Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

வரி வசூலிக்க புதிய வாகனம்

Print PDF

தினகரன் 13.01.2010

வரி வசூலிக்க புதிய வாகனம்

Swine Flu

சென்னை : மதுரை, திருநெல்வேலி, சென்னையில் உள்ள வணிக வரித் துறை அதிகாரிகளின் அலுவலக பணிகளுக்காக, ரூ.64 லட்சத்தில் 15 புதிய வாகனங்களை அரசு வழங்கியுள்ளது.

வாகனங்களின் சாவிகளை துணை முதல்வர் மு..ஸ்டாலின், தலைமை செயலகத்தில் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் வணிக வரித் துறை அமைச்சர் உபயதுல்லா, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி, வணிகவரித் துறை செயலர் ஜேக்கப், வணிகவரித் துறை ஆணையர் ஜெயக்கொடி பங்கேற்றனர்.

ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்ற 303 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணைகளையும் மு..ஸ்டாலின் வழங்கினார். ஆதி திராவிடர் நலத்துறை செயலர் விஸ்வநாத் ஷெகாவ்கர், ஆணையர் சிவசங்கரன், பழங்குடியினர் துறை இயக்குனர் ரவீந்திரன் உடன் இருந்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் 46 பேர் அருந்ததிய இனத்தவர்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்காக 1,367 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்து 45 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் கல்விக்காக ரூ.671.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 13 January 2010 07:04
 

திண்டுக்கல்லில் இருந்து கடையநல்லூருக்கு ராட்சத கொசு மருந்து தெளிப்பான் இன்று வருகை

Print PDF

தினமணி 11.01.2010

திண்டுக்கல்லில் இருந்து கடையநல்லூருக்கு ராட்சத கொசு மருந்து தெளிப்பான் இன்று வருகை

கடையநல்லூர், ஜன.10: கடையநல்லூரில் காய்ச்சலின் தீவிரத்தை தணிக்கும் வகையில் திங்கள்கிழமை முதல் ராட்சத புகை இயந்திரம் மூலம் கொசு மருந்து புகை அடிக்கப்படவுள்ளது இதற்காக திண்டுக்கல்லில் இருந்து இந்த இயந்திரம் தருவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நகராட்சி ஆணையர் அப்துல்லத்தீப் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடையநல்லூரில் பரவி வரும் காய்ச்சலைத் தடுக்கும் வகையில் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. மேலும், நகரை ஆறு பகுதிகளாகப் பிரித்து 20 தினக்கூலி பணியாளர்களின் மூலம் அபேட் மருந்து வீடு, வீடாகச் சென்று வழங்கப்படுகிறது. நடமாடும் மருத்துவக் குழு மூலம் நகராட்சிப் பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணாபுரம் மற்றும் பேட்டை பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 400 பேர்களிடமிருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், திண்டுக்கல்லில் இருந்து ராட்சத புகை இயந்திரம் கொண்டு வரப்படவுள்ளது. அதன் மூலம் நகரம் முழுவதும் திங்கள்கிழமை முதல் கொசுப் புகைஅடிக்கப்படவுள்ளது. எனவே, கொசுப் புகை வீடு முழுவதும் பரவும் வகையில் பொதுமக்கள் ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

Last Updated on Monday, 11 January 2010 07:10
 

புதிய பொறியியல் கல்லூரி கட்டடப் பணிகளை பார்வையிட்டார் ஆட்சியர்

Print PDF

தினமணி 11.01.2010

புதிய பொறியியல் கல்லூரி கட்டடப் பணிகளை பார்வையிட்டார் ஆட்சியர்

திண்டிவனம்
, ஜன. 10: திண்டிவனம் மேல்பாக்கம் பகுதியில் அமையவிருக்கும் அரசின் புதிய பொறியியல் கல்லூரியின் கட்டடத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

÷கட்டடப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.21 கோடியே 26 லட்சம் செலவில் இது கட்டப்பட்ட உள்ளது. வரும் கல்வி ஆண்டுக்குள் இப் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்தக்காரர்களை கேட்டுக்கொண்டார் ஆட்சியர். திண்டிவனம் வட்டாட்சியர் சீத்தாராமன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Last Updated on Monday, 11 January 2010 06:51
 


Page 213 of 238