Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டட அனுமதிக்கு சிறப்பு பிரிவு துவக்கம்

Print PDF

தினகரன் 26.07.2010

கட்டட அனுமதிக்கு சிறப்பு பிரிவு துவக்கம்

கோவை, ஜூலை 26: கட்டட வரைவு அனுமதி வழங்கு வதை எளிதாக்க, மக்களுக்கு உதவ சிறப்பு பிரிவு துவக்கப்படும்.

கோவை மாநகராட்சியில் 4 ஆயிரம் சதுர அடி பரப்பி லான வீட்டு கட்டடங்களுக் கும், ஆயிரம் சதுர அடி பரப்பு வரை வணிக கட்டடத்திற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

கட்டட வரைவு அனுமதி பெறுவதில் பல்வேறு நடை முறை சிக்கல் இருக்கிறது. பல மாதங்களாக கட்டட வரைவு அனுமதிக்காக ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் காத்திருக்கிறது. சிலர் மாநகராட்சி அனுமதியின்றி கட்ட டம் கட்டி வருகின்றனர். இதனால், அனுமதியற்ற கட்டடங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இது மாநகராட்சிக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்துகிறது.

ஆட்டோ டிசிஆர் என்ற கட்டட வரைவு அனுமதிக் கான ஆன்லைன் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மாநகராட்சியில் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தவில்லை.

மாநகராட்சியின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மண்டலங்களில் கட்டட வரைவு அனுமதிக்கான விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட் டது. ஏழை மக்கள், தடையி ன்றி கட்டட வரைவு அனுமதி பெற புதிய திட்டத்தை மாநக ராட்சி தயாரித்துள்ளது. ஒரே நாளில் அனுமதி வழங்கும் வகையில் நடவடிக்கை எடு க்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், " நகரமைப்பு பிரிவின் ஒரு பகுதியில் பொது மக்களுக்கு கட்டட வரைவு அனுமதி வழங்க தனி பிரிவு ஒதுக்கப்படும். விரைவில் இந்த பிரிவு செயல்பாட்டிற்கு வரும். மண்டல அலுவலகங்களில் கட்டட வரைவு அனு மதி பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருக்கிறது. மாநகராட்சி உரிமம் பெற்ற சர்வேயர்களின் ஒப்புதல் பெறவேண்டும்.

கட்டட வரைவு அனுமதி பெறவேண்டியவர்கள், தங் கள் கட்டடம் தொடர்பான ஆவணங்களை கொண்டு வந்தால் போதும். உரிய கட்டணத்தில் கட்டட வரைவு அனுமதி வழங்கப்படும். இதற்கு சர்வேயர்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. மாநகராட்சி நகரமைப்பு பிரி வின் அதிகார எல்லைக்குள் உள்ள அளவு படி கட்டடத்திற்கு அனுமதி தரப்படும்.

அதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு உள்ளூர் திட்ட குழுமம் தான் அனுமதி வழங்கவேண்டும். மக்களை நேரிடையாக வரவழைத்து கட்டட வரைவு அனுமதி வழங்குவதன் மூலம் பிரச்னைகளை எளிதாக களைய முடியும். தாமதத்தை வெகு வாக தவிர்க்க முடியும், " என்றார்.