Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

திருக்கோவிலூர் பேரூராட்சியில் துப்புரவு பணிக்கு புதிய வாகனம் பேரூராட்சி தலைவர் இயக்கினார்

Print PDF

தினகரன் 11.10.2010

திருக்கோவிலூர் பேரூராட்சியில் துப்புரவு பணிக்கு புதிய வாகனம் பேரூராட்சி தலைவர் இயக்கினார்

திருக்கோவிலூர், அக். 11: திருக்கோவிலூர் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் கடந்த ஒன்றரை மாதங்களாக செயல் அலுவலர் முயற்சியால் இரவு நேரங்களில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் போதிய வாகன வசதியில்லாத காரணத்தால் உரிய நேரத்தில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள முடியாமல் ஊழியர்கள் திணறி வந்தனர். இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் துப்புரவு பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும், நகரை அழகு படுத்தும் நோக்கில் புதிய லாரி வாங்க திட்டமிட்டனர்.

அதன்படி ரூபாய் .10 லட்சம் மதிப்பில் துப்புரவு பணிக்காக புதிய லாரி வாங்கப்பட்டது. புதிய லாரியை பேரூராட்சி தலைவர் ஆண்டாள் இயக்கி வைத்தார். அப்போது முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் ஜானிபாஷா, செயல்அலுவலர் தமிழ்ச்செல்வன், தலைமை எழுத்தர் அன்பழகன், கவுன்சிலர்கள் குணா, சுப்பு, சாந்தபிரபாமணி, நிர்மலாசெந்தாமரை, கோவிந்து கலைவாணிசக்திவேல் ஆகியோர் இருந்தனர்.

 

கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மேம்பாலம் ஜனவரியில் திறக்கப்படும்: மேயர் தகவல்

Print PDF

தினமணி 08.10.2010

கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மேம்பாலம் ஜனவரியில் திறக்கப்படும்: மேயர் தகவல்

சென்னை, அக்.7: கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் ரூ.23.76 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம், 2011 ஜனவரியில் திறக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து ரங்கராஜபுரத்தில் மேற்கொண்டு வரும் மேம்பாலப் பணியினை மேயர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியது:

2006-ம் ஆண்டுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி சார்பில் 6 மேம்பாலங்கள், ஒரு சுரங்கப்பாதை ஆகியவை ரூ.134.87 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரில் மேலும் 10 இடங்களில் பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன. கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் ரூ.23.76 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணியினை சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. "ஒய்' வடிவமைப்பில் கட்டப்பட்டு வரும் இந்தப் பாலம், இரு வழி வாகனப் போக்குவரத்துக்கு ஏற்றவாறு கட்டப்படுகிறது.

ரயில்வே தடத்தின் மீது கட்டப்படும் மேல் தளம் சுமார் 1,500 டன் எடை தாங்கும் வகையில் நவீன வகையில் வடிவமைக்கப்படுகிறது. இப்பாலம் திறக்கப்படும்போது கோடம்பாக்கம், ரங்கராஜபுரம், தியாகராய நகர், மாம்பலம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

மேம்பாலப் பணிகள் டிசம்பரில் முடிக்கப்பட்டு, 2011 ஜனவரியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என்றார் மா.சுப்பிரமணியன். இந்த ஆய்வின்போது, துணை மேயர் ஆர்.சத்தியபாமா, துணை ஆணையர் (பணிகள்) தரேஸ் அகமது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

வால்பாறை நகராட்சியில் அரசு கட்டடங்கள் திறப்பு

Print PDF

தினமணி 08.10.2010

வால்பாறை நகராட்சியில் அரசு கட்டடங்கள் திறப்பு

வால்பாறை,​​ அக்.7: வால்பாறை நகராட்சி அலுவலக புதிய கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் ரூ. ஒரு கோடியே 20 லட்சம் மதீப்பீட்டில் ​ நகராட்சி அலுவலக கட்டடம்,​​ பூங்கா மற்றும் ஆய்வு மாளிகை கட்டப்பட்டன.​ புதிய கட்டடங்களை ஊரக தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத் றை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி,​​ திறந்து வைத்தார்.​ பின்னர்,​​ வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் கணேசன் வரவேற்றுப் பேசினார்.

எம்.எல்.ஏ கோவை தங்கம் சிறப்புரையாற்றினார்.​ தையல் இயந்திரம்,​​ சமையல் அடுப்பு,​​ திருமண உதவித்தொகை,​​ விதவை உதவித்தொகை,​​ மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை 1200 பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரவேலு,​​ நகராட்சி துணைத் தலைவர் ராஜதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.​ நகராட்சி செயல் அலுவலர் ராஜகுமாரன் நன்றி கூறினார்.

 


Page 125 of 238