Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மேயர் அறிவிப்பு மாநகராட்சி பூங்காவில் விளையாட்டு கருவிகள்

Print PDF

தினகரன்       26.05.2010

மேயர் அறிவிப்பு மாநகராட்சி பூங்காவில் விளையாட்டு கருவிகள்

பெங்களூர், மே 26:அனைத்து பூங்காக்களிலும் சிறுவர்கள் விளையாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு பாதுகாக்கப்படுமென மாநகராட்சி மேயர் நடராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பெங்களூர் மாநகராட்சிக்குட்ட பல்வேறு பூங்காக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி சட்டவிதிகள் பல இடங்கள் மீறப்பட்டுள்ளன. பல பூங்காக்களில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதியவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பல பூங்காக்களில் சிறுவர்கள் விளையாட்டிற்கு தேவையான உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளாத மண்டல அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பூங்காக்களிலும் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டு பாதுகாக்கப்படும். மாற்று திறனாளிகள் விளையாடும் வகையிலும்உபகரணங்கள் பொருத்தப்படும். காலை மற்றும் மாலை நேரங்களில் பூங்காக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார்.

 

பாதாள சாக்கடைக் குழாய் புதுப்பிக்கும் பணி இன்று முதல் தொடக்கம்: மேயர்

Print PDF

தினமணி      26.05.2010

பாதாள சாக்கடைக் குழாய் புதுப்பிக்கும் பணி இன்று முதல் தொடக்கம்: மேயர்

மதுரை, மே 25: நேதாஜி சாலை முதல் சுப்பிரமணியபுரம் பம்பிங் ஸ்டேஷன் வரை பாதாள சாக்கடை குழாய்களைப் புதுப்பிக்கும் பணி புதன்கிழமை தொடங்கும் என்று மேயர் ஜி.தேன்மொழி தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குள்பட்ட 30 முதல் 43 வரையிலும், 60 முதல் 65 வரையிலான வார்டுகளில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தெற்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயர் ஜி.தேன்மொழி தலைமை வகித்தார். இதில் ஆணையர் எஸ்.செபாஸ்டின், மண்டலத் தலைவர் அ.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் மேயரிடம் வழங்கப்பட்டன.

டவுன்ஹால் ரோடு, சென்ட்ரல் தியேட்டர், ஜான்ஸிராணி பூங்கா ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாகவும், அதை உடனே சரி செய்ய வேண்டும் என்று கோரி மனுக்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து மிகவும் பழுதடைந்துள்ள பாதாள சாக்கடை குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்கள் பதிக்கும் பணி உடனே தொடங்கப்படும் என்று மேயர் தெரிவித்தார். மற்ற மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக பெரியார் பஸ் நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்பில் மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டு வரும் பயணிகள் நவீன நிழற்குடைப் பணிகளை மேயர் மற்றும் ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். இப்பணியை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கா.ரா.முருகேசன், ராஜேஸ்வரி, மாரியப்பன், மகேஸ்வரிபோஸ், செல்லத்துரை, விஜயா, பழனிச்சாமி, நகர்நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், நகரமைப்பு அதிகாரி முருகேசன், உதவி ஆணையாளர்கள் அ.தேவதாஸ், நிர்வாகப் பொறியாளர் சேதுராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

குடிநீரில் நோய் கிருமிகளை அழிக்கும் நவீன இயந்திரம்

Print PDF

தினமலர்    25.05.2010

குடிநீரில் நோய் கிருமிகளை அழிக்கும் நவீன இயந்திரம்

கம்பம் : குடிநீரில் தொற்று நோய் கிருமிகளை அழிக்க நவீன இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. சில வாரங்களாக உத்தமபாளையம் தாலுகாவில் மாசுபட்ட குடிநீர் சப்ளையால் வயிற்றுப்போக்கு மற் றும் காலரா ஏற்பட்டது. இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 500க் கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர்.

சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மருத்துவத்துறை, உள் ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது. இந்நிலையில் கலக்கப்படும் குளோரின் ஒரே சீராக இல்லாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டு இன்னமும் உள்ளது. பம்பிங் ஸ்டேஷனில் கலக்கும் போது உள்ள வீரியம், போகப் போக குறைந்து விடுகிறது. கடைசி பகுதிகளில் குளோரின் இல்லாத நிலை காணப்படுகிறது. எனவே குடிநீரில் உள்ள தொற்று நோய் கிருமிகளை அழித்து, சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பம்பிங் ஸ்டேஷன்களில் பம்பிங் செய்தபின், விநியோகம் செய்யும் இடத்திற்கு முன்பாக "சில்வர் அயோனேசேசன்' என்ற கருவியை பொருத்தும் பணியில் வாரிய அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இந்த கருவியின் பயன்பற்றி வாரிய அதிகாரிகள் கூறுகையில் "பம்பிங் செய்யப்பட்ட குடிநீரில் குளோரின் கலக்காமல், இந்த சில்வர் அயோனேசேசன் கருவி வழியாக செலுத்தும் போது, குடிநீரில் உள்ள தொற்று நோய் கிருமிகளை இந்த கருவி அழித்து விடும். பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த கருவி ஏற்கனவே பரீட்சார்த்த அடிப்படையில் லோயர்கேம்பில் பொருத்தப் பட் டது. தற்போது உத்தமபாளையம், பாலக் கோம்பை உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பம்பிங் ஸ்டேஷன்களில் இந்த கருவி பொருத்தும் பணியில் வாரிய அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

 


Page 172 of 238