Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பெரம்பூர் புதிய பாலத்தின் கீழ் இசை நீருற்றுடன் அழகிய பூங்கா; தமிழகத்திலே முதல் முதலாக நிறுவப்படுகிறது

Print PDF

மாலை மலர் 07.10.2010

பெரம்பூர் புதிய பாலத்தின் கீழ் இசை நீருற்றுடன் அழகிய பூங்கா; தமிழகத்திலே முதல் முதலாக நிறுவப்படுகிறது

பெரம்பூர் புதிய பாலத்தின் கீழ் இசை நீருற்றுடன்
 
 அழகிய பூங்கா;
 
 தமிழகத்திலே முதல்
 
 முதலாக நிறுவப்படுகிறது

சென்னை, அக். 7- பெரம்பூர் புதிய பாலத்தின் கீழ் இசை நீருற்றுடன் அழகிய பூங்கா அமைக்கப்படுகிறது. இதனை துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்.வடசென்னை மக்களின் 40 ஆண்டு கால கனவாக இருந்த பெரம்பூர் ரெயில்வே மேம்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ரூ.450 கோடி செலவில் திறக்கப்பட்ட இந்த மேம்பாலத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

பெரம்பூர், அயனாவரம், கொளத்தூர், மூலக்கடை, செம்பியம், கொடுங்கையூர், மாதவரம் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.

இந்த பாலத்தின் இருபுறமும் 110 கிராவுண்ட் இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது. அதில் அழகிய பூங்கா அமைக்கப்படுகிறது. பெரம்பூர் பாலத்தின் கீழ் உள்ள பூங்கா சுற்றுலா பகுதியாக காட்சியளிக்கிறது. அந்த பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு விசாலமான இந்த பூங்காவிற்கு வந்து பொழுது போக்குகிறார்கள்.

மாலைநேரம் ஆகி விட்டலே அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக வருகிறது. இரவு 9மணி வரை சிறுவர்கள் விளையாடி மகிழ்கிறார்கள். உயர் கோபுர மின் விளக்கு போடப்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் நிரம்பி திருவிழா போல காட்சியளிக்கிறது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் இங்கு கூடுவதால் சிறுவர்களுக்கான சிறுசிறு கடைகள் நிறைய தோன்றுகின்றன.

குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள், திண்பண்டங்கள் போன்றவற்றிக்காக திடீர் கடைகள் உருவாகிறது.

சென்னையில் புதிய சுற்றுலா மையமாக இந்த பூங்கா திகழ்ந்து வருகிறது. பூங்கா அமைக்கும் பணி ஒரு புறம் நடந்து வரும் வேளையில் மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கு திரண்டு வருகிறார்கள். அதனால் பூங்கா பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் முதல் முதலாக புதிய தொழில் நுணுக்கத்துடன் இசையுடன் நீருற்று அமைக்கப்படுகிறது.

காதுக்கேற்ற இசை முழங்க அதற்கேற்ப நீர் விழ்ச்சி அசைந்தாடும் வகையில் உருவாக்கப்படுகிறது. பசுமையான புல்வேலி, குழந்தைகள் விளையாட்டு பூங்கா, யோகாமேடை, "வாக்கிங் செல்வதற்கு தனிபாதை, அலங்கார விளக்குகள் என ஒரு கோடியே 64 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. குழந்தைகளை மகிழ்விக்க கூடிய விளையாட்டு சாதனங்கள் இடம் பெறுகின்றன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழ் நாட்டிலேயே இசை நீருற்று பெரம்பூர் பூங்காவில் முதல் முதலில் அமைக்கப்படுகிறது. நடைபாதை, பசுமை தரைகள், யோகா மேடை, அலங்கார விளக்குகள் போன்றவை அமைக்கப்படுகிறது. பூங்கா அமைக்கும் பணி நிறைவடைய உள்ளது.

இன்னும் 10 நாளில் துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் வண்ணமிகு பூங்காவை திறந்து வைக்க உள்ளார். இந்த பூங்கா அந்த பகுதி மக்களுக்கு பொழுதுபோக்கு மையமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

 

ரங்கராஜபுரம் மேம்பலம் ஜனவரி மாதம் திறக்கப்படும்; மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

Print PDF

மாலை மலர் 07.10.2010

ரங்கராஜபுரம் மேம்பலம் ஜனவரி மாதம் திறக்கப்படும்; மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

ரங்கராஜபுரம் மேம்பலம் ஜனவரி மாதம் திறக்கப்படும்;
 
 மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, அக். 7- கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் சென்னை மாநகராட்சி-ரெயில்வே துறை சார்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலப்பணியை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி மேயராக மு..ஸ்டாலின் பொறுப்பு வகித்தபோது சென்னை மாநகரின் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக 9 மேம்பா லங்கள் கட்டி திறந்து வைத்தார். 2006-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணைப்படியும், துணை முதல்- அமைச்சர் மு.. ஸ்டாலின் அறிவுரைப்படியும் சென்னை மாநகராட்சி சார்பில் 6 மேம்பாலங்கள், ஒரு சுரங்கப்பாதை ரூ. 134 கோடியே 87 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் மேலும் 10 இடங்களில் பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகிறது. கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் ரூ. 23 கோடியே 76 லட்சம் செலவில் மேம்பாலம் கட்டும் பணியினை சென்னை மாநகராட்சியும், ரெயில்வே துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

அதன்படி பசுல்லா சாலை பக்கம் 264.54 மீட்டரும், ரங்கராஜபுரம் பக்கம் 303.40 மீட்டரும், கோடம்பாக்கம் ரெயில் நிலையம் அருகில் 297 மீட்டரும், ரெயில்வே பகுதியில் 97.90 மீட்டர் என மொத்தம் 962.14 மீட்டர் நீளமும், 8.5 மற்றும் 6.5 அகலமும் கொண்டதாக இம்மேம்பாலம் "ஒய்" வடிவமைப்பில் கட்டப்படுகிறது. இரு வழிவாகனப் போக்குவரத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்படுகிறது.

ரெயில்வே தடத்தின் மீது கட்டப்படும் மேல்தளம் சுமார் 1500 டன் எடை தாங்கும் வகையில் நவீன வகையில் வடிவமைக்கப்படுகிறது. இப்பாலம் அமைவதன் மூலம் கோடம்பாக்கம், ரங்கராஜபுரம், தியாகராயநகர், மாம்பலம் அதன் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இப்பாலப்பணிகள் வரும் டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதத்தில் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.

கணேசபுரம் மேம்பாலம், வியாசர்பாடி மேம்பாலம், தங்கச்சாலை மேம்பாலம், வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, ஸ்டான்லி சுரங்கப்பாதை போன்ற பல்வேறு பணிகள் வடசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது துணை மேயர் சத்தியபாமா, துணை ஆணையர் தரேஸ்அகமது, மண்டலக்குழு தலைவர் ஏழுமலை, கவுன்சிலர்கள் சு.ராஜம், சுசீலா கோபாலகிருஷ்ணன், வெல்டிங்மணி, தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மேற்பார்வை பொறியாளர் ராமமூர்த்தி உடன் இருந்தனர்.

 

மழைநீரை அகற்ற ரூ.40 லட்சத்தில் 7 மின் மோட்டார்கள்

Print PDF

தினமணி 07.10.2010

மழைநீரை அகற்ற ரூ.40 லட்சத்தில் 7 மின் மோட்டார்கள்

சென்னை, அக்.6: மழைநீரை அகற்றுவதற்காகரூ.40 லட்சம் செலவில் புதியதாக 50 எச்.பி. திறன் கொண்ட 7 மோட்டார்கள் வாங்கப்பட்டுள்ளன என்றார் மேயர் மா.சுப்பிரமணியன்.

வடசென்னையில் பி கால்வாய், தென்சென்னையில் மாம்பலம் கால்வாய் தூர்வாரும் பணியினை புதன்கிழமை நேரில் பார்வையிட்டு மேயர் மா.சுப்பிரமணியன் கூறியது:

வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய், கொளத்தூர், மாதவரம் உபரி கால்வாய், வடசென்னையில் பி கால்வாய் போன்றவை பொதுப்பணித்துறை மூலம் தூர்வாரி சீர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனமழைக்காலத்துக்கு முன்பாகவே கால்வாய்கள் தூர்வாரும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

÷மேலும் தாழ்வான பகுதிகளில், சுரங்கப் பாதைகளில் மழைநீர் அகற்றுவதற்காக சுமார் 60 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழைநீர் தேக்கம் ஏற்பட்டால் நீரை அகற்றுவதற்காக புதிதாக 50 எச்.பி. திறன் கொண்ட 7 மோட்டார்கள்,ரூ.40.42 லட்சத்தில் வாங்கி தயாராக வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மண்டல அலுவலகங்களிலும், தேவையான மோட்டார் பம்புகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றார் மா.சுப்பிரமணியன்.

 


Page 128 of 238