Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

நகரியல் பயிற்சி மையத்தில் தங்கும் விடுதி

Print PDF

தினமலர் 16.03.2010

நகரியல் பயிற்சி மையத்தில் தங்கும் விடுதி

கோவை: நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் செயல்படும் நகரியல் பயிற்சி மைய வளாகத்தில் தங்கும் விடுதி கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கோவை அழகேசன் ரோட்டில் தமிழ்நாடு நகரியல் பயிற்சி மையம் உள்ளது. பயிற்சிக்கு பல மாவட்டங்களிலிருந்து வரும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நகரின் வெவ்வேறு பகுதிகளில் தங்க வேண்டியுள்ளது.

இதை தவிர்க்க, 1.50 கோடி ரூபாயில் மாநகராட்சி இரு அடுக்கு தங்கும் விடுதி அமைக்க முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு தளத்திலும் எட்டு குடியிருப்புகள் அமைக்கப்படும். இவற்றில், ஏசி அறைகளும் உண்டு. வாகனங்கள் நிறுத்த, 3100 சதுர அடியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. மேயர் வெங்கடாசலம், கமிஷனர் அன்சுல்மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 16 March 2010 09:30
 

உழவர்சந்தை ஸ்டைலுக்கு மாறுகிறது : திண்டுக்கல் நகராட்சி வாரச்சந்தை

Print PDF

தினமலர் 15.03.2010

உழவர்சந்தை ஸ்டைலுக்கு மாறுகிறது : திண்டுக்கல் நகராட்சி வாரச்சந்தை

திண்டுக்கல் : திண்டுக்கல் நகராட்சி வாரச்சந்தையில் உழவர்சந்தை ஸ்டைலில் 40 லட்சம் ரூபாய் செலவில் 110 கடைகள் கட்டப்பட உள்ளன.

திண்டுக்கல் நாகல்நகரில் பல ஆண்டுகளாக நகராட்சி வாரச்சந்தை செயல் பட்டு வருகிறது. இங்கு தகர செட்டும், கல் தூண்களும் மட்டுமே இப்போது காணப்படுகின்றன. அடிப்படை வசதிகளும் இல்லாமல் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். இந்த சந்தையில் உழவர்சந்தை பாணியில் தகர செட், தடுப்புச்சுவர், திண்ணையுடன் கூடிய 110 கடைகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் பணிகள் நடக்க உள்ளன.

Last Updated on Monday, 15 March 2010 06:35
 

போடியில் பாதாளச் சாக்கடை பணிகள் விரைவில் தொடங்கும்

Print PDF

தினமணி 12.03.2010

போடியில் பாதாளச் சாக்கடை பணிகள் விரைவில் தொடங்கும்

போடி
, மார்ச் 11: போடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என எஸ்.லட்சுமணன் எம்.எல்.. தெரிவித்தார்.

போடியில் தமிழக அரசின் இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தை வியாழக்கிழமை தலைமை வகித்து துவக்கி வைத்து அவர் பேசியதாவது:

போடி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 18-ம் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்கால்வாயை போடி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு இலவச டி.வி. வழங்கப்படுமா? என சந்தேகம் எழுப்பிய நிலையில் தற்போது கலர் டி.வி.க்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

போடியில் பாதாள சாக்கடை அமைக்க விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் நகராட்சிப் பகுதி மக்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டங்கள் விரைவாகவும், முழுமையாகவும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் ரதியாபானு, துணைத் தலைவர் எம்.சங்கர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் க.சரவணக்குமார் வரவேற்றார். வட்டாட்சியர் ராஜசேகரன், தி.மு.. நகரச் செயலாளர் ராஜா ரமேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினர். தி.மு.. நகர இளைஞரணி அமைப்பாளர் ஜெயச்சந்திரன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் இரணியன், வருவாய் ஆய்வாளர் கா.ரத்தினம், கிராம நிர்வாக அலுவலர்கள் கண்ணன், அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர். சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ரத்தினம் நன்றி கூறினார்.

வட்டாட்சியர் ராஜசேகரன் தெரிவிக்கையில், போடி நகரில் 20 ஆயிரத்து 875 பேருக்கு இலவச கலர் டி.வி. வழங்கப்படும். ரேஷன் கடைகள் மூலம் சிலிப் வழங்கப்பட்டு பின் நகராட்சியில் டோக்கன் வழங்கப்பட்டு டி.வி. வழங்கும் பணி நடைபெறும். ஒவ்வொரு ரேஷன் கடை வாரியாக டி.வி. வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Last Updated on Friday, 12 March 2010 09:29
 


Page 196 of 238