Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மாநில அரசு முடிவு பாரபுல்லா சாலை டிசம்பர் 1ல் திறப்பு

Print PDF

தினகரன்                    19.11.2010

மாநில அரசு முடிவு பாரபுல்லா சாலை டிசம்பர் 1ல் திறப்பு

புதுடெல்லி, நவ. 19: பாரபுல்லா மேம்பாலம் பொதுமக்களுக்கு டிசம்பர் 1ம் தேதி திறக்கப்படுகிறது. இப்பகுதியில் போக்குவரத்தை சீர்படுத்துவது குறித்த தயார் நிலையில் உள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியை கருத்தில்கொண்டு இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது. இது கிழக்கு டெல்லியில் உள்ள விளையாட்டு கிராமத்தில் இருந்து வீரர்களும் அதிகாரிகளும் ஜவஹர்லால் நேரு மைதானத்துக்கு, போக்குவரத்து நெருக்கடி இல்லாமல், எளிதில் வருவதற்காக அமைக்கப்பட்டது. ஆனால், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்த சாலை இதுவரை திறக்கப்படவில்லை.

பொதுப்பணித் துறை, டெல்லி நகராட்சி அதிகாரிகள் மற்றும் டெல்லி போக்குவரத்து துறை போலீசார் கடந்த மாத இறுதியில் இந்த சாலையில் சோதனை நடத்தினர். போக்குவரத்தை முறைப்படுத்துவதை பற்றி அப்போது அதிகாரிகள் பரிசீலித்து வந்தனர். இப்போது போக்குவரத்தை சீர்படுத்தும் திட்டம் முழுமை அடைந்துள்ளது. இதன்படி, ஜவஹர்லால் நேரு மைதானம் அருகே சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது.

இதைத்தொடர்ந்து வரும் 1ம் தேதி முதல் பாரபுல்லா மேம்பாலத்தை பொதுமக்களுக்கு திறந்து விட அரசு முடிவு செய்துள்ளது. பாரபுல்லா மேம்பாலம் 4 கி.மீ. நீளம் கொண்டது. ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு டெல்லியில் இருந்து மத்திய டெல்லிக்கு இந்த சாலையில் 10ல் இருந்து 12 நிமிடத்துக்குள் வந்து விடலாம். ஆஷ்ரம், லஜ்பத் நகர், தெற்கு விரிவு, பைரான் சாலை, மதுரா சாலை ஆகியவற்றில் வழக்கமாக இருக்கும் போக்குவரத்து நெருக்கடி இந்த சாலை திறப்புக்கு பின் குறைந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் கட்ட பணியாக இச்சாலை ஐஎன்ஏ வரை விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களில் இப்பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மாநகராட்சி பாதாள சாக்கடை பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

Print PDF

தினமலர்                 18.11.2010

மாநகராட்சி பாதாள சாக்கடை பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் நடக்கும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். ஈரோடு மாநகராட்சியில், 209.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் சவுண்டையா நேற்று ஆய்வு செய்தார். ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள், ஆழ்துளை தொட்டி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு குழாய் அளவு, தொட்டியின் அளவு, எவ்வளவு ஆழத்தில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அளந்து ஆய்வு செய்தார். விரைவில் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு மல்லிகை நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீரேற்று நிலையம் சிப்பம் எண் 3ன் கட்டும் பணியை ஆய்வு செய்தார். சாக்கடை நீரேற்று நிலையத்தின் மொத்த அகலம், ஆழம், நீர் வெளியேற்றும் பகுதி எவ்வாறு அமைக்கப்படுகிறது என அதிகாரிகளை கேட்டறிந்தார். கட்டப்பட்டுவரும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கம்பி, ஜல்லி, சிமென்ட், மணல் உள்ளிட்ட பொருட்கள் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்தார். இதிலிருந்து வெளியேற்றப்படும் சாக்கடை நீர் பீளமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. பெரியார் நகர் சாக்கடை நீரேற்று நிலையம் சிப்பம் எண் 1ன் கட்டும் பணியை ஆய்வு செய்தார். அப்போது பணிகள் இன்னும் தொடங்காமல் இருந்ததை பார்த்த கலெக்டர் ஒப்பந்ததாரரின் மேலாளரை அழைத்து உடனடியாக பணிகளை துவங்க உத்தரவிட்டார்.

பெரியார் நகர், ராஜா கார்டன் வீதியில் அமைக்கப்பட்டு வரும் சாக்கடை கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். காந்திஜி சாலையில் மாநகராட்சி சார்பில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தாய்சேய் நல விடுதியையும் ஆய்வு செய்தார். கலெக்டர் சவுண்டையா கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஐந்து பிரிவுகளாக 209 கோடி ரூபாய் மதிப்பில் மார்ச் 2010 முதல் பாதாள சாக்கடை கட்டும் பணிகள் நடக்கிறது. இதில் முதல் மற்றும் மூன்றாவது சிப்பம் கட்டும் பணிகள் தற்போது நடக்கிறது. மூன்றாவது சிப்பம் கட்டும் பணி சிறப்பாக நடக்கிறது. இப்பணி விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறேன். முதலாவது சிப்பம்கட்டும் பணிக்கான கட்டுமான பணி இன்னும் துவங்கப்படவில்லை. அந்த ஒப்பந்ததாரரை அழைத்து உடனடியாக பணியை துவக்க உத்தரவிட்டுள்ளேன். மற்ற மூன்று பணிகளும் ஒப்பந்தபுள்ளிகள் கோரும் நிலையில் உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். இப்பணிகள் அனைத்தும் 2012 மார்ச்சுக்குள் முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி இன்ஜினியர் வடிவேல் உடனிருந்தார்.

Last Updated on Thursday, 18 November 2010 06:53
 

திருவண்ணாமலை பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

Print PDF

தினகரன்                  18.11.2010

திருவண்ணாமலை பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

திருவண்ணாமலை, நவ. 18: திருவண்ணாமலையில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் நேற்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை நேற்று நகராட்சி நிர்வாக இயக்குனர் பி.செந்தில்குமார், கலெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருமஞ்சன கோபுரத் தெரு, செங்கம் சாலை ஆகிய இடங்களில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை ஆய்வு செய்த நிர்வாக இயக்குனர், உடனடியாக பணிகளை முடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து, தீபத் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் கழிவறை வசதி, மின் விளக்கு வசதி, பக்தர்கள் தங்குவதற்கான ஓய்வு அறைகள் உள்ளிட்ட வசதிகளை அவர் பார்வையிட்டார்.

பக்தர்களுக்கு தேவையான வசதிகளை முழுமையாக நகராட்சி சார்பில் செய்துத்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குளோரின் கலந்த குடிநீரை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்றார்.

ஆய்வின்போது, நகராட்சித் தலைவர் இரா.திருமகன், துணைத் தலைவர் ஆர்.செல்வம், நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் பிச்சை, மண்டல இயக்குனர் எஸ்.பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


Page 101 of 238