Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ4.95 கோடியில் கட்டப்படுகிறது மாநகராட்சி புதிய கட்டிடம் 85 சதவீத பணிகள் முடிந்தது முதல்வர் வரும்போது திறக்க ஏற்பாடு

Print PDF

தினகரன்                 08.11.2010

ரூ4.95 கோடியில் கட்டப்படுகிறது மாநகராட்சி புதிய கட்டிடம் 85 சதவீத பணிகள் முடிந்தது முதல்வர் வரும்போது திறக்க ஏற்பாடு

வேலூர்,நவ.8: வேலூர் மாநகராட்சிக்கு கன்டோன்மென்ட் ரயில்நிலையம் அருகே புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ4 கோடியே 95 லட்சம் மதிப்பில் வாகனங்கள் நிறுத்த கீழ் தளம் மற்றும் தரைதளம், முதல்மாடி, 2வது மாடி என பிரமாண்டமான அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதுவரையிலும் 85 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. கட்டிடத்தின் உள்ளே டைல்ஸ் மற்றும் அறை கதவுகள் பொருத்தப்பட்டு விட்டன. குடிநீர் இணைப்பு, மின்சார வசதியும் செய்யப்பட்டு, இப்போது ஜன்னல் கண்ணாடிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகரமன்ற கூடம் மற்றும் அலுவலகங்களில் மேஜை, நாற்காலிகள் பொருத்தப்பட வேண்டியுள்ளது. லிப்ட் அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதேபோல் கட்டிடத்தின் முன்பு நீரூற்றுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டி உள்ளது.

இம்மாத இறுதியில் காட்பாடி அருகே சேர்க்காட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கான புதிய கட்டிடத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அப்போது புதிய மாநகராட்சி கட்டிடத்தையும் திறக்கும் வகையில் மீதியுள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

 

இந்த ஆண்டு இறுதிக்குள் பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சில் 7 நீரூற்றுகள் அமைக்க திட்டம்

Print PDF

தினகரன்                     08.11.2010

இந்த ஆண்டு இறுதிக்குள் பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சில் 7 நீரூற்றுகள் அமைக்க திட்டம்

பாந்த்ரா, நவ.8: பாந்த்ரா& குர்லா காம்ப்ளக்சை அழகுபடுத்தும் வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 7 செயற்கை நீரூற்றுகளை அமைக்க மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் (எம்.எம்.ஆர்.டி..) திட்டமிட்டுள்ளது.

மும்பையின் வர்த்தக மையமாக விளங்கி வரும் பாந்த்ரா&குர்லா காம்ப்ளெக்சை எம்.எம்.ஆர்.டி.. கட்டி இருக்கிறது. இந்த இடத்தை மேலும் அழகுபடுத்துவதற்காக 7 செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட உள்ளன. 7 நீரூற்றுகளும் காம்ப்ளக்சுக்குள்ளேயே அமைக்கப்பட உள்ளன. இந்த நீரூற்றுகளையும் செயற்கை குளங்களையும் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைக்க இருப்பதாக எம்.எம்.ஆர்.டி.. கமிஷனர் ரத்னாகர் கெய்க்வாட் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பல தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது வர்த்தக வளர்ச்சிக்காக பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சில் அலுவலகங்களை அமைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த காம்ப்ளக்சை நம்பர் ஒன் வர்த்தக வளாகமாக மாற்றுவதுதான் எம்.எம்.ஆர்.டி..வின் நோக்கம். காம்ப்ளக்சை மேலும் அழகுபடுத்தவே செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்படுகின்றனÓ என்றார்.

செயற்கை நீரூற்றுகளை அமைக்க முன்வந¢துள்ள நிறுவனங்களில் நபார்டு, நமன் குரூப், ஸ்டேட் வங்கி, .டி.பி.., டிரைடெண்ட் ஓட்டல் மற்றும் ரிலையன்ஸ் எனர்ஜி ஆகியவையும் அடங்கும். இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே இவை அமைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Last Updated on Monday, 08 November 2010 05:39
 

தேனியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர்             08.11.2010

தேனியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துவக்கம்

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சியில் 38.66 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கியது. நகராட்சியில் 22.23 சதுர கி.மீ., பரப்பளவுள்ள தெருக்களின் மொத்த நீளம் 78 கி.மீ., 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 85 ஆயிரத்து 724 பேர் உள்ளனர். 33 வார்டுகளும் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு 100 லிட்டர் கழிவு நீர் பெறப்பட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் நாளொன்றுக்கு 12.05 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட உள்ளது.

இதற்காக நகராட்சி பகுதியில் 56.70 கி.மீ., நீளத்துக்கு கழிவு நீர் தன்னோட்ட குழாய் அமைக்கப்படுகிறது. 2,332 கழிவு நீர் சேகரிக்கும் ஆள் நுழைவு தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. 15 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. கழிவு நீரேற்றும் நிலையம் கே.ஆர்.ஆர்.நகர், பங்களாமேடு, கருவேல்நாயக்கன்பட்டி பகுதிகளில் அமைகிறது. இத்திட்டத்திற்கான பூமி பூஜை கே.ஆர்.ஆர்., நகரில் நடந்தது. கலெக்டர் முத்துவீரன் திட்ட பணிகளை துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் பழனிச்சாமி, குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் ரத்தினவேல், நகராட்சி கமிஷனர் மோனி, பொறியாளர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 107 of 238