Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ராயனூரில் சுகாதார வளாகம் பூமி பூஜை

Print PDF

தினமலர்    12.05.2010

ராயனூரில் சுகாதார வளாகம் பூமி பூஜை

கரூர்: தாந்தோணி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட ராயனூரில் புதிதாக பொது சுகாதார வளாகம் அமைய பூமி பூஜை போடப்பட்டது. தாந்தோணி நகராட்சி, ராயனூரில் கரூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் எம்.பி., தம்பிதுரை கலந்து கொண்டு துவக்கிவைத்தார். மேலும், மூன்று லட்சம் மதிப்பில் ரேஷன் கடை ஒன்றும் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இதே பகுதியில் தயாராகிவருகிறது. .தி.மு.., மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி, நகராட்சிதலைவர் ரேவதி, தாந்தோணி நகர செயலாளர் சரவணன், கவுன்சிலர்கள் செல்வராஜ், மணியம்மை, மோகன்ராஜ், கண்ணகி, ராஜு, இளைஞர் பாசறை மாவட்ட தலைவர் சுந்தர்ஜி மற்றும் பலர் பங்கேற்றனர்.

முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய மேம்பாலங்கள்: 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என அறிவிப்பு

Print PDF

தினமலர் 06.05.2010

சென்னை: சென்னையில் புதிய சட்டசபையில் இருந்து பட்டுலாஸ் சந்திப்பு வரையிலும், அண்ணா அறிவாலயத்தில் இருந்து சைதாப்பேட்டை மாம்பலம் கால்வாய் வரையிலும் 500 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்கள் கட்டப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

நெடுஞ்சாலைத் துறைக்கான மானியத்தின் மீது சட்டசபையில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்: சென்னை ராஜிவ் காந்தி சாலை, மத்திய கைலாஷில் துவங்கி சிறுசேரி வரை 20 கி.மீ., நீளம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இச்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஐந்து சந்திப்புகளில், சாலை மேம்பாலங்கள் கட்டப்படும். திருவான்மியூர் - தரமணி, எஸ்.ஆர்.பி., டூல்ஸ்- தரமணி, பெருங்குடி சாலை, துரைப்பாக்கம் - பல்லாவரம் சாலை, சோளிங்கநல்லூர் சாலையின் சந்திப்புகளில் இந்த மேம்பாலங்கள் கட்டப் படும். தமிழ்நாடு சாலை போக்குவரத்துக் கழகத்தின் பராமரிப்பில் உள்ள இ.சி.ஆர்., இரு வழிச்சாலையை, மாமல்லபுரம் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

புதுச்சேரி வரையிலான மீதமுள்ள சாலையில், வளைவுகளை மாற்றி அமைத்து, விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தில், 500 கோடி ரூபாய் செலவில், அண்ணா சாலையில், புதுசட்டசபை வளாகத்துக்கும், அண்ணா சாலைக்கும் இடையே துவங்கி, பட்டுலாஸ் சாலை வரை 2 கி.மீ., நீளத் துக்கும், அண்ணா அறிவாலயம் முதல் சைதாப்பேட்டை மாம்பலம் கால்வாய் வரை 3 கி.மீ., நீளத்துக்கும் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இச்சாலையில் செயல்படுத்தப்பட உள்ளதால், இந்த மேம்பாலங்களுக்கான தாங்கு தூண்கள் நடப்பாண்டில் முடிக்கப்படும்.

இம்மேம்பாலங்களுக்கான மேல் தூண்கள் மற்றும் தளங்கள், மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப் படும்.சென்னை பெருநகர பகுதிகளில் 545 கி.மீ., சாலைப் பணிகள், பாலப் பணிகள் 412 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளன. 22 கோடி ரூபாயில் பள்ளிக்கரணை நான்கு சாலை சந்திப்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது. வியாசர்பாடியில் 81 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்ட, டெண்டர் விடப்பட்டு, ஆய்வுப்பணிகள் துவங்கியுள்ளன. மூலக்கடையில் 50 கோடி ரூபாய் செலவில் பாலம் அமைக்கும் பணி ஆய்வில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Page 178 of 238