Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

கவுண்டம்பாளையத்தில் தீம்பார்க் அமைக்க கல்விக்குழு பரிந்துரை

Print PDF

தினமணி 16.04.2010

கவுண்டம்பாளையத்தில் தீம்பார்க் அமைக்க கல்விக்குழு பரிந்துரை

கோவை, ஏப். 15: கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி சார்பில் "தீம்பார்க்' அமைக்க கல்விக்குழு பரிந்துரைத்துள்ளது.

÷கோவை மாநகராட்சி கல்விக்குழுக் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கல்விக்குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார்.

÷இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

÷வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பூங்கா அமைக்க வேண்டும். கவுண்டம்பாளையம் அருகே கே.கே.புதூர் குப்பை கிடங்கில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் 18 ஏக்கரில் "தீம்பார்க்' அமைக்க வேண்டும்.

÷ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேனிலைப் பள்ளியில் உள்ள கால்பந்து மைதானத்தை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்த வேண்டும். ஒக்கிலியர் காலனி மேனிலைப் பள்ளியில் மீன் மார்க்கெட்டுக்காக கட்டப்பட்டு உபயோகமற்று கிடக்கும் கட்டடத்தில் தேவையான மாறுதல் செய்து மாணவ மாணவிகளுக்கான கலையரங்கம் அமைக்க வேண்டும். 1 முதல் 5}ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க மாநகராட்சி சார்பில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

÷கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் வி.கே.எஸ்.கே.செந்தில்குமார், ஷோபனா செல்வன், நா.தமிழ்ச்செல்வி, கே.செல்வராஜ், கல்வி அலுவலர் மோகனசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

குப்பைகளை தனித்தனியாக சேகரிக்க வண்டிகள்

Print PDF

தினமணி 16.04.2010

குப்பைகளை தனித்தனியாக சேகரிக்க வண்டிகள்

காஞ்சிபுரம், ஏப். 15: காஞ்சிபுரத்தில் நகராட்சி ஊழியர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித் தனியாக சேகரிக்கும் வண்டிகள் வழங்கப்பட்டன.

÷இந்த வண்டிகளை நகராட்சித் தலைவர் வி.ராஜேந்திரன் வழங்கினார். நகராட்சி ஆணையர் மகாலட்சுமி தேவி, முதன்மை பொறியாளர் பாலசுப்பிரமணியன், நகர் நல அலுவலர் பரணிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

÷மொத்தம் 25 வார்டுகளுக்கு 25 வண்டிகள் வழங்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம். அந்த வண்டிகளில் மக்கும் குப்பை, மற்றும் மக்காத குப்பை என இரு பிரிவுகள் உள்ளன.

÷இந்த வண்டிகளை பயன்படுத்தி காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கப்பட உள்ளன.

Last Updated on Friday, 16 April 2010 09:52
 

துப்புரவுப் பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணி ஆய்வு

Print PDF

தினமணி 15.04.2010

துப்புரவுப் பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணி ஆய்வு

திருச்சி, ஏப். 14: திருச்சி மாநகராட்சி சார்பில் பூசாரித் தெருவில் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டுமானப் பணியை ஆணையர் த.தி. பால்சாமி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தக் குடியிருப்பில் ஒரு தொகுப்புக்கு 12 வீடுகள் வீதம் 3 தொகுப்புகள் கட்டப்படுகின்றன. தொடர்ந்து கீழரண் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலங்கள் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றையும் ஆணையர் பால்சாமி பார்வையிட்டார். ஆய்வின் போது, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் எஸ். அருணாசலம், உதவிச் செயற்பொறியாளர் அமுதவள்ளி, இளநிலைப் பொறியாளர் மதிவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 15 April 2010 10:06
 


Page 185 of 238