Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் வீடு கட்ட அனுமதி கிடையாது நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினகரன் 28.07.2010

அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் வீடு கட்ட அனுமதி கிடையாது நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

பெரம்பலூர், ஜூலை 28: அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி கிடையாது என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் இளையராஜா தலைமையில் நடந்தது. துணை தலைவர் முகுந்தன், ஆணையர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.

தமிழக அரசு அரசாணைப்படி பெரம்பலூர் நகராட்சியில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் வீடு கட்டுவதற்கு அனுமதி கிடையாது என்ற உத்தரவை அமல்படுத்துவது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2,000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு அனுமதி அளித்து வந்த நிலையில் 4,000 சதுர அடிவரை வீடு கட்ட அனுமதி அளிப்பது. 1000 சதுரஅடியில் அமைக்க அனுமதி கொண்ட வணிக வளாகங்கள் 2,000 சதுர அடியில் அமைத்து கொள்ள அனுமதி அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிராணிகள் பிறப்பு கட்டுப்பாடு திட்டத்திற்கு இந்திய அரசு விலங்குகள் நலவாழ்வு வாரியம் அங்கீகாரம் பெற்றுள்ள அரசுசாரா தொண்டு நிறுவனமான தஞ்சை யசோதா விலங்குகள் அறக்கட்டளை நிறுவனம் மூலம் பிராணிகள் பிறப்பு கட்டுப்பாடு, வெறிநாய்க்கடி தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிப்பது. நகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் தலைவர் மற்றும் தமிழ் அறிஞர்களின் பெயர்களில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு புதிய திட்ட மதிப்பீடு தயாரிப்பது. புது பஸ்ஸ்டான்ட் பகுதியில் மேற்கு மற்றும் கிழக்கு நுழைவு வாயில் பகுதிகளில் சாலை மற்றும் பாலத்தை ரூ.5.40 லட்சத்தில் அகலப்படுத்துவது. எஸ்பி அலுவலகம் அருகே ரூ.1.20 லட்சத்தில் சிறுபாலம் கட்டுவது. காமராஜர் வளைவு பகுதி எளம்பலூர் சாலையில் ரூ.5 லட்சத்தில் கான்கிரீட் தள விரிவாக்கப்பணி மேற்கொள்வது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சியின் 21 வார்டு பகுதிகளிலும் கொசு புகைமருந்து தெளிப்பது. ஒருங்கிணைந்த குடியிருப்பு குடிசை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடந்து வரும் பணிகளின் குடியிருப்பு தாரர்களான 580 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகராட்சி கவுன்சிலர்கள் பாரி, கனகராஜ், சரவணன், ரஹமத்துல்லா, கருணாநிதி, ஜெயக்குமார், ரமேஷ்பாண்டியன், ஈஸ்வரி, புவனேஷ்வரி, பொற்கொடி, கண்ணகி, சுசீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.