்து வைக்க பேரணாம்பட்டிற்கு வருகை தரும் தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலினுக்கு நகராட்சி சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பளிப்பது என்று தீர்மானிக்கப் பட்டது.

மேலும் புதியதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்தில் கணினி அறைக்கு பேரணாம்பட்டை சேர்ந்த மறைந்த கல்வியாளர் மரீத் ஹாஜி முஹமத் இஸ்மாயில் பெயரை சூட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

 

ஆறுமுகனேரி பேரூராட்சிக்கு ரூ. 23 லட்சத்தில் புதிய கட்டடம்

Print PDF

தினமணி            30.11.2010

ஆறுமுகனேரி பேரூராட்சிக்கு ரூ. 23 லட்சத்தில் புதிய கட்டடம்

ஆறுமுகனேரி, நவ. 29: ஆறுமுகனேரி தேர்வுநிலை பேரூராட்சிக்கு ரூ. 23 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆறுமுகனேரி பேரூராட்சியின் கூட்டம், அதன் தலைவர் சா.பொன்ராஜ் தலைமை யில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள் வருமாறு: குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் ஆழ்குழாய் மூலம் தண்ணீர் பெறும் பொது நல்லி அமைப்பது, 2010-11-ம் ஆண்டு சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் 11-வது வார்டு அய்யாத்துரைபுரம், 3-வது வார்டு எஸ்.எஸ்.கோயில்தெரு, 6-வது வார்டுகந்தசாமிபுரம்,9-வது வார்டு மணக்காடு, 5-வது வார்டு ஏஐடியூசி காலனி மற்றும் 18-வது வார்டு பெருமாள்புரம் ஆகிய பகுதிகளில் சிமென்ட் சாலைகள் அமைப்பது.

மழைக்காலங்களில் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க மழைநீர் சேகரிக்கும் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

 

பூங்காங்களுக்கு ரூ. 24.65 லட்சத்தில் சுற்றுச்சுவர்

Print PDF

தினமலர்           30.12.2010

பூங்காங்களுக்கு ரூ. 24.65 லட்சத்தில் சுற்றுச்சுவர்

உள்ளகரம் : உள்ளகரம்-புழுதிவாக்கம் நகராட்சியில் உள்ள, பூங்காக்களுக்கு 24.65 லட்ச ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் அமைப்பது, என மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உள்ளகரம்-புழுதிவாக்கம் நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கிரிஜா முன்னிலை வகித்தார். துணை தலைவர் குமரமணிகண்டன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 9.5 லட்ச ரூபாய் செலவில் நகராட்சி பொது நிதி மூலம் சாலை அமைப்பது; சாரதிநகர், அன்னை தெரசா நகர், பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள, பூங்காக்களுக்கு 24.65 லட்ச ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் அமைப்பது; என்.எஸ்.சி., போஸ் சாலையை 16.50 லட்ச ரூபாய் செலவில் அமைப்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Wednesday, 01 December 2010 07:21
 


Page 96 of 238