Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

புவனகிரி பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் புதிய கட்டடம்

Print PDF

தினமலர் 29.03.2010

புவனகிரி பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் புதிய கட்டடம்

புவனகிரி : புவனகிரி பேரூராட்சியில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டடம் கட்டப் பட்டு வருகிறது.

புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கவும், குடிநீர் கட்டணம், வீட்டுவரி,தொழில் வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய இந்த அலுவலகத்திற்கு வருகின்றனர். பேரூராட்சி உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டமும் இந்த கட்டடத்தில்தான் நடந்து வருகிறது. இதுதவிர அலுவலக பணிகள் அனைத்தும் ஒரே கட்டடத்தில் இயங்கி வருவது சிரமமாக இருந்தது. இதனை தவிர்க்கும் பொருட்டு மன்றக் கூட்டத்தில் புதிய கட்டடம் கட்ட தீர்மானம் நிறைவேறியது. அதனையொட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் 2009-10ம் ஆண்டு பகுதி-2 திட்டத்தின்கீழ் 20லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

 

பெரம்பூர் மேம்பாலம் ஆய்வு

Print PDF

தினமணி 27.03.2010

பெரம்பூர் மேம்பாலம் ஆய்வு

பெரம்பூரில் ரூ. 51 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, மாநகர ஆணையர் ராஜேஷ் லக்கானி. இந்த மேம்பாலத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு முதல்வர் கருணாநிதி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.

Last Updated on Saturday, 27 March 2010 07:48
 

டி.வி.எஸ். நகருக்கு மாற்றுப் பாதை: மாநகராட்சி மேயர், ஆணையர் ஆய்வு

Print PDF

தினமணி 27.03.2010

டி.வி.எஸ். நகருக்கு மாற்றுப் பாதை: மாநகராட்சி மேயர், ஆணையர் ஆய்வு

மதுரை, மார்ச் 26: ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெறவுள்ளதால் மதுரை டி.வி.எஸ். நகருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றுப் பாதையை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி மற்றும் ஆணையர் எஸ்.செபாஸ்டின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் ஆணையர் எஸ்.செபாஸ்டின் கூறியது:

மதுரை டி.வி.எஸ்.நகரில் உள்ள ரயில்வே கேட்டில் ரயில்வே நிர்வாகத்தின் மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதனால் ஏப்ரல் 1}ம் தேதி முதல் இப்பாதை மூடப்படுகிறது.

இதையடுத்து மேயர் முத்துப் பாலம் அடியில் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. எனவே பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் பாலத்தின் வலது புறம் செல்லவும், டி.வி.எஸ்.நகரிலிருந்து வரும் வாகனங்கள் பாலத்தின் இடது புறம் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

இந்த ஆய்வின்போது தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், உதவி ஆணையர்கள் (வருவாய்) ரா.பாஸ்கரன், தேவதாஸ், நிர்வாகப் பொறியாளர் சேதுராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Last Updated on Saturday, 27 March 2010 07:42
 


Page 191 of 238