Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ஜனவரியில் பணி முடியும் வைத்தியநாதன் மேம்பாலம் ரூ80 லட்சத்தில் புதுப்பிப்பு

Print PDF

தினகரன்               11.11.2010

ஜனவரியில் பணி முடியும் வைத்தியநாதன் மேம்பாலம் ரூ80 லட்சத்தில் புதுப்பிப்பு

தண்டையார்பேட்டை, நவ. 11: தண்டையார்பேட்டையில் உள்ள வைத்தியநாதன் மேம்பாலம் ரூ80 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலத்தின் பக்கவாட்டு சுவர், பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சர்வீஸ் சாலை பணிகளை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:

கடந்த 1983ல் கட்டப்பட்ட இந்த பாலம் மோசமான நிலையில் இருந்தது. பாலத்தை பலப்படுத்தவும், அழகுபடுத்தவும்

ரூ80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலத்தின் கீழ் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தடுப்புச் சுவர் கட்டப்படும். மேலும், மழைநீர் வடிகால்வாயுடன் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட உள்ளது. இந்த பணி வரும் ஜனவரிக்குள் முடிவடையும்.

பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள தண்டையார்பேட்டை இளைய முதலி தெரு சாலை ரூ2 கோடியே 20 லட்சம் செலவில் சிமென்ட் சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும். இவ்வாறு மேயர் சுப்பிரமணியன் கூறினார்.

 

சென்னையில் ரூ.450 கோடியில் 4 பாலங்கள் அமைக்க முடிவு

Print PDF

தினமலர்                       10.11.2010

சென்னையில் ரூ.450 கோடியில் 4 பாலங்கள் அமைக்க முடிவு

சென்னை : சென்னை பெருநகர வளர்ச்சி பகுதியில், முன்னுரிமை அடிப்படையில் நான்கு மேம்பாலப் பணிகளை 450 கோடி ரூபாயில் அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க, அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இதில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 300 கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி பகுதியில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட போக்குவரத்து வசதி பணிகளில் சிலவற்றை முதற்கட்டமாக தேர்வு செய்து, அவற்றுக்கு ஆலோசகர்களை நியமித்து, திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதிக்குமாறு, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர், அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி, நான்கு இடங்களில் திட்ட மதிப்பில் 1 சதவீதத்துக்கு மிகாமல், தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் திட்ட நிதியை பயன்படுத்தி, திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசகரை நியமிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நான்கு மேம்பாலங்கள் அமைக்கப்படும் இடங்கள் வருமாறு:

* ஜி.எஸ்.டி., சாலையில் பல்லாவரத்தில் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.65 கோடி மதிப்பில் மேம்பாலம்.

* வேளச்சேரியில் விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச் சாலைகள் இணையும் இடத்தில் ரூ.50 கோடியில் மேம்பாலம்.

* உள்வட்ட சாலையில் கொளத்தூர் அருகே ரெட்டைஏரி பகுதியில், பெரம்பூர் - செங்குன்றம் சாலை சந்திப்பில் ரூ.50 கோடியில் மேம்பாலம்.

* ஈ.வெ.ரா., நெடுஞ்சாலையில் (பூந்தமல்லி நெடுஞ்சாலை) ராஜாமுத்தையா சாலை சந்திப்பு முதல், அமைந்தகரை புல்லா அவென்யூ சந்திப்பு வரை உள்ள சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.300 கோடியில் மேம்பாலம். இவ்வாறு நான்கு மேம்பாலங்களை மொத்தம் 465 கோடி ரூபாய் மதிப்பில் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு, நிர்வாக ஒப்புதல் அளித்து, நெடுஞ்சாலைத் துறை செயலர் சந்தானம் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் 3 இடங்களிலும் அமைக்க முடிவு ரிப்பன் மாளிகை & அமைந்தகரை 5 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம்

Print PDF

தினகரன்              10.09.2010

மேலும் 3 இடங்களிலும் அமைக்க முடிவு ரிப்பன் மாளிகை & அமைந்தகரை 5 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம்

சென்னை, நவ. 10: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரிப்பன் மாளிகை முதல் அமைந்தகரை மார்க்கெட் வரை 5 கி.மீ. தூரத்துக்கு புதிய மேம்பாலம் மற்றும் வேளச்சேரி விஜயநகரம், பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலை, கொளத்தூர் இரட்டை ஏரி பகுதி ஆகிய இடங்களிலும் புதிய மேம்பாலங்களை ரூ465 கோடியில் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய சாலை சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்கும் பணியில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கோயம்பேடு, கிண்டி, பாடியில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணாசாலை, வடபழனி, திருமங்கலம், அண்ணாநகர் ஆர்ச் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளது.

இந்நிலையில் சென்னையில் கூடுதலாக 4 இடங்களில் ரூ465 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும்படி தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை பெருநகர வளர்ச்சித் துறைக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து நேற்று அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட உள்ள 4 மேம்பாலங்கள் விவரம் வருமாறு:

* பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து புதிய மேம்பாலம் அமைக்கப்படுகிறது. சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட உள்ள இந்த பாலம் ரூ65

கோடியில் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

* வேளச்சேரியில் விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச் சாலைகள் இணையும் இடத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கு ரூ50 கோடியில் திட்ட அறிக்கை அளிக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது 3 சாலைகள் சந்திக்கும் முக்கிய இடம் ஆகும். இந்த புதிய மேம்பாலம் அமைந்தால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

* கொளத்தூர் அருகில் இரட்டை ஏரி பகுதியில் பெரம்பூர்& செங்குன்றம் சாலை சந்திப்பில் ரூ50 கோடியில் மேம்பாலம்.

* பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் ராஜாமுத்தையா சாலை சந்திப்பு முதல் அமைந்தகரை புல்லா அவென்யூ சந்திப்பு வரை உள்ள சாலை சந்திப்புகளை இணைத்து மிக நீளமான மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ரூ300 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மேம்பாலம் ரிப்பன் மாளிகை எதிரே உள்ள சிக்னலில் இருந்து எழும்பூர், கீழ்ப்பாக்கம் இடையில் உள்ள சிக்னல்களை கடந்து அமைந்தகரை மார்க்கெட் சிக்னல் வரை சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட உள்ள மிக நீளமான மேம்பாலமாகும்.

4 புதிய மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க, திட்ட மதிப்பில் ஒரு சதவீதத்திற்கும் மிகாமல் தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் பொறுப்பில் உள்ள சுழற்சி நிதியினை பயன்படுத்திடவும், ஆலோசகர் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கவும் நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 


Page 105 of 238