Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பாலக்கோடு பேரூராட்சியில் ரூ12.50 லட்சத்தில் புதிய மன்றக்கூடம் திறப்பு

Print PDF

தினகரன்                  29.10.2010

பாலக்கோடு பேரூராட்சியில் ரூ12.50 லட்சத்தில் புதிய மன்றக்கூடம் திறப்பு

பாலக்கோடு, அக்.29: பாலக்கோடு பேரூராட்சியில் ரூ12.5 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மன்றகூட திறப்பு விழா நடந்தது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி பொதுநிதியில் இருந்து ரூ12.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மன்ற கூட்டரங்கத்தை மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் திறந்து வைத்து பேசினார்.

முன்னதாக செயல் அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பேரூராட்சி தலைவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முருகன், பேரூராட்சி துணைத் தலைவர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் முரளி பேசும்போது, பாலக்கோடு அருகே மணியக்காரன்கொட்டாய் செல்லும் பாதையில் உள்ள சுடுகாடும் காவல்நிலையம் பின்புறம் உள்ள சுடுகாடு இவைகளை பாலக்கோடு பேரூராட்சியில் இணைத்து அடிப்படை வசதிகளை செய்ய உத்தரவு வழங்க ஆட்சியரை கேட்டுக்கொண்டார். ரூ12.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய மன்ற கூட்டரங்கை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். அருகில், பேரூராட்சி தலைவர் முரளி, அன்பழகன் எம்.எல்.., தர்மபுரி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் இன்பசேகரன் எம்.எல்.. ஒன்றிய குழுத்தலைவர் முருகன், மாவட்ட பொருளாளர் சூடப்பட்டி சுப்பிரமணி ஆகியோர் உள்ளனர். உள்படம்: புதிதாக கட்டப்பட்ட மன்ற கூட்டரங்கு.

நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் முரளி பேசும்போது, பாலக்கோடு அருகே மணியக்காரன்கொட்டாய் செல்லும் பாதையில் உள்ள சுடுகாடும் காவல்நிலையம் பின்புறம் உள்ள சுடுகாடு இவைகளை பாலக்கோடு பேரூராட்சியில் இணைத்து அடிப்படை வசதிகளை செய்ய உத்தரவு வழங்க ஆட்சியரை கேட்டுக்கொண்டார்.

விழாவில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ருக்மணி, சுபாஸ்போஸ், தாசில்தார் மணி, கவுன்சிலர்கள் ஜெயந்தி, சிவசங்கரி, முருகன் ஆசீப், கண்ணையன், சீனிவாசன், பாலகிருஷ்ணன், ஜீனத்பேகம், வகாப்ஜான், பத்தேகான், சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இளநிலை பொறியாளர் கிருபாகரன் நன்றி கூறினார்.

 

உப்பிடமங்கலம் டவுன் பஞ்.,ல் வணிக வளாகம் திறப்பு விழா

Print PDF

தினமலர் 29.10.2010

உப்பிடமங்கலம் டவுன் பஞ்.,ல் வணிக வளாகம் திறப்பு விழா

கரூர்: கரூர் அருகே உப்பிடமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வணிக வளாக கட்டிடம் திறப்புவிழா நடந்தது.

கட்டிடத்தை திறந்துவைத்து கலெக்டர் உமாமகேஸ்வரி பேசியதாவது: உப்பிடமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் 2009-10ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 54.06 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. லட்சுமணப்பட்டியில் 10 லட்சம் மதிப்பில் தார் சாலை, 13 லட்சம் ரூபாய் மதிப்பில் வாரச்சந்தையில் பஸ் நிறுத்தம் மற்றும் சமுதாயக்கூடம் அமைக்கப்பட்டது.டவுன் பஞ்சாயத்து அலுவலகம் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 2.76 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் தளம், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் உள்ளிட்டபல்வேறு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

நமக்கு நாமே திட்டத்தில், வடுகப்பட்டி செல்லும் சாலை 10.5 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலையாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் லிங்கத்தூர் ஆரம்ப பள்ளி முதல் மயானம் வரையில் 1.6 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட தி.மு.., பொறுப்பாளர் ராஜேந்திரன், டவுன் பஞ்சாயத்து தலைவர் ராஜலிங்கம், தாந்தோணி யூனியன் துணை தலைவர் ரகுநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

 

கிருஷ்ணகிரி நகராட்சியில் 37 கோடி புதைசாக்கடை திட்டம் தொடக்கம்

Print PDF

தினமணி 28.10.2010

கிருஷ்ணகிரி நகராட்சியில் 37 கோடி புதைசாக்கடை திட்டம் தொடக்கம்

கிருஷ்ணகிரி, அக்.27: கிருஷ்ணகிரி நகராட்சியில் 37 கோடி மதிப்பில் புதைசாக்கடைத் திட்டப் பணிகளை டி.செங்குட்டுவன் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தார் (படம்).

புதைசாக்கடைத் திட்ட தொடக்க விழா, இலவச காஸ் வழங்கும் விழா நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக ஆவின் மேம்பாலம் அருகே 8 கோடி செலவில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும் கழிவுநீர் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்பட்டு, ஏரிகள் மூலம் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும். கழிவுகள் எருவாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். முதல்கட்டமாக வார்டு 18 முதல் 33-வது வார்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் நகராட்சிக்கு சாலை மேம்பாட்டுக்காக தலா 1 கோடி, 800 பேருக்கு இலவச காஸ் அடுப்பு மற்றும் இணைப்புகளை எம்எல்ஏ டி.செங்குட்டுவன் வழங்கினார்.

எம்எல்ஏ கே.ஆர்.கே.நரசிம்மன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நாகராஜன், நகராட்சி ஆணையர் எம்..லோகநாதன், பர்கூர் ஊராட்சிமன்றத் தலைவர் வி.ஜி.இராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 112 of 238