Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ஆரணியில் நவீனக் கழிப்பறை திறப்பு

Print PDF

தினமணி 25.10.2010

ஆரணியில் நவீனக் கழிப்பறை திறப்பு

கும்மிடிப்பூண்டி,அக். 24: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூராட்சியில் ரூ 15 லட்சம் செலவில் நவீன கழிப்பறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

÷கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூராட்சியின் 4-வது வார்டு தெலுங்கு காலனியில் திடக் கழிவு மேலாண்மை கிராமப்புற மக்கள் பயன்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நவீன கழிப்பறை கட்டப்பட்டது.

÷இதன் திறப்பு விழா, ஆரணி பேரூராட்சித் தலைவர் ஹேமபூஷணம் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் பாபு முன்னிலை வகித்தனர்.
÷விழாவில், ஆரணி பேரூராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலர் மேகலா ஜெகதீசன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேரூராட்சித் தலைவர் ஹேமபூஷணம் நவீன கழிப்பறையை திறந்து வைத்தார்.

÷இந்த விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கரிகாலன், கலா சீனிவாசன், சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

 

நவீன தொழில்நுட்ப முறையில் தொடக்கம் கோடம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் ரூ4.74 கோடி செலவில் சீரமைப்பு

Print PDF

தினகரன் 22.10.2010

நவீன தொழில்நுட்ப முறையில் தொடக்கம் கோடம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் ரூ4.74 கோடி செலவில் சீரமைப்பு

சென்னை, 22: கோடம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பழுது பார்த்து சீரமைக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கோடம்பாக்கம் நெடுஞ்சாலை&ஆற்காடு சாலையை இணைத்து ரயில் பாதையின் குறுக்கே கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பழமையான மேம்பாலம் தற்போது பழுதடைந்துள் ளது.

இதை பழுது பார்த்து சீரமைத்து அழகுபடுத்தும் பணி ரூ4.74 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கான பணிகள் இன்று (நேற்று) முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் 623 மீட்டர் நீளம் கொண்டது. இருபக்க நடைபாதையுடன் சேர்த்து 12.80 மீட்டர் அகலம் கொண்டது. பாலத்தில் உள்ள தூண்கள் மற்றும் உத்திரங்கள் மைக்ரோ கான்கிரீட் பயன்படுத்தி பழுது பார்த்தும், வெட்ராப்பிங் முறையில் வலுவூட்டப்படும். பாலத்தில் பழுதடைந்துள்ள அனைத்து பியரிங்களை மாற்றுவதற்காக மேல் தளங்கள் சிறப்பு பளுதூக்கிகள் (ஜாக்கி) மூலம் உயர்த்தி பியரிங்கள் மாற்றப்படவுள்ளன. பழுதடைந்துள்ள ஸ்டிரிப் சீல் இணைப்புகள், மழைநீர் குழாய்களும் மாற்றப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.

 

குறிச்சி நகராட்சியில் கொசு ஒழிப்பு வாகனம்

Print PDF

தினமலர் 22.10.2010

குறிச்சி நகராட்சியில் கொசு ஒழிப்பு வாகனம்

குறிச்சி : குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில், கொசு ஒழிக்க மருந்து தெளிக்கும் இயந்திரத்துடன் கூடிய வாகனம், மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று இயக்கப்பட்டது. போத்தனூரிலுள்ள குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவர் பிரபாகரன் வாகனத்தின் சாவியை சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரிடம் ஒப்படைத்து, பயன்பாட் டினை துவக்கி வைத்தார். துணைத்தலைவர் ஹனீபா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

நகராட்சி தலைவர் பிரபாகரன் கூறியதாவது: பெருகி வரும் கொசுக்களை கட்டுப்படுத்த, 8.8 லட்சம் ரூபாய் மதிப்பில் மருந்து தெளிப்பு இயந்திர வாகனம் வாங்கப் பட்டுள்ளது. நாள்தோறும் மூன்று முதல் நான்கு வார்டுகளில் மருந்து தெளிக்கும் பணி நடக்கும். சாக் கடை நீர் கால்வாய்களில் போடப் படும் பிளாஸ்டிக் கவர்களால், கழிவுநீர் செல்லாமல் தேங்கிவிடுகிறது. கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. அதுபோல, குப்பை மற்றும் கழிவுகளையும் சாக்கடையில் போடக்கூடாது.அனைத்து வார்டுகளிலும், வீடுகளிலிருந்து குப்பைகள் சேகரிக்க கைவண்டியுடன் துப்புரவு பணியாளர்கள் வருகின்றனர். கழிவுகளை சேகரித்து வைத்து, அவர்களிடம் கொடுக்கவேண்டும்.

8.64 லட்சம் ரூபாயில், 18 கன்டெய்னர்கள் செய்யப்பட் டுள்ளன. இவை, அனைத்து வார்டுகளிலும் அதிகளவு குப்பை சேரும் பகுதிகளில் வைக்கப்படும். பொதுமக்கள், தங்களது வீடுகளின் முன் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதன்மூலம், கொசு உற்பத்தியை தவிர்த்து, தொற்றுநோய் பரவுவதை தவிர்க்கலாம். சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்க, நகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உதவவேண்டும். இவ்வாறு பிரபாகரன் தெரிவித்தார்.

 


Page 114 of 238