Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பேரூராட்சி கூட்ட அரங்கு திறப்புவிழா

Print PDF

தினகரன்                28.10.2010

பேரூராட்சி கூட்ட அரங்கு திறப்புவிழா

பாலக்கோடு, அக்.28: பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் புதிய கூட்ட அரங்கம் ரூ.12.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கூட்ட அரங்கத்தின் திறப்பு விழா 28ம் தேதி (இன்று) நடக்கிறது.

பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் வரவேற்கிறார். மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் கூட்ட அரங்கத்தை திறந்துவைக்கிறார். தர்மபுரி எம்பி தாமரைச் செல்வன், பாலக்கோடு எம்எல்ஏ அன்பழகன், பேரூராட்சி தலைவர் முரளி, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் முல்லைவேந்தன், இன்பசேகரன், எம்எல்ஏக்கள் வேலுச்சாமி, டில்லிபாபு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வெங்கடேஸ்வரன், ஒன்றியக்குழு தலைவர் முருகன், பேரூராட்சி துணை தலைவர் பத்தேகான், உதவி இயக்குனர் ருக்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

 

ஒட்டன்சத்திரத்தில் ரூ.40 லட்சத்தில் சுரங்கப்பாதை அமைக்க பூமி பூஜை

Print PDF

தினகரன்                   28.10.2010

ஒட்டன்சத்திரத்தில் ரூ.40 லட்சத்தில் சுரங்கப்பாதை அமைக்க பூமி பூஜை

ஒட்டன்சத்திரம், அக். 28: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 5, 6, 7 வார்டு பொதுமக்கள் ரயில்வே பாதையை கடந்து செல்ல வசதியாக ரூ.40 லட்சம் செலவில் சுரங்கப்பாதை அமைக்க பூமி பூஜை விழா நடந்தது.

விழாவிற்கு திண்டுக்கல் எம்பி சித்தன் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலர் ஜோதீஸ்வரன், நகராட்சி துணை தலைவர் வனிதா ஆறுமுகம், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலர் முருகேசன், துணை தலைவர்கள் ராசியப்பன், சிவசுப்பிரமணியன், வட்டார தலைவர்கள் துரைச்சாமி, வேலுச்சாமி, ரயில்வே பொறியாளர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரன் நன்றி கூறினார்.

விழாவிற்கு முன்னிலை வகித்து அரசு தலைமை கொறடா அர.சக்கரபாணி பேசியதாவது:

நாடாளுமன்ற தேர்தலின் போது, ஒட்டன்சத்திரம் நகராட்சி 5, 6, 7வது வார்டு மக்களுக்கு சுரங்கப்பாதை அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. கொடுத்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

போக்குவரத்து வசதி இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் திமுக ஆட்சியில் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.2 கோடியில் பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 4 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

 

மாநகராட்சி மருத்துவமனையில் சமுதாய சமையல் கூடம்

Print PDF

தினகரன்                28.10.2010

மாநகராட்சி மருத்துவமனையில் சமுதாய சமையல் கூடம்

திருப்பூர், அக்.28: திருப்பூர் மாநகராட்சி கந்தசாமி செட்டியார் மகப்பேறு மருத்துவமனையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாரத் காஸ் நிறுவனம் சார்பில் சமுதாய சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம், பி.என்.ஜி., ஆகிய துறை களின் பரிந்துரையின்படி, மாநிலத்தில் ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களின் வசதிக்காக சமுதாய சமையல் கூட அமைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில் உள்ள திருப்பூர் மாநகராட்சி கந்தசாமி செட்டியார் மகப்பேறு மருத்துவமனையில் இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுடைய அவசரத்தேவைகளுக்கு சுடுநீர் தயாரித்தல், நோயாளிகளுக்குத் தேவை யான கஞ்சி தயாரித்தல், மருத்துவரின் ஆலோசனையின் படி நோயாளிகளுக்கும், உடன் இருக்கும் நபர்களுக்கும் தேவையான உணவுப்பொருட்களை தயார் செய்து கொள்ளவும் இந்த சமுதாய சமையல் கூடம் பயன்படும்.

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பாரத் காஸ் மற்றும் திருப்பூர் கவுரி துர்கா காஸ் ஏஜென்சீஸ் சார்பில், சமையல் அறை, மேடை வசதி, சிலிண்டர்கள், அடுப்பு, பர்னர், பால்குக்கர் உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த திட்டத்தின் துவக்க விழா மகப்பேறு மருத்துவ மனை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. திருப்பூர் மாநகராட்சி மேயர் செல்வ ராஜ் விழாவுக்கு தலைமை தாங்கினார். தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சமுதாய சமையல் கூடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் நலவாரியத் தலைவர் செல்லமுத்து, பாரத் பெட்ரோலியத்தின் மண்டல மேலாளர் தங்கவேல், மாநகராட்சி பொறியாளர் கவுதமன், மாநகர நல அலுவ லர் ஜவஹர்லால், கவுரி துர்கா காஸ் ஏஜென்சி நிர்வாகி சாமிவேலு, பாரத் பெட்ரோலியம் எல்.பி.ஜி. விற்பனை அதிகாரி கிரன்குமார் சிஹாரா, பிரேம்நாதன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

பாரத் பெட்ரோலியம் அமைத்தது திருப்பூர் அரசு மருத்துவமனையில் விரைவில் சமுதாய சமையல் கூடம்

இது தொடர்பாக பாரத் பெட்ரோலியத்தின் மண்டல மேலாளர் தங்கவேல் கூறுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் இதுபோன்ற சமுதாய சமையல் கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக கவுரி துர்கா காஸ் ஏஜென்சி சார்பில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் இத்திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து திருப்பூரில் மேலும் சில மருத்துவமனைகளில் இத்திட்டம் செயலாக்கப்படும். முதல் சில மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். பின்னர் அரைமணி நேரத்துக்கு ரூ3 என்ற அடிப்படையில் மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்," என்றார்.

 


Page 113 of 238