Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.47 கோடி செலவில் மழை நீர் கால்வாய்

Print PDF

தினமலர்      15.05.2010

ரூ.47 கோடி செலவில் மழை நீர் கால்வாய்

சென்னை: ''திருவல்லிக்கேணி பகுதியில் மத்திய பக்கிங் காம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் 47 கோடி ரூபாய் செலவில் 35 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் கால்வாய் கட்டப் படும்,'' என்று மேயர் சுப்ரமணியன் கூறினார்.

ஜவகர்லால் நேரு நகர்ப் புற புனரமைப்பு திட்டத் தின் கீழ் 1,447 கோடியே 91 லட்ச ரூபாய் மதிப்பில் நகரில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒரு பகுதியான திருவல்லிக்கேணி, மத்திய பக்கிங்காம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதியில் மழை நீர் வடிகால் கால்வாய் கட்டும் பணியை மேயர் சுப்ரமணியன் நேற்று தொடங்கி வைத்து கூறியதாவது: நகரில் மழைகாலத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் வெள்ள தடுப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கொளத்தூர் பகுதியில் 25 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பில் 20 கிலோ மீட்டர் நீளத்திலும், வடக்கு பக்கிங்காம் கால் வாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் 20 கோடியே 50 லட்சம் மதிப்பில் 12.75 கி.மீ நீளத் திற்கும், வேளச்சேரி பகுதியில் 47 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பில் 32 கி.மீ நீளத்திலும் மழை நீர் வடிகால் கால்வாய் கட்டும் பணி தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

அதுபோல் மத்திய பக்கிங்காம் கால்வாய் நீர்ப் பிடிப்பு பகுதியில் 47 கோடியே 17 லட்ச ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 33.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால் வாய் கட்டப்படும். இந்த திட்டத்தால் திருவல்லிக்கேணி, நுங்கம் பாக்கம், மற்றும் அடையாறு மண்டலங்களை சேர்ந்த 24 வார்டுகள் பயன்பெறும். அதோடு திருவல்லிக் கேணி பகுதியில் மத்திய பக்கிங்காம் கால்வாய் ஏழு கி.மீ., நீளத்திற்கு 62 கோடி ரூபாய் மதிப்பில் தூர் எடுத்து ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும் வகை யில் கான்கிரீட் சுவர்கள் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை மேற் கொள்ள உள்ளது.

இந்த பகுதியில் மட்டும் 115 கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பில் மழை வெள்ள தடுப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை நகருக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க துணை முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள் ளார். கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்தில் 51 கோடி ரூபாய் மதிப்பில் கீழ் நிலை, மேல்நிலைத் தொட்டி கள் கட்டப்பட்டு வருகிறது. குடிநீர் வினியோகிக் கும் குழாய்களின் மீது இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் அகற்றப்பட்டு 21 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டது. இவ்வாறு மேயர் கூறினார். நிகழ்ச்சியில் மாநகர கமிஷனர் ராஜேஷ் லக் கானி, எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, பணிகள் நிலைக் குழு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் கவுன் சிலர்கள் பங்கேற்றனர்.