Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடைப் பணி நிறைவேற்றப்படுமா?

Print PDF

தினமணி 13.10.2010

விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடைப் பணி நிறைவேற்றப்படுமா?

விருதுநகர், அக் 12: விருதுநகர் நகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விருதுநகர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. நகரில் திறந்த கால்வாயில் செல்லும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் 2005-ம் ஆண்டு பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் 23.25 கோடி மதிப்பில் நிறைவேற்ற நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

இந்தத் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்தப் புள்ளிகள் தாமதம் போன்ற காரணங்களால் திட்ட மதிப்பீடு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போது 28.655 கோடியில் அதிகரிக்கப்பட்டு பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் முக்கிய குழாய்கள், பெரிய தொட்டிகள் அமைக்கும் பணிகள் மட்டும் மதுரை சாலையில் நடைபெற்றுள்ளன. மேலும் நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீóர் அனைத்தும் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள கழிவுநீர் சேகரிப்பு குளத்தில் கொண்டு விடப்படுகிறது.

அங்கு நவீன முறையில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் நகர் சுத்தமாகும் என்ற நோக்கத்தோடு இந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இப்பணிகளை அனைத்து வார்டுகளிலும் செயல்படுத்தும் வகையில் திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தினால் மட்டுமே இத்திட்டம் முழுமை பெறும் என்பது பொதுமக்கள் கருத்தாகும்.

நகரின் முக்கிய பகுதிகளான காசுக்கடை பஜார், மார்க்கெட், பழைய பஸ் நிலையப் பகுதி, நகராட்சி பகுதி உள்பட பல்வேறு பகுதியில் வேலைகள் தொடங்கப்படாமல் உள்ளன. முக்கிய தெருக்களும் விடுபட்டுள்ளன.

மூன்று ஆண்டுகளாக இப்பணிகள் நடைபெற்று வந்தபோதும் இன்னும் பணிகள் முடியவில்லை. பாதாள சாக்கடைத் திட்டத்தில் அனைத்துப் பகுதிகளும் திட்ட மதிப்பீட்டில் இடம் பெறவில்லை. தற்போது இப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் வீட்டு இணைப்புகளும் வழங்கப்படவில்லை. முக்கிய இடங்களில் கழிவுநீரை தேக்கி வைத்து பம்பிங் செய்யும் இடத்திலும் வேலை நடைபெறவில்லை.

இது குறித்து கவுன்சிலர் ஜெயக்குமார் கூறுகையில், இந்தப் பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. எந்தப் பணிகளும் முழுமையாக முடியாத நிலை உள்ளது. மேலும் குறிப்பிட்ட பகுதியில் பணிகள் முடிந்ததும் சாலைப் பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும். அதற்கும் சேர்த்துத்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடைப் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

குளித்தலை நகராட்சி மருத்துவமனை கட்ட ரூ.7 லட்சம் மதிப்பில் திட்டம்

Print PDF
தினமலர் 13.10.2010

குளித்தலை நகராட்சி மருத்துவமனை கட்ட ரூ.7 லட்சம் மதிப்பில் திட்டம்

குளித்தலை: குளித்தலை நகராட்சியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவமனை கட்டுமானப்பணி ஆய்வு செய்யப்பட்டது.குளித்தலை நகராட்சி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையான நகராட்சி மருத்துவமனைக்கான கட்டுமானம் துவங்கியது. 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 15வது வார்டில் கட்டப்படும் பணியை நகராட்சி தலைவர் அமுதவேல், துணை தலைவர் பல்லவிராஜா, கமிஷனர் தனலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.

புதிய மருத்துவமனை குறித்து நகராட்சி தலைவர் அமுதவேல் கூறியதாவது:

நகராட்சி பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான மருத்துவமனை இல்லாத குறையை போக்க, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவமனை கட்டப்படுகிறது. மருத்துவமனையில் இரண்ட அறை, ஆறு படுக்கை வசதி அமைக்கப்படுகிறது. ஒரு டாக்டர், இரண்டு நர்ஸ், ஒரு லேப் டெக்னீசியன், இரண்டு உதவியாளர்கள், ஒரு மருந்தாளுநர் என ஏழு பேர் பணியில் இருப்பர். மருத்துவமனை கட்டுமானப்பணி விரைவில் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதேப்போல் நகராட்சிக்குரிய அனைத்து திட்டங்களையும் அரசிடம் பெற முயற்சி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Wednesday, 13 October 2010 07:53
 

உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்டில் மராமத்து பணி தீவிரம்

Print PDF

தினகரன் 13.10.2010

உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்டில் மராமத்து பணி தீவிரம்

உத்தமபாளையம், அக். 13: உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்டில் பகுதி 2ம் திட்டத்தின் கீழ் மராமத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அனைத்து பேரூராட்சி நிர்வாகம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.59.50 லடசம் செலவில் உத்தமபாளையம் பகுதியில் அனைத்து வார்டுகளிலும் சாலைகள், சாக்கடைகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பகுதி 2ம் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் உத்தமபாளையத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதில் பஸ் ஸ்டாண்ட் உட்புற பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. முன்புறம், பேருந்து நுழையும் இடம், வெளியேறும் இடங்களில் வளைவுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை நேற்று உத்தமபாளையம் பேரூராட்சி தலைவர் மெகர்நிஷா சையது மீரான், துணை தலைவர் காசிம், நிர்வாக அதிகாரி கணேசன் ஆகி யோர் பார்வையிட்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பஸ் ஸ்டாண்ட் மராமத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பஸ் ஸ்டாண்ட் உட்பட நகரில் அனைத்து வார்டுகளிலும் நடந்து வரும் பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றனர்.

 


Page 123 of 238