Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாமன்றம் 9ம் தேதி கூடுகிறது மாநகராட்சி எல்லை 148 ச.கி.மீ பரப்புக்கு விரிவாக்க முடிவு

Print PDF

தினகரன் 07.09.2010

மாமன்றம் 9ம் தேதி கூடுகிறது மாநகராட்சி எல்லை 148 .கி.மீ பரப்புக்கு விரிவாக்க முடிவு

மதுரை, செப். 7: மாநகராட்சி எல்லை 148 சதுர கி.மீ. பரப்புக்கு விரிவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகளை இணைத்து ஆணையிடக் கோரி வரும் 9ம் தேதி மாநகராட்சி மன்றம் அவசரமாகக் கூடி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்புகிறது.

மதுரை நகரம் 1971ல் மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. அப்போது 22 சதுர.கி.மீ. பரப்பளவில் இருந்தது. 1974ல் சுற்றி இருந்த 13 கிராமங்களை இணைத்து 52 சதுர கி.மீ. பரப்புக்கு மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் பிறகு விரிவாக்கம் செய்யப்படவில்லை. நகருக்குள் ஒரு ச.கி.மீ. பரப்பில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, மற்றும் திடக் கழிவு மேலாண்மை திட்ட சுகாதார வசதி போன்றவை மாநகரை ஒட்டி வளர்ச்சி அடைந்த பகுதிகளுக்கும் கிடைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 36 ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

எல்லை விரிவாக்கம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் தலைமையிலான குழு வரை படத்துடன் அறிக்கை தயாரித்து அரசிடம் சமர்ப்பித்தது. இதனை சென்னையில் நகராட்சி முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையாளர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து இறுதி வடிவம் அளித்தனர்.

தற்போதுள்ள 52 .கி.மீ. பரப்பை 148 .கி.மீ. பரப்புள்ள மாநகராட்சியாக விரிவாக்கம் செய்ய இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி மாநகராட்சியில் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகள் விவரம்:

நகராட்சிகள்:

ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம்.

பேரூராட்சிகள்:& ஆர்.வி.பட்டி, திருநகர், விளாங்குடி.

ஊராட்சிகள்:

மேலமடை, உத்தங்குடி, வண்டியூர், கண்ணநேந்தல், நாகனாகுளம், திருப்பாலை, சின்ன அனுப்பானடி, சிந்தாமணி, ஐராவதநல்லூர், புதுக்குளம் பிட்&2, தியாகராஜர் காலனி.

இந்த பகுதிகள் அனைத்தையும் இணைக்க மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்காக மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் சமர்பித்துள்ள குறிப்பு வரும் 9ம் தேதி அவசரமாக கூடும் மாநகராட்சி மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது. இது உடனடியாக சென்னைக்கு அனுப்பப்படுகிறது. அங்கு வரும் 13ம் தேதி நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் தலைமையில் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

இதை அடுத்து இதே 148 .கி.மீ. பரப்புக்கு மாநகர் காவல்துறை ஆணையாளர் நிர்வாக எல்லையும் விரிவாக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.