Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ராமநாதபுரம் நகராட்சி அலுவலக புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா

Print PDF

தினமணி 14.11.2009

ராமநாதபுரம் நகராட்சி அலுவலக புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா

ராமநாதபுரம், நவ.13: ரூ. 50 லட்சம் மதிப்பில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகப் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் த..ஹரிஹரன் தலைமை வகித்தார். கே.ஹசன்அலி எம்.எல்., துணைத் தலைவர் ராஜாஉசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜி. லலிதகலா ரெத்தினம் வரவேற்றார்.

ரூ. 50 லட்சம் மதிப்பீட்டிலான நகராட்சி அலுவலகப் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டை தமிழக குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலன் திறந்து வைத்துப் பேசினார்.

விழாவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் து.இளங்கோ, நகராட்சி ஆணையர் கே.வி. பாலகிருஷ்ணன், திமுக நகர் செயலர் ஆர்.ஜி. ரெத்தினம், காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலர் துல்கீப், நகர் தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 14 November 2009 06:32
 

ஆலந்தூர் சாலை பாலம் டிசம்பரில் திறப்பு

Print PDF

தினமணி 14.11.2009

ஆலந்தூர் சாலை பாலம் டிசம்பரில் திறப்பு

சென்னை, நவ.13: ஆலந்தூர் சாலையில் அமைக்கப்பட்டு வரும் பாலம், டர்ன்புல்ஸ் சாலை -செனடாப் சாலை மேம்பாலம், ஜோன்ஸ் சாலையில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதை ஆகியவை டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலையில் கட்டப்பட்டு வரும் பாலப் பணியையும், ஜோன்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் வாகன சுரங்கப்பாதை பணியையும் மேயர் மா. சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை (நவ. 13) ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

மாநகராட்சி சார்பில் அடையாறு ஆற்றின் குறுக்கே ஆலந்தூர் சாலையில், தரைமட்ட பாலத்துக்குப் பதிலாக உயர்மட்ட பாலம் ரூ. 9.3 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. ஜோன்ஸ் சாலையில் ரூ. 8.89 கோடி செலவில் ரயில்வே சந்திப்புக்கு குறுக்கே வாகன சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இதுபோல் டர்ன்புல்ஸ் சாலை -செனடாப் சாலை மேம்பாலம் ரூ. 19.93 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த மூன்று பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு, டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட உள்ளது. துணை முதல்வர் மு.. ஸ்டாலின் அவற்றை திறந்து வைக்க உள்ளார் என்றார

Last Updated on Saturday, 14 November 2009 06:11
 

மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் ரூ.96 கோடியில் புதிய கட்டடம்

Print PDF

தினமணி 12.11.2009

மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் ரூ.96 கோடியில் புதிய கட்டடம்

திருப்பூர், நவ.12: திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ரூ.96 கோடி மதிப்பில் 650 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதை 3 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பூர் தாராபுரம் சாலையில் சுமார் 31 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் மாவட்ட அரசு மருத்துவமனை கட்டடம் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்துசெல்லும் இம்மருத்துவமனையில் குடிநீர் வசதி, போதுமான படுக்கைகள், இசிஜி, ஸ்கே ன் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் நீடிக்கிறது.

நோயாளிகள் வழியிலேயே படுத்து சிகிச்சை பெறுவதுடன், போதுமான ஊழியர்கள் இல்லாதாததால் குப்பைகள் நிறைந்து சுகாதாரமின்றியும் காணப்படுகிறது.

இது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.

இதையடுத்து, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் 650 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனைக் கட்டடம் கட்ட அரசு இசைவு தெரிவித்துடன் அதற்குரிய திட்டவரைவை அனுப்ப அறிவுறுத்தியது.

அதன்படி, புதியதாக அமைக்கப்படும் மருத்துவமனை கட்டடம் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அரசுக்கு திட்டவரைவு அனுப்பப்பட்டுள்ளது. அதில், முதல்கட்டமாக தரைதளம் மற்றும் 3 அடுக்குகளுடன் 17,199 .மீ. பரப்பில் கட்டப்படும் இக்கட்டடத்தின் தரைதளத்தில் 171, முதல் அடுக்கில் 148, 2வது அடுக்கில் 200, 3-வது அடுக்கில் 150 என 650 படுக்கை வசதிகள் செய்யப்படும்.

கொசுக்கள் புகாத நவீன ஜன்னல்கள், சுகாதாரமான குடிநீர் வசதிகள், தனியார் மருத்துவமனைக்கு நிகரான கட்டுமானங்கள், மருத்துவர்களுக்கான தனித்தனி அறைகள், பார்வையாளர்களுக்கான அறைகள், உணவகங்கள், டிஜிட்டல் திரை மூலம் உடனுக்குடன் அறியும் வசதிகள், சிறந்த வடிகால் வசதிகள், தீயணைப்பு கருவிகளுடன் இக் கட்டடம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுதவிர நிலநடுக்கத்தால் கட்டடம் பாதிக்கப்படாமல் இருக்க நவீன தொழிற்நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளது.

இக்கட்டடம் கட்ட 2009-10-ம் ஆண்டில் ரூ.29 கோடியும், 2010-11-ம் ஆண்டில் ரூ.31.90 கோடியும், 2011-12-ம் ஆண்டில் ரூ.35.09 கோடியும் என 3 தவணைகளில் ரூ.95.99 கோடிக்கான மதிப்பீடுகளுடன் வரைபடம் தயாரிக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி கட்டமைப்பு வசதிகளும், போதுமான ஊழியர்களும் அமையப் பெற்றால் திருப் பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளிக ள் உலகத் தரமான சிகிச்சைகள் பெற முடியும்.

Last Updated on Friday, 13 November 2009 09:31
 


Page 222 of 238