Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு 'சீல்'

Print PDF

தினமலர்         14.05.2010

அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு 'சீல்'

சென்னை : தி.நகர், உஸ்மான் சாலையில், வீடு கட்ட அனுமதி பெற்று முறைகேடாக கட்டப்பட்டிருந்த வணிக வளாகத்திற்கு சி.எம்.டி.., அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையில், வாகனம் நிறுத்தும் தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டு வதற்காக கலந்தர் என் பவர், 2008ம் ஆண்டு திட்ட அனுமதி கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் திடம் (சி.எம்.டி..,) விண்ணப்பித்தார்.சி.எம்.டி..,வும் அனுமதி அளித்தது. ஆனால், தரைதளம், மேல் இருதளங்கள், மூன்றாம் தளம் கொண்ட வணிக உபயோகத்திற்கான கட்டடத்தை கட்டி, கலந்தர் மதீனா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடையை நடத்தி வந்தார்.அத்துடன், தற்போதுள்ள கட்டடத்தை முறைப் படுத்தக் கோரி, திட்ட அனுமதிக்கும் சி.எம்.டி.., விடம் விண்ணப்பித்தார். ஆனால், சி.எம்.டி.., அனுமதி மறுத்தது.

இந்த கட்டடமானது வணிக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுவதால், கட்டட உபயோகத்தை நிறுத்தி, அதில் உள்ள பொருட்களை காலி செய்யும்படி சி.எம்.டி.., கட்டட உரிமையாளருக்கு கடிதம் மூலம் அறிவித்தது.இதற்கு பதிலளித்த அவர், 30 நாட்களில் வணிகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதாகவும், தரைதளத்தில் பக்கச்சுவர் களை இடித்து கட்டடத்தை மீண்டும் வாகனம் நிறுத்தும் தளம் மற்றும் இரண்டு தளங்களாக மாற்றுவதாகவும் உறுதியளித்திருந்தார்.ஆனால், அவ்வாறு செய்யாமல் தொடர்ந்து வணிக உபயோகம் நடந்து கொண்டிருந்தது.இந்நிலையில், நேற்று காலை சி.எம்.டி.., சீனி யர் பிளானர் பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் குழு வணிக வளாகத்தை பூட்டி சீல் வைத்தது.இக்கட்டட உரிமையாளர் குடியிருப்பு கட்டடத் திற்கு அனுமதி பெற்று அதை வணிக உபயோகத் திற்கு மாற்றியதுடன், கூடுதல் தளம், பக்க இடைவெளியின்மை, கட்டட உபயோகம் மாற்றம், அதிகமான தரைதள பரப்பு மற்றும் வாகனம் நிறுத்துமிடத்தில் விதிமீறல்கள் செய்யப்பட்டுள்ளதாக சி.எம்.டி.., உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.