Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

குற்றாலத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்காக்கள் நாளை திறப்பு

Print PDF

தினமணி 19.10.2010

குற்றாலத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்காக்கள் நாளை திறப்பு

தென்காசி, அக். 18: குற்றாலத்தில் ரூ. 65 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்காங்கள், சுற்றுலா வரவேற்பு மையம் ஆகியவற்றின் திறப்பு விழா புதன்கிழமை (அக். 20) நடைபெறுகிறது. குற்றாலத்தில், மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ. 13.74 லட்சம் செலவில் பேரூராட்சி செயல் அலுவலர் அலுவலகம் மற்றும் ஐந்தருவி செல்லும் பாதையில் சுற்றுலா வரவேற்பு மையம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. வைரம்ஸ் நகர் பகுதியில் ரூ. 7.05 லட்சம் செலவில் புதிதாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. புலியருவி பகுதியில் ரூ. 11.50 லட்சம் செலவில் நவீன கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரூ. 14.43 லட்சத்தில் சிறுவர் பூங்காவும், ரூ 18.35 லட்சத்தில் விஸ்வநாதராவ் பூங்காவும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் பணிகள் முடிவடைந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதன்கிழமை (அக். 20) முதல் செயல்படவுள்ளன. அன்றைய தினம் மாலையில் நடைபெறும் விழாவில், தென்காசி எம்எல்ஏ வீ. கருப்பசாமிபாண்டியன், மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் ஆகியோர் திறந்துவைக்கின்றனர். விழா ஏற்பாடுகளை, பேரூராட்சி மன்றத் தலைவர் இரா. ரேவதி, துணைத் தலைவர் பா. ராமையா, பேரூராட்சி செயல் அலுவலர் கொ. ராஜையா மற்றும் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

 

ரூ.1 கோடியில் சிமென்ட் தளம் அரியலூர் பஸ் நிலையத்தில் மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்

Print PDF

தினகரன் 19.10.2010

ரூ.1 கோடியில் சிமென்ட் தளம் அரியலூர் பஸ் நிலையத்தில் மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்

அரியலூர், அக். 19: அரியலூர் பேருந்து நிலையத்தில் ரூ.1 கோடியில் சிமென்ட் தளம் அமைக்கும் பணிக்கு மத்திய அமைச்சர் ராசா அடிக்கல் நாட்டினார். அரியலூர் நகராட்சி சார்பில் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டம் 2009&10ன் கீழ் பேருந்து நிலையத்தில் உள்புற பகுதியில் ரூ.1 கோடியில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் விஜயலட்சுமி செல்வராஜன் வரவேற்றார்.

எம்எல்ஏக்கள் பாளை.அமரமூர்த்தி, சிவசங்கர், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பொன்னுசாமி தலைமை வகித்தார். சிமென்ட் தளம் அமைக்கும் பணியை மத்திய அமைச்சர் ராசா துவக்கி வைத்தார். மேலும் 12 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.4000 மதிப்பில் 3 சக்கர சைக்கிள், ஒரு மாற்று திறனாளிக்கு காதொலி கருவி, உடையார்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகத்திற்கு இயற்கை மரணத்திற்கான நிதியுதவி ரூ.17,000 சேர்த்து ரூ.70,200 மதிப்பிலான நலஉதவி வழங்கினார். பின்னர் மத்திய அமைச்சர் ராசா பேசியதாவது:

அரியலூர் நகராட்சியில் அடிப்படை உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின் அரியலூர் பேருந்து நிலைய உட்புற பகுதியில் ரூ.1 கோடியில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின் மானியம் ரூ.70 லட்சம், நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.30 லட்சம் சேர்த்து ரூ.1 கோடியில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி நடக்கிறது. அரியலூர் நகரத்திற்கு ரூ.27.50 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டமும் இன்று துவங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 38 கி.மீ. தூரத்திற்கு உட்பட்ட பகுதிகளின் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் அரியலூர் நகராட்சி வசிக்கும் 10,400 குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பயன்பெறுவர் என்றார்.

டிஆர்ஓ பிச்சை, துணைத்தலைவர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஜீவரத்தினம், தாசில்தார் கோவிந்தராஜீலு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அமுதலட்சுமி, ராமமூர்த்தி, மணிவண்ணன், ராமு, சந்திரசேகரன், மாலா தமிழரசன், குணா, பழனிச்சாமி, சாவித்திரி பாஸ்கர், பாபு, நகராட்சி அலுவலர் குமரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நகராட்சி செயல் அலுவலர் சமயச்சந்திரன் நன்றிகூறினார்.

முன்னதாக பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் கட்சி கொடியை மத்திய அமைச்சர் ராசா ஏற்றி வைத்தார். மாநில இளைஞரணி துணை பொதுச்செயலாளர் சுபாசந்திரசேகர், நகர செயலாளர் முருகேசன், பேச்சாளர் பெருநெற்கிள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

துப்புரவு பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள் விநியோகம்

Print PDF

தினகரன் 19.10.2010

துப்புரவு பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள் விநியோகம்

சின்னமனூர், அக். 19: சின்னமனூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் 60 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் துப்புரவு பணிகளுக்கு தேவையான மண்வெட்டி, தட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பொருட்கள் பழுதாகி உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருந்தன. இதனால் பொது சுகாதாரம் காப்பதில் பணியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் தங்களுக்கு துப்புரவு பணிகளுக்கு தேவையான பொருட்கள் வழங்க வேண்டும் என பணியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, துப்புரவு பணிகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டன.இந்த பொருட்களை நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி கூத்தபெருமாள் நேற்று துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) வரதராஜன், சுகாதார ஆய்வாளர் ஜனகர், குழந்தைவேலு, கவுன்சிலர் சிவராமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 117 of 238