Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

இன்று முதல் மாநகராட்சி எரிவாயு தகனமேடை செயல்படும்

Print PDF

தினமலர்                   20.11.2010

இன்று முதல் மாநகராட்சி எரிவாயு தகனமேடை செயல்படும்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி எரிவாயு தகன மேடை இன்றில் இருந்து வழக்கமாக செயல்படும். இனிமேல் இதில் தான் பிணத்தை எரிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.சுற்றுப்புறசூழலை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி, நகராட்சிகளில் எரிவாயு தகன மேடை அமைக்க தமிழக அரசு 47 லட்ச ரூபாய் அனுமதியளித்தது. தூத்துக்குடி மாநகராட்சியிலும் சிதம்பரநகர் மையவாடியில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.

இந் நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு அனாதை பிணம் ஒன்று எரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில் இந்த எரிவாயு தகனமேடை பராமரிப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது சம்பந்தமாக மாநகாட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. பிணம் எரித்து சோதனை செய்த பிறகு மாநகராட்சி அதிகாரிகள் அந்த தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உடனடியாக எரிவாயு தகன மேடை பொறுப்பை ஏற்குமாறு வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து அந்த நிறுவனம் அதற்கான பொறுப்பை ஏற்று உடனடியாக இனிமேல் பிணம் எரிக்கும் பணியினை மேற்கொள்வதாக மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜகோபாலன் ஆகியோரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்று முதல் எரிவாயு தகன மேடை செயல்பட துவங்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இனிமேல் தூத்துக்குடியில் எல்லா பிணத்தையும் எரிவாயு தகன மேடையில் வைத்து தான் எரிக்க வேண்டும் என்பதுகட்டாயமாக்கப்படும். இது சம்பந்தமாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் முடிவு செய்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

பாதாள சாக்கடைத் திட்டம்: 2012-ல் நிறைவடையும்: ஆட்சியர்

Print PDF

தினமணி              19.11.2010

பாதாள சாக்கடைத் திட்டம்: 2012-ல் நிறைவடையும்: ஆட்சியர்

ஈரோடு, நவ. 18: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், வரும் 2012-ல் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியர் தா.சவுண்டையா தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சி மற்றும் பெரியசேமூர், வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளை இணைத்து, ரூ.209.22 கோடி மதிப்பில் பாதள சாக்கடை அமைப்பதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐந்து பகுதிகளாக நடைபெறும் இக்கட்டுமானப் பணிகளில், தற்போது பிரிவு 1 மற்றும் பிரிவு 3 பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணிக்கம்பாளையம், பெரியார் நகரில் நடைபெறும் பாதாள சாக்கடை கட்டுமானப் பணியை, மல்லிகை நகர் நீரேற்று நிலையப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மேலும், ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் காந்திஜி சாலை மகப்பேறு மருத்துவமனை, ரூ.3 கோடி மதிப்பில் நடைபெறும் மாநகராட்சி அலுவலக கட்டுமானப் பணிகளையும் அவர் புதன்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஈரோடு மாநகராட்சி சார்பில் நடைபெறும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், 5 பிரிவுகளாக நடைபெறுகின்றன. தற்போது 1 மற்றும் 3 ஆகிய பிரிவுகளில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், 3 பிரிவு பணிகள் விரைவாக நடைபெறுகின்றன.

ஆனால் 1-வது பிரிவு பணி, சரிவர நடைபெறவில்லை. எனவே, அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை ஈடுபடுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற 3 பிரிவுகளுக்கும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் 2012 மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. காந்திஜி சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுவது தொடர்பாக, அரசிடம் ஆலோசனை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரப் சாலையில் 80 அடி சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அரசு ஆலோசனை பெற்று, அதன்படி செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். மாநகராட்சிப் பொறியாளர் வடிவேல், பாதாள சாக்கடை திட்டப் பொறியாளர் ஞானமணி, செயற் பொறியாளர்கள் முருகானந்தம், சுகந்தி உடனிருந்தனர்.

 

கலையரங்கம் திறப்பு

Print PDF

தினமணி          19.11.2010

கலையரங்கம் திறப்பு

புதுச்சேரி, நவ. 18: புதுச்சேரி உழவர்கரை நகராட்சி குறிஞ்சி நகர்ப் பகுதியில் உள்ள பூங்காவில் 83 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.9.17 லட்சம் செலவில் கட்டப்பட்ட கலையரங்கம் அண்மையில் திறக்கப்பட்டது. ÷லாஸ்பேட்டை தொகுதி எம்எல்ஏவும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ஷாஜகானின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.17 லட்சம், கடந்த 2008- 09-ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன.

÷உள்ளாட்சித் துறை அமைச்சர் எ.நமச்சிவாயம், கலையரங்கத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் ஷாஜகான், கவுன்சிலர் கே.ருக்மணி, குறிஞ்சி நகர் நலவாழ்வுச் சங்க நிர்வாகிகள் புருஷோத்தமன், பீட்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 100 of 238