Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

நெல்லை மாநகராட்சிக்கு ரூ.27 லட்சத்தில் லாரிகள்

Print PDF

தினமலர் 15.04.2010

நெல்லை மாநகராட்சிக்கு ரூ.27 லட்சத்தில் லாரிகள்

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி மேயர் ஏ.எல் சுப்பிரமணியன், கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி பொது சுகாதார பிரிவுக்கு 27 லட்சம் ரூபாய் செலவில் 2 டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு டம்பர் பிளேசர் லாரி வழங்கப்பட்டது. இந்த லாரிகளின் திறன் ஆய்வு செய்யப்பட்டது.இதில் வாகன இன்ஜினியர் இசக்கிமுத்து, சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 15 April 2010 09:08
 

பல்லாவரத்தில் விரைவில் பாதாள சாக்கடை திட்டம்

Print PDF

தினமணி 13.04.2010

பல்லாவரத்தில் விரைவில் பாதாள சாக்கடை திட்டம்

தாம்பரம், ஏப். 12: பல்லாவரத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.

சென்னை புறநகர் பகுதிகளான புழுதிவாக்கம், திருநீர்மலை மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் இருந்து புறப்படும் 8 புதிய பஸ் வழித்தடங்களை, அமைச்சர் தா.மோ. அன்பரசன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசியது:

பல்லாவரத்தில் 159 கி.மீ. தூரத்துக்கு பாதாள சாக்கடைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 147 கி.மீ. தூர பணிகள் நிறைவடைந்துள்ளன. செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.

மேலும் ரூ. 40 லட்சம் செலவில் பல்லாவரம் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுவதோடு, புதிய தார்ச் சாலையும் அமைக்கப்படும் என்றார். மாநகர போக்குவரத்துக் கழக இயக்குனர் பால்ராஜ், இணை இயக்குனர் பாபு, பல்லாவரம் நகர்மன்றத் தலைவர் இ.கருணாநிதி, பம்மல் நகர்மன்றத்தலைவர் வெ.கருணாநிதி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

பின்னர், தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் மிஸ்ரா, புறநகர் காவல்துறை கமிஷனர் ஜாங்கிட் ஆகியோருடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

Last Updated on Tuesday, 13 April 2010 09:26
 

நகராட்சி அலுவலகம் கட்டுமான பணி ஜரூர்

Print PDF

தினமலர் 13.04.2010

நகராட்சி அலுவலகம் கட்டுமான பணி ஜரூர்

திருப்பூர் : ரூ.50 லட்சம் மதிப்பில் நல்லூர் நகராட்சி அலுவலகம் கட்டுமான பணி நடந்து வருகிறது. வரும் 2011ல் திருப்பூர் மாநகராட்சியோடு இணையும் நல்லூர் நகராட்சியில், புதிய அலுவலகம் கட்டும் பணி வேகமாக நடக்கிறது. மாநகராட்சியோடு இணைந்த பின், கிழக்கு மண்டல அலுவலகமாக செயல்பட உள்ளது; அதற்கேற்ப, கட்டட வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம், தரைத்தளத்துக்கு 'டைல்ஸ்' பதிக்கும் பணி நடந்தது. இறுதிக்கட்ட பணியாக, முகப்பு பணிகள் துரிதமாக நடக்கின்றன. சுவர்களுக்கு வெள்ளை அடித்தல், ஜன்னல் அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. பெயிண்ட் அடித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் 15 நாட்களில் முடிந்துவிடும். திறப்பு விழா நடத்த, மே மாதம் புதிய அலுவலகம் தயார் நிலையில் இருக்கும் வகையில், கட்டுமான பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 13 April 2010 07:19
 


Page 186 of 238