Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: நிறைவேறியது தீர்மானம்

Print PDF

தினமலர் 13.09.2010

மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: நிறைவேறியது தீர்மானம்

மதுரை: மதுரை மாநகராட்சியை விரிவாக்கும் திட்டம், நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. நகரைச் சுற்றி, புதிதாக சேர்க்க வேண்டிய பகுதிகளை பட்டியலிட்டு, நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில், தீர்மானமாக மாநகராட்சி கொண்டு வந்தது. தீர்மானத்தில் கூறப்பட்டிருந்ததாவது: தற்போதைய மாநகராட்சி எல்லையின் பரப்பளவு 51.82 .கி.மீ., பாதாள சாக்கடை, குடிநீர், சாலை, தெரு விளக்கு, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்களை எல்லையை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கிடைக்க செய்திட வேண்டும். இதற்காக ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய நகராட்சிகள், ஹார்விபட்டி, திருநகர், விளாங்குடி ஆகிய பேரூராட்சிகள், மேலமடை, உத்தங்குடி, வண்டியூர், கண்ணனேந்தல், நாகனாகுளம், திருப்பாலை, சின்ன அனுப்பானடி, சிந்தாமணி, ஐராவதநல்லூர், புதுக்குளம் பிட்-2, தியாகராஜர் காலனி ஆகிய ஊராட்சிகளையும் இணைத்து, 147.997 .கி.மீ., பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்ய அரசை கோருவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.