Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நான்கு ஆயிரம் சதுர அடிக்குள் கட்டுமான பணிக்கு திட்ட அனுமதி: ஊள்ளாட்சி நிர்வாகங்கள் நாளை முதல் அனுமதி

Print PDF

தினமலர் 30.06.2010

நான்கு ஆயிரம் சதுர அடிக்குள் கட்டுமான பணிக்கு திட்ட அனுமதி: ஊள்ளாட்சி நிர்வாகங்கள் நாளை முதல் அனுமதி

விருதுநகர்: தமிழகத்தில் சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக மற்ற அனைத்து பகுதிகளிலும் நான்கு குடியிருப்புகள் அல்லது 4,000 சதுர அடிக்குள் கட்டுமான பணிக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் நாளை முதல் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு நான்கு குடியிருப்புகள் அல்லது 4,000 சதுர அடியில் கட்டுமான பணிக்கு அனுமதி வழங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. "மாஸ்டர் பிளான்' அறிவிக்கப்படாத பகுதிகளில் அமைந்துள்ள உள்ளாட்சிகளில், உள்ளூர் திட்டக்குழுமம், புதுநகர் வளர்ச்சிக்குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து அனுமதிகளும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மாவட்ட நகராட்சி கட்டடவிதி 1972, தமிழ்நாடு ஊராட்சி கட்டட விதி 1997 முழுமைத்திட்ட விதி, விரிவு அபிவிருத்தி திட்ட விதி மனைப்பிரிவு நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்க வேண்டும். இதன்படி உள்ளாட்சிகளுக்கு, நான்கு குடியிருப்புகள் மற்றும் 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை தளம், இரண்டு தளங்கள் கொண்ட கட்டடங்கள். 2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் தரை தளம், மற்றும் முதல் தளம் கொண்ட வணிக கட்டடங்களுக்கு மனை ஒப்புதல் வழங்குதல். அனுமதியற்ற மனைப்பிரிவில் எவ்வித மனை ஒப்புதலோ, கட்டட அனுமதியோ அனுமதிக்கக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அதிகார வரம்பிற்குள் அனுமதி வழங்கப்பட்டு, அதே மனையில் கூடுதல் கட்டடம் கட்ட விண்ணப்பம் பெறப்பட்டால் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகார பரப்பிற்குள் இருந்தாலும் உள்ளாட்சியால் அனுமதி வழங்க இயலாது. இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உள்ளூர் திட்ட குழும அலுவலகத்திற்கு, மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது.