Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சி பகுதிகளில் 1 மாத காலகெடுவிற்குள் பணி முடிக்காத ஒப்பந்ததாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Print PDF

தினகரன்  18.05.2010

பேரூராட்சி பகுதிகளில் 1 மாத காலகெடுவிற்குள் பணி முடிக்காத ஒப்பந்ததாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

தர்மபுரி, மே 18: பேரூராட்சி பகுதிகளில் கூடுதலாக வழங்கப்படும் 1 மாத காலக்கெடுவிற்குள் பணியை முடிக்காத ஒப்பந்ததாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று ஆட்சியர் அமுதா குறிப்பிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்ட பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களின் பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமுதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ஆட்சியர் அமுதா பேசியதாவது:

பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு தலைப்பிலான திட்டப்பணிகள் மற்றும் பேரூராட்சியின் பொதுநிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை ஓப்பந்த விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள காலகெடுவிற்குள் முடிக்காத ஒப்பந்தாரர்களுக்கு பணியை முடிப்பதற்கு கூடுதலாக ஒரு மாத காலம் அவகாசம் வழங்கலாம்.

ஒருமாத காலகெடுவிற்குள் பணியை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட வேண்டும். ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டு ஒருவார காலகெடுவிற்குள் பணி முடிக்கப்படவில்லையெனில் தினமும் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படவேண்டும். மேலும் காலதாமதமாக பணிமுடிக்கும் ஒப்பந்த தாரர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

கூட்டத்தில், தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ருக்குமணி, உதவி செயற்பொறியாளர் சுபாஷ் போஸ், இளநிலை பொறி யாளர் கிருபாகரன் மற்றும் தர்மபுரி மாவட்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்ட னர். ஆட்சியர் அறிவுறுத்தல்