Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

குப்பைகளை அகற்ற புதிய லாரி

Print PDF

தினமணி 12.04.2010

குப்பைகளை அகற்ற புதிய லாரி

போடி
, ஏப். 11: போடி நகராட்சியில் இரும்புத் தொட்டிகளுடன் கூடிய லாரியை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். லட்சுமணன் செயல்பாட்டுக்குத் தொடக்கி வைத்தார்.

போடி நகராட்சியில் சுகாதாரப் பணிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் குப்பைகளைத் தவிர்க்க ஒருமுறை பயன்படுத்தும் குப்பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் போடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சேகரிக்கும் குப்பைகளை அகற்ற இரும்பு தொட்டிகளுடன் கூடிய லாரி வாங்கப்பட்டுள்ளது. ரூ.11 லட்சம் செலவில் 22 இரும்புத் தொட்டிகளும், அவற்றைக் கையாள ரூ.11 லட்சம் செலவில் லாரியும் வாங்கப்பட்டு, இரும்பு தொட்டிகள் நகரின் முக்கிய குப்பை சேகரிப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் செயல்பாட்டைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நகர்மன்றத் தலைவர் ரதியாபானு தலைமையில் நடைபெற்றது. போடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.லட்சுமணன் லாரியுடன் இரும்புத் தொட்டிகளை இணைக்கும் பட்டனை அழுத்தி தொடங்கி வைத்தார்.

நகர்மன்றத் துணைத் தலைவர் ம.சங்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகராட்சி கணக்காளர் முருகதாஸ், சுகாதார மேற்பார்வையாளர் கருப்பணன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 12 April 2010 09:36
 

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க தாற்காலிகப் பாலம் அமைக்கும் பணி

Print PDF

தினமணி 08.04.2010

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க தாற்காலிகப் பாலம் அமைக்கும் பணி

மதுரை, ஏப். 7: வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் தாற்காலிக பாலப் பணியை மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

அருள்மிகு மீனாட்சி } சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு வைகை ஆற்றில் அழகர் இறங்குவதற்கு, மதுரை மாநகராட்சி சார்பில் தாற்காலிகப் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வகிறது.

கோடைக் காலத்தை முன்னிட்டு வைகை அணையில் குறைந்த நீர்அளவு இருப்பதாலும், வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததாலும், மாநகராட்சி லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில்கொùண்டு 400 தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமிநாசினி தெளிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய இடங்களில் 80 குடிநீர் தொட்டிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

நடமாடும் நவீன கழிப்பறை வாகனங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்திவைக்கப்படும் என்றார்.

முன்னதாக, டி.வி.எஸ். நகர் பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் வரும் ஏப்ரல் 10}ம் தேதி மூடப்படவுள்ளதால், டி.வி.எஸ். நகருக்கு செல்வதற்கான மாற்றுப் பாதையாக மேயர் முத்து பாலத்தின் கீழ் மதுரை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வரும் சர்வீஸ் சாலையை ஆணையர் பார்வையிட்டார்.

அப்போது, மாநகராட்சி தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், உதவி ஆணையர் (வருவாய்) இரா.பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 08 April 2010 09:37
 

மருத்துவமனை விரிவாக்க கட்டடத்திற்கு கூடுதலாக ரூ.6 கோடி ஒதுக்கீடு: அடுத்த மாதம் பணி முடியும்

Print PDF

தினமலர் 08.04.2010

மருத்துவமனை விரிவாக்க கட்டடத்திற்கு கூடுதலாக ரூ.6 கோடி ஒதுக்கீடு: அடுத்த மாதம் பணி முடியும்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டடப் பணிகளை விரைவாக முடிக்க, கூடுதலாக ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. 'இடநெருக்கடியில் தவிக்கும் இம்மருத்துவமனைக்கு, காலியாக இருந்த கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்டை ஒதுக்க வேண்டும்' என, தினமலர் இதழ் பலமுறை சுட்டிக் காட்டியது. இதன் எதிரொலியாக, இந்த இடம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு மாநகராட்சி ஒதுக்கியது.விரிவாக்க கட்டட பணி 3.12 ஏக்கரில் 2007ல் துவங்கியது. மொத்தம் 2,54,905 சதுர அடியில் 22.6 கோடி ரூபாயில் 5 மாடிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. கீழ்தளத்தில் 'பார்க்கிங்' வசதியும், தரைத்தளத்தில் விபத்து, அவசர சிகிச்சை பிரிவு, நுண்கதிர் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, நவீன மருத்துவ அறைகள், உபகரணங்கள் மற்றும் சுத்திகரிப்பு அறைகளும் கட்டப்பட்டுள்ளன. முதல்தளத்தில், நுண்கதிர் பிரிவுகள், விபத்து, அவசர சிகிச்சை பிரிவுகளுக்கான 'சிடி' மற்றும் அல்ட்ரா ஸ்கேன் மையங்கள், ஆப்பரேஷன் தியேட்டர்கள் அமைகின்றன. இரண்டாம் தளத்தில் பரிசோதனைக் கூடம், திசு ஆய்வுக்கூடம், ஆப்பரேஷன் தியேட்டர்கள், கருத்தரங்கு கூடமும், மூன்றாம் தளத்தில் நுண் உயிரியல் பிரிவு, மருத்துவ பதிவேடு அறை, டெலிகான்பிரன்சிங் ஹால், கருத்தரங்கு கூடமும் அமைக்கப்பட்டு வருகின்றன.

கட்டுமான பணியை மே இறுதிக்குள் முடித்து, ஜூனில் திறப்பு விழா நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. ஆனால் கட்டுமான பொருட்களின் விலையேற்றம் காரணமாக, பணிகள் தாமதமாகும் அபாயம் உள்ளது. 'இதனால் கூடுதலாக ஆறு கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்' என, அரசிடம் பொதுப்பணித்துறை திட்டஅறிக்கை சமர்ப்பித்தது. இதற்கு நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து, திட்டமிட்டப்படி அடுத்த மாதம் இறுதியில் கட்டுமான பணி முடிவடையும் எனத் தெரிகிறது.

Last Updated on Thursday, 08 April 2010 06:47
 


Page 187 of 238