Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

தூத்துக்குடி மாநகராட்சிபுதிய அலுவலகம் கட்டும் பணி : தலைமை பொறியாளர் ஆய்வு

Print PDF

தினமலர் 21.02.2010

தூத்துக்குடி மாநகராட்சிபுதிய அலுவலகம் கட்டும் பணி : தலைமை பொறியாளர் ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக புதிய கட்டுமான பணியினை சென்னை தலைமைப் பொறியாளர் ரகுநாதன் நேற்று ஆய்வு செய்தார்.தூத்துக்குடி மாநகராட்சியானதால் மாநகராட்சி அலுவலக பிரமாண்ட கட்டடம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே 4 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் நவீன வடிவமைப்பு மற்றும் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் இந்த பணியினை முடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.இந் நிலையில் இந்த பணிகளை ஆய்வு செய்ய நேற்று சென்னை நகராட்சிகளின் தலைமைப் பொறியாளர் ரகுநாதன் தூத்துக்குடி வந்தார். மாநகராட்சி கமிஷனர் (பொ) இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் புதிய கட்டடம் கட்டும் பணியினை பார்வையிட்டார்.

 

சாலை சுத்தம் செய்யும் இயந்திரம் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி நிராகரிப்பு

Print PDF

தினமணி 19.02.2010

சாலை சுத்தம் செய்யும் இயந்திரம் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி நிராகரிப்பு

கோவை, பிப்.18: சாலை சுத்தம் செய்யும் இயந்திரத்தை கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் இருந்து கோவை நிறுவனத்தை நிராகரித்து மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்வதற்கு முன்பும், பின்பும் இருவேறு விதமான தகவல்களை அந் நிறுவனம் தெரிவித்ததால், ஒப்பந்தப்புள்ளி திறனாய்வுக் குழு இம் முடிவை எடுத்துள்ளது.

வியாழக்கிழமை நடந்த மாநகராட்சியின் அவசரக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஆணையர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாணமைத் திட்டத்துக்கு ரூ.1.54 கோடியில் சாலை சுத்தம் செய்யும் இயந்திரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி குறித்து விவாதம் நடைபெற்றது. கோவை நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்வது குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ஆணையர் அன்சுல் மிஸ்ரா, குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்த கோவை நிறுவனம், ஆஸ்திரேலிய நிறுவனத் தயாரிப்பு இயந்திரத்தை உள்நாட்டு வாகனத்தில் பொருத்தி கொடுப்பதாகத் தெரிவித்து இருந்தது.

ஒப்பந்தப்புள்ளி பரிசீலனையில் இருக்கும்போதோ, தங்களது தயாரிப்பு இயந்திரத்தையே சப்ளை செய்வதாகக் கூறியது.

இதுகுறித்து மாநகராட்சியின் திறனாய்வுக் குழுவில் கோவை நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளி நிராகரிக்கவும், அதற்கு அடுத்தாக குறைந்த புள்ளிகள் கோரியிருந்த புணே நிறுவனத்திடம் இயந்திரத்தை கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது என்றார்.

மறுடெண்டர் விட வேண்டும் என, மாநகராட்சி மன்ற மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் சி.பத்மநாபன் வலியுறுத்தினார். மாநகராட்சியின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் குழுத் தலைவர் புருஷோத்தமன் தெரிவித்தார்.

Last Updated on Friday, 19 February 2010 11:43
 

நகராட்சி மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை

Print PDF

தினமணி 19.02.2010

நகராட்சி மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை

விழுப்புரம்,பிப்.18: விழுப்புரம் நகராட்சி மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி தரம் மேம்படுத்தப்படும் என்று நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ் தெரிவித்தார்.

நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள இந்த மருத்துவமனையை நகர்மன்றத் தலைவர் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு செய்தார். அங்கிருந்த நோயாளிகளிடமும்,ஊழியர்களிடமும் மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது: நகராட்சி மருத்துவமனையை மேம்படுத்தும் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவையான உபகரணங்கள் உடனடியாக வழங்கப்படும்.

டாக்டர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது.அதற்கு அமைச்சரிடம் பேசி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின்போது ஆணையர் சிவக்குமார்,ஓவர்சீயர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்,உதவிப் பொறியாளர் லலிதா, சுகாதார ஆய்வாளர் பாபு, நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 19 February 2010 10:41
 


Page 204 of 238