Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பாதாள சாக்கடை திட்டம்' எப்போது நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி

Print PDF

தினமலர் 01.03.2010

பாதாள சாக்கடை திட்டம்' எப்போது நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி எழுப்பினார். அருப்புக்கோட்டை நகராட்சியில் அவசர கூட்டம் நகராட்சி தலைவர் சிவபிரகாசம் தலைமையில் நடந்தது. கமிஷனர் ரேவதி, இன்ஜினியர் கருணாகரன், .. குணசீலன், நகரமைப்பு அலுவலர் வாகினி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:

சிக்கந்தர்: அஜிஸ் நகர் பார்க்கில் உள்ள மேல்நிலை தொட்டியில் குடிநீர் நிறைந்து வீணாகிறது. பணியாளர்கள் நியமனம் செய்யுங்கள்.

தலைவர்: அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமமூர்த்தி: நகராட்சி குப்பை தொட்டிகள் சேதமடைந்துள்ளது. புதியதாக வாங்குவதற்கு பதிலாக சேதமடைந்த குப்பை தொட்டிகளை சரி செய்து பயன்படுத்தினால் நகராட்சியின் செலவினத்தை குறைக்கலாம்.

தலைவர்: சேதமடைந்த தொட்டிகள் சரி செய்யப்படும்.

சிவசங்கரன்: பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பல மாதங்கள் ஆகி விட்டது. திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்.

தலைவர்: அதற்கான வேலைகள் விரைவில் நடைபெறும்.

தலைவர்: வார்டுகளில் உள்ள அடிப் படை பிரச்னைகளை மனு கொடுக்கும் படி கவுன்சிலர்களிடம் கூறப்பட்டது. ஒருசில கவுன்சிலர்களை தவிர மற்றவர்கள் எழுதி தரவில்லை. பின் எப்படி பிரச்னைகளை தீர்ப்பது?

திருமாவளவன்: வார்டுகளில் என்ன வேலை தான் நடக்கிறது? தங்கள் கவனத்திற்கு கொண்டு வர. எந்த வேலைகளும் ஒழுங்காக நடப்பதில்லை. சுகாதார துறை முற்றிலும் செயல்படவில்லை.

அமிர்தகொடி: வார்டுகளில் துப்புரவு பணி செய்து முடித்தவுடன் அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் துப்புரவு பணியாளர்களை கையெழுத்து வாங்க சொல்லுங்கள்.

தலைவர்: அவ்வாறு செய்வோம்.

அண்ணாமலை: கோடை காலம் தொடங்கி விட்டது. நகரில் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகிறது. உடன் சரி செய்ய வேண்டும்.

கண்ணன்: மலையரசன் கோயில் ரோடு - சாலியர் மேல்நிலை பள்ளி வரை புதிய ரோடு போட ஏற்பாடு செய்யுங்கள்.

தலைவர்: ரோடு போட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Last Updated on Monday, 01 March 2010 06:34
 

சேலம் மாநகராட்சியில் மார்க்கெட், கடைகள் ஏலம்

Print PDF

தினமணி 26.02.2010

சேலம் மாநகராட்சியில் மார்க்கெட், கடைகள் ஏலம்

சேலம், பிப்.25: சேலம் மாநகராட்சிக்குட்பட்ட கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள் வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டன.

மாநகராட்சியில் உள்ள பஸ் நிலையக் கடைகள், நாளங்காடிகள், பூங்காக்கள், காய்கறி மார்க்கெட்டுகள், சைக்கிள் நிறுத்தங்கள் உள்ளிட்ட 38 இனங்களுக்குக்கு ஆண்டுதோறும் பொது ஏலம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, மாநகராட்சி மைய அலுவலகத்தில் சூரமங்கலம் மண்டலத்துக்குட்பட்ட 13 இனங்களுக்கு உதவி ஆணையர் நெப்போலியன் தலைமையிலும், அஸ்தம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட 3 இனங்களுக்கு உதவி செயற்பொறியாளர் அசோகன் தலைமையிலும் பொது ஏலம் நடைபெற்றது.

இதேபோல் கொண்டலாம்பட்டியில் உள்ள 9 இனங்களுக்கும், அம்மாப்பேட்டையில் உள்ள 13 இனங்களுக்கும் உதவி ஆணையர் தங்கவேல் தலைமையில் ஏலம் நடந்தது. பொது ஏலத்தில் மாதம் மற்றும் ஆண்டு கட்டண வசூல் செய்வதற்கான இனங்களுக்கு ஏற்றவாறு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

மேயர் ரேகா பிரியதர்ஷிணி, ஆணையர் கே.எஸ். பழனிசாமி மற்றும் செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர். ஏலம் நடைபெறுவதால் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்காக போலீஸ் உதவி ஆணையர் சந்திரமோகன் தலைமையில் டவுன் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Last Updated on Friday, 26 February 2010 09:00
 

சீசனுக்கு தயாராகுது நேரு பூங்கா பராமரிப்பு பணிகளில் 'விறுவிறு'

Print PDF

தினமலர் 25.02.2010

சீசனுக்கு தயாராகுது நேரு பூங்கா பராமரிப்பு பணிகளில் 'விறுவிறு'

கோத்தகிரி : கோடை சீசனுக்காக, கோத்தகிரி நேரு பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கோத்தகிரி பேரூராட்சி பராமரிப்பில் இருந்து வந்த நேரு பூங்கா, 7 ஆண்டுகளுக்கு முன், தோட்டக்கலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு நிதியின் கீழ் 30 லட்சத்துக்கும் மேல் செலவழிக்கப்பட்டு, பூங்கா சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. இரு ஆண்டுகளாக கோடைவிழா நாட்களில் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

வரும் சீசனுக்காக, பூங்கா நுழைவு வாயில் நடைபாதை, நாற்காலி, அழகிய குடை பராமரிக்கப்பட்டு வருகிறது. பல வண்ணங்களிலான 100க்கணக்கான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. வெயிலின் தாக்கத்தில் இருந்து மலர் நாற்றுகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் - மே மாதங்களுக்குள் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர்கள் பூத்துக்குலங்கும் வகையில், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Last Updated on Thursday, 25 February 2010 06:49
 


Page 201 of 238