Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ஆன்}லைன் மூலம் கட்டட வரைபட அனுமதி

Print PDF

தினமணி 12.03.2010

ஆன்}லைன் மூலம் கட்டட வரைபட அனுமதி

மதுரை, மார்ச் 11: ஆன்}லைன் மூலம் கட்டட வரைபட அனுமதியைப் பெறும் புதிய முறை மதுரை மாநகராட்சியில் வியாழக்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில் மேயர் கோ.தேன்மொழி, கமிஷனர் எஸ்.செபாஸ்டின் ஆகியோர் கணினியை இயக்கி ஆன்}லைன் புதிய முறையைத் தொடக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஆன்}லைன் முறை குறித்து மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் கூறியது:

மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு மூலம் தற்போது கட்டட வரைபட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறையை மேலும் எளிமைப்படுத்தும் விதமாகவும், பொதுக்கள் அலைச்சல் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கட்டட வரைபட அனுமதி ஆன்}லைன் மூலம் பெறும் புதிய முறை மார்ச் 11 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் 6 மாதத்தில் ஆன்}லைன் மூலம் மட்டுமே கட்டட வரைபட அனுமதியை வழங்கும் முறை கடைப்பிடிக்கப்படும்.

ஆன்}லைன் மூலம் பெறுவதற்கான கணினி மென்பொருள் சென்னையைச் சேர்ந்த வின்சா நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், சர்வே எண், தெருவின் பெயர், முகவரி, வரைபடக் கலர், தேதி, கட்டண விவரம் உள்ளிட்ட அனைத்தும் சட்டத்துக்குஉள்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மென்பொருள் கட்டுப்பாட்டு விதிகளை சமர்ப்பிக்கப்பட்ட வரைபடத்துடன் ஒப்பிட்டு அவை உறுதி செய்யப்பட்டு, குறுகிய நேரத்தில் ஒப்புதலோ அல்லது மறுப்போ வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிப்போர் சரியான தகவல்கள் தந்தால்மட்டுமே வரைபட அனுமதி பெறும் வகையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இடைத்தரகர்கள் தொல்லை நீங்கும். சரியான தகவல்கள் இருக்கும்பட்சத்தில் விண்ணப்பித்த 3 தினங்களில் அனுமதி பெறலாம் என்றார். ஆன்}லைனில் வரைபட அனுமதி எவ்வாறு பெறுவது குறித்து சென்னையைச் சேர்ந்த வின்சா நிறுவன மேலாளர் சுரேஷ் செயல்முறை விளக்கம் அளித்தார்.

இதில் மண்டலத் தலைவர்கள் க.இசக்கிமுத்து, .மாணிக்கம், என்.நாகராஜன், குருசாமி,தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி கமிஷனர் (வருவாய்) ரா.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 12 March 2010 09:23
 

மீனாட்சி கோயிலைச் சுற்றி உயரக்கட்டடங்கள் சட்ட விரோதமாக இருந்தால் நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினமலர் 12.03.2010

மீனாட்சி கோயிலைச் சுற்றி உயரக்கட்டடங்கள் சட்ட விரோதமாக இருந்தால் நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் தகவல்


மதுரை: ""மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி, சட்ட விரோதமாக உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் எச்சரித்தார். மதுரை மாநகராட்சி எல்லைக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு ஒப்புதல் (பிளான் அப்ரூவல்) பெற, விண்ணப்பங்களை தரும் முறை உள்ளது. இதற்குப் பதில் "ஆன்லைனில்' விண்ணப்பித்து,ஒப்புதல் பெறும் முறை நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையை மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின் துவக்கினர். தலைமை பொறியாளர் சக்திவேல், நகரமைப்பு அலுவலர் முருகேசன், மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், மண்டல தலைவர்கள், நகரமைப்பு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.இம்முறையை ஆன்லைனுக்கு கொண்டு வந்து, பராமரிக்கும் "வின்சாஸ் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தை சேர்ந்த சிவா, கூறும்போது, ""மாநகராட்சி இணையதளத்தில் (மதுரை கார்ப்பரேஷன். ஓஆர்ஜி) இனிமேல் நேரடியாக சர்வே எண் மற்றும் கட்டடத்தின் அளவுகளை குறிப்பிட்டு பதிவு செய்து, ஒப்புதல் பெறலாம். மாநகராட்சி விதிமுறைகளுக்கு ஏற்ப இருந்தால், கட்டடத்திற்கு ஒப்புதல் கிடைக்கும். இல்லாவிட்டால், சந்தேகங்கள் கேட்கப்படும். அதற்கு பதில் அளித்த பிறகு, நகரமைப்பு அலுவலர் ஆய்வு செய்து, ஒப்புதல் தரப்படும்.

இதனால் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படும். வாரம் ஒரு முறை, ஒப்புதல் பட்டியல் வெளியிடப்படும். ஒப்புதல் கட்டணத்தை தனியாக செலுத்த வேண்டும். இதுவும் விரைவில் ஆன்லைனில் கொண்டு வரப்படும்,'' என்றார்.நகரமைப்பு அலுவலர் முருகேசன் கூறும்போது, ""இதற்காக நகரில் உள்ள அனைத்து சர்வே எண்களும் கம்ப்யூட்டரில் ஏற்றப்படும்,'' என்றார். கமிஷனர் செபாஸ்டின் கூறியதாவது:

மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள உயரமான கட்டடங்களை இடிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பவில்லை. அப்படி நோட்டீஸ் அனுப்ப முடியாது. இவை எல்லாமே 30 ஆண்டுகளுக்கு முன் அனுமதி பெற்று கட்டப்பட்டவை. இவற்றை சட்டப்படி இடிக்க முடியாது. பாதுகாப்பு கருதி, இடிக்கலாம் என போலீசார் யோசனை மட்டும் கூறியுள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக கட்டடங்கள் இருந்தால், போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்படும்.ஆன்லைன் கட்டட ஒப்புதலை முன்பு போல் விண்ணப்பித்தும் பெறலாம். அடுத்த ஆறு மாதங்களில் இம்முறை ஒழிக்கப்பட்டு, முழுக்க முழுக்க ஆன்லைன் முறை கொண்டு வரப்படும். இம்முறையால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவர். மூன்று நாட்களில் ஒப்புதல் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார

Last Updated on Friday, 12 March 2010 06:49
 

விக்டோரியா ஹால் சீரமைப்பு பணிகள் 18 மாதத்தில் முடியும்: ஸ்டாலின் தகவல்

Print PDF

தினமலர் 12.03.2010

விக்டோரியா ஹால் சீரமைப்பு பணிகள் 18 மாதத்தில் முடியும்: ஸ்டாலின் தகவல்

சென்னை : ""விக்டோரியா பப்ளிக் ஹாலை மூன்றுகோடி மதிப்பில் கலைநயம் மாறாமல் புனரமைக்கும் பணிகள் 18 மாதத்தில் முடிக்கப்படும்,'' என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை சென்டரல் ரயில் நிலையம் அருகே உள்ள,"விக்டோரியா பப்ளிக் ஹால்' புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.இந்த பணிகளை துணைமுதல்வர் ஸ்டாலின் நேற்று காலை ஆய்வு செய்தார்.

பின் நிருபர்களிடம் கூறியதாவது:விக்டோரியா பப்ளிக் ஹால் வரலாற்று சிறப்பு மிக்க புராதன கட்டடம். 1888ல் நம்பெருமாள் செட்டி என்பவரால் கட்ட தொடங்கப்பட்டு, 1890ல் முடிக்கப்பட்டது.இந்த ஹால் 56 கிரவுண்ட் பரப்பில் அமைந் துள்ளது. இந்த கட்டடம் புனரமைக்கப்பட்டு, 1967ல் முதல்வர் அண்ணாத் துரையால் திறந்து வைக்கப்பட்டது.இங்கு சுவாமி விவேகானந்தர், பாரதியார், காந்தியடிகள், கோபால கிருஷ்ண கோகலே போன்ற தலைவர்கள் பேசியுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக விக்டோரியா ஹால் எந்த பயன்பாடுமின்றி இருந்தது.அறகட்டளையிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கட்டடத்தின் கலை நயம் மாறாமல் புதுப்பிக்க மூன்று கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.கட்டடத்தின் மேற் கூரை, தரைதளம் மற்றும் சுவர்களை சீரமைக்கும் பணிகள் துவக்கப் பட்டுள்ளன. 18 மாதத்தில் பணிகள் முடிக்கப்படும். தரை தளத்தில் ஒலி, ஒளி நிகழ்ச்சிகள் நடத்தவும், முதல் தளத்தில் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடத்தவும் அனுமதிக்கப் படும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார். ஆய்வின்போது மேயர் சுப்பிரமணியன், துணை முதல்வரின் செயலர் தீனபந்து, நகராட்சி நிர்வாக செயலர் நிரஞ்சன் மார்டி, கமிஷனர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Last Updated on Friday, 12 March 2010 06:13
 


Page 197 of 238